Posts

Showing posts from August, 2021

யார் நீதிமான்?😊

Image
கிறிஸ்து இயேசுவின் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,இயேசப்பாவின் சமாதானமும் இரக்கமும் உங்கள் அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக-ஆமென் இன்றைய தலைப்பு சற்று வித்தியாசமானது என்றே சொல்லலாம் காரணம் இவற்றை நடைமுறை படுத்துவது சற்று கடினமான காரியம்,ஆனால் கவலை வேண்டாம் நம்மை நன்மையின் பாதையில் நம் கர்த்தாதி கர்த்தர் நடத்தி செல்வார், நீதிமான்-இந்த சொல் யாரை குறிக்கும்,எவன் ஒருவன் நீதியான காரியங்களை செய்கிறானோ  அவனே நீதிமான்,அல்லது நீதியை நிலை பெறசெய்பவன் என்று விளக்கம் தரலாம் அவ்வாறு விளக்குவோமேயானால் எது நீதி என்ற கேள்வியும் எழும்பும் அல்லவா,இந்த இரண்டு காரியங்களையும் ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் இந்த பதிவில் காணலாம். எது நீதி?: பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் நீதியை நிலைநாட்ட மனதிற்குள் எண்ணம் கொள்ளும் ஆனால் அதை நடைமுறைபடுத்த பெரிதும் தயங்கும்,இந்த வகையில் பார்போமேயானால் ' நீதி' என்பது இந்த சூழலில் மாயை,நம் தேவனுக்கு முன் நீதி என்று வேதம் எதை கூறுகிறது என்று பார்கலாமா ' அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.' ஆதியாகமம் 15:6 இதில் அந்த அவன் என்ற...

பாவமும்,அடிமைத்தனமும்☠

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளே...கிறிஸ்துவே தேவன் என்றுணர்ந்த தேவபிள்ளைகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். கிறிஸ்தவன் மட்டும் அல்ல,உலகில் மனிதனாய் பிறந்து,தான் மனிதன் தான் என்ற உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டிய தலைப்பைதான் உங்களிடம் எடுத்து வந்துள்ளேன்,தலைப்பை படித்த பின்புதான் கடந்து வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்,சரி 'பாவம்' என்றால் என்ன? கவலைபடாதீர்கள் கண்டிப்பாக நாம் அதைத்தான் சுருக்கமாக பார்க்கபோகிறோம்,இதை தொடர்ந்து படிக்கும் முன்னால் பாவத்தை பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்,செய்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். பாவம்-ஆண்டவரோடு நாம் கொண்டுள்ள உறவில் விரிசல் உண்டாக்கும் காரியம்,அது சிறியதோ,பெரியதோ  தேவன் மனதை துக்கப்படுத்துமேயானால் அது 'பாவம்'. சுருக்கமாக சொன்னால் "தேவ சித்தத்திற்கு புறம்பாக நாம் செய்யும் எந்த காரியமும் பாவமே!" சரி பாவம் செய்த,அல்லது செய்யும் நாம் நாமாக இவைகளை செய்வதில்லை என்கிறது வேதாகமம், "எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான்...

இரட்சிக்கும் விசுவாசம்👦

Image
கிறிஸ்து இயேசுவின் பிரியமான எனதருமை சகோதர,சகோதரிகளே...இயேசப்பாவின் இனிமையான நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்களும்,சமாதானமும்! நீங்கள் எனக்காக ஏறெடுக்கும் ஜெபம்,ஆவியானவரோடு என்னை அதிகமாய் உறவாட செய்கிறது,வாசகர்களாக இதை தொடர்ந்து வாசித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு என் நன்றிகள். ஜெபத்தில் விசுவாசம் எவ்வளவு முக்கியம் என்பதை நேற்றைய தலைப்பில் தியனித்தோம் அல்லவா,அதின் தொடர்ச்சியாக 'இரட்சிக்கும் விசுவாசம்'என்னும் தலைப்பில் இன்று தியனிப்போம்,      விசுவாசம் இரட்சிக்குமா?நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் ,நாம் நினைப்பது ஒரு புறம் இருக்கட்டும்,வேதம் என்ன சொல்கிறது என்றால் விசுவாசம்-இரட்சிக்கும்,விசுவாசம்-விடுதலையாக்கும்,விசுவாசம்-தேவனோடு நம்மை ஒப்பரவாக்கும்,அவருடைய பிள்ளைகள் ஆகும் சிலாக்கியத்தை நமக்கு அளிக்கும்,விசுவாசம்-கிறிஸ்துவை பின்பற்றும் பாதையில்..சாத்தானை எதிர்த்து நிற்க உதவும் ஒரு கேடகம்,வியப்பாக இருக்குதா....இருக்கதான் செய்யும்,ஏன் தெரியுமா? "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசு...

விசுவாசமும்,ஜெபமும்😇

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமும்,அன்பும் நிறைந்த சகோதர-சகோதரிகளே...கிருபையே உருவான நம் ஆண்டவர் இயேசுவின் சமாதானம் உங்கள் அனைவர் கூடவும் என்றென்றும் இருப்பதாக -ஆமென் ஒரு விசுவாசியாக,சர்வ வல்ல தேவனை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு...அவரது கல்வாரி பலியின் மேன்மையையும்,இரட்சிப்பின் சந்தோசத்தையும் உணர்ந்த நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் இன்றியமையாத ஒன்று,இந்த ஜெபத்திற்கும் தேவன் மேல் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது. வேதத்தின் பல பகுதியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விசுவாசத்தின் மேன்மையை போதித்திருப்பதை காணலாம், "இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்." மாற்கு 11:22 இயேசப்பா,தான் வாழ்ந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த அற்புதங்கள்,நமக்கு போதித்தவைகளில் பெரும்பாலானவைகள் தேவன் பெயரில் பற்றும் விசுவாசமே! "ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." மாற்கு 11:24 கிரியை அற்ற விசுவாசமும் சரி,அதாவது...

யார் கிறிஸ்தவன்,எது மெய்யான கிறிஸ்தவம்?🙂

Image
கிறிஸ்து இயேசுவின் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளே...உங்கள் ஜெப வாழ்வும்,விசுவாச வாழ்வும் கர்த்தருக்குள் இன்னும் அதிகமாய் வளர்ச்சியடைய தேவனை பிரத்திக்கின்றேன். கிறிஸ்தவம் மத மாற்றத்தை பற்றிய போதனை இல்லை என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்,உங்களுக்கு அது பயனுள்ளதாகவும் புரிந்துகொள்ள எளிமையாகவும் இருந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன்,சரி இன்றைய தினத்தில் கிறிஸ்தவ வாழ்வு எப்படிப்பட்டது,யார் கிறிஸ்தவன் என்ற சில கேள்விக்கு,வேத சத்தியத்துடன் விளக்கங்களை பார்ப்போம். கிறிஸ்தவன்- அதாவது கிறிஸ்துவாகிய இயேசுவை அறிந்தவன்,அவரை உடையவன்,அவரை எடுத்துரைப்பவன் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்,இதையே வேதமும் உறுதிப்படுத்துகிறது. ' தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.' ரோமர் 8:9 முதலாவது,கிறிஸ்தவன் என்று தன்னை சொல்பவனிடம் தேவனின் பரிசுத்த ஆவி வாசமாயிருத்தல் அவசியம்;இரண்டாவது அவன் செய்கைகள் மாம்சத்துக்கு ஏதுவாக இல்லாமல்...ஆவிக்குரிய கனிகளுடன் வெளிப்படல் வேண்டும்,இவ்வாறான காரியங்க...

மனமாற்றமே பிரதானம்☺

Image
கிறிஸ்து இயேசுவின் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,விசுவாசமுள்ள தேவப்பிள்ளைகளே,கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்,எனக்காக நீங்கள் செய்கின்ற ஜெபம் கிறிஸ்துவுக்குள் என்னை இன்னும் ஆழமாய் வேரூன்ற செய்கிறது,அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.....என் நண்பர் ஒருவர்,அவர் கிறிஸ்துவை அறியாத சகோதரர் அவர் இவ்வாறக கிறிஸ்தவத்தை விமர்சித்தார், "நீங்கள் அனைவரும் மதவாதிகள் தானே! இந்தியா பாரம்பரியத்தை மாற்றும் வகையில் ' மதம்' மாற்றும் கூட்டம் தானே" என்று,இது நான் அவரோடு கிறிஸ்துவை பற்றி அறிவிக்கையில் கூறியது,நம்மில் பலரும் இதுபோன்ற விமர்சனங்களை கேட்டிருப்போம்,இவ்வாறு இவர்களை சிந்திக்க வைத்தது யார்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது,அதின் விளைவே இந்த பதிவு.....நிஜத்தில் இயேசு மத மாற்றத்தை விரும்பும் தேவனா? இந்த சிந்தனைகள் எதனால் உண்டானவை,சிலர் செய்த தவறால்,ஆசீர்வாதம் பேர கிறிஸ்தவன் ஆகவேண்டும் என்ற வேதத்திற்கு மாறுபாடான போதனை இதன் விளைவே இந்த அவல நிலை,இயேசப்பா ஒருபோதும் அவ்வாறு கூறவில்லையே,என் ஆசீர்வாதம் கிறிஸ்தவனுக்கே என்ற அவர் கூறவும் மாட்டார்.இதற்கு முதலில் யார் கிறிஸ...

விசுவாசத்தின் மேன்மை😇

Image
கிறிஸ்து இயேசுவின் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே,இம்மட்டும் நம்மை கிருபையாய் நடத்திய இயேசப்பா இனியும் நடத்த வல்லவராய் இருக்கிறார்,அவரே நம் உயர்ந்த அடைக்கலமும்,நம்பத்தக்க பரமதகப்பனும் ஆவார்-ஆமென் கிறிஸ்தவ வாழ்கை என்பதின் அடிப்படை வேர் 'விசுவாசம்' இன்றியமையாத இந்த விசுவாச வாழ்கையில் கிறிஸ்துவையும் அவர்மேல் நாம் கொண்ட விசுவாசமும் ஒருபோதும் மறக்கூடாது,இதைத்தான் நம் ஆண்டவர் சிலுவை மரண மட்டும் கற்றுத் தந்தார்,ஆனால் நம் வாழ்வில் தற்போதைய நிலை என்ன? ஆதி திருச்சபையில் இருந்து,அருளடையாலங்கள் நிகழ செய்த அந்த ஆணித்தரமான அடிப்படை விசுவாசம் எங்கே....நம்மிடம் இயேசு மலைப்போன்ற விசுவாசத்தை எதிர்பார்க்கவில்லையே,துளியும் சந்தேகம் அற்ற கடுகளவு விசுவாசம் தான் எதிர்பார்க்கிறர்,அது நம்மிடம் இருக்கிறதா சற்று நிதானிப்போம். 'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.' எபிரேயர் 11:1 இவ்வாறு வேதம் விசுவாசத்தை விவரிக்கிறது, நாம் கிறிஸ்துவை காணவில்லை என்றாலும் ஆவியானவர் தரும் உறுதியினாலும்,வேதவசனத்தின் சாட்சியாலும் நமது விசுவாசம் நிலைத்திருக்கிறது,...

கண்டித்து உணர்த்துவார்🤓

Image
கிறிஸ்து இயேசுவின் அன்பின் மழையில் அன்றாடம் நனைந்து,அவரது அரவணைப்பில் மகிழும் அன்பு சகோதரனே,சகோதரியே....உலக இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் சமாதானமும்,சந்தோசமும் உண்டாவதாக- ஆமென் என் பதிவுகளை அன்றாடம் வாசித்து எனக்கு பெரிதும் பக்க பலமாக இருக்கும் எனதருமை நண்பர்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,தேவன் உங்கள் காரியங்களை வாய்கப்பன்னுவாராக,எனது ஜெபம் என்றும் உங்களுக்காக இருக்கும். இன்றைய தலைப்புடன் இந்த தொடர் நிறைவடைகிறது,வேறொரு தலைப்புடன் நாளை தியனிப்போம்,சரி வாருங்கள் தலைப்புக்குள் செல்வோம்.  கண்டிப்பார்;உணர்த்துவார்: ஆவியானவர் நமக்கு ஒரு நல்ல தோழன்,நாம் தவறு செய்கையில் நம்மை தட்டிக்கொடுப்பவன்,நமக்கு நண்பன் போன்று தோன்றினாலும் அவன்தான் நமக்கு மிக பெரிய சத்ரு,நாம் தேவ சித்தத்திலிருந்து விலகி கேட்டுக்கு நேரான வழியில் பாதாளம் செல்ல சாத்தான் வைத்த கண்ணிதான் அத்தகைய ஆலோசனை,இவ்வாறு நாம் பலமுறை தவறும்போது நம்மை நேர்வழி படுத்துவதே ஆவியானவர் நமக்குள் இருப்பதின் தலையாய நோக்கம். "அவர் (ஆவியானவர்)வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்...

💪🏻பெலப்படுத்துவார்😎

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர,சகோதரிகளே...இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.ஜெபம் செய்வதில் கருத்தாய் இருங்கள்,கடைசி காலம் ஆதலால் வஞ்சிக்கபடாதபடிக்கு விழிப்புடன் இருங்கள்,நம்மை பிசாசின் வஞ்சக வலையில் சிக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்,சரி நாம் முதலாவது இன்றைய தினத்தின் தலைப்பு குறித்து சற்று கவணிப்போமா?  பெலப்படுத்துவார்: நாம் சரிர பிரகாரமாக பலவான்கள் என்றாலும் அந்த பெலனை மட்டுமே கொண்டு சாத்தானையும் அவன் தந்திரங்களையும் எதிர்த்துவிட முடியாது,பல சமயங்களில் நாம் பலவகையில் சரிரபிரகாரமோ அல்லது ஆவிக்குரிய வாழ்கையிலும் பலவீனம் அடைவதுண்டு....கவலை படாதிருங்கள் உங்களை தேற்றவே ஆவியானவர் விரும்புகிறார். ' பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். ' அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வரும்பொழுது பலவீனம் மாறிப்போகும்,சூழ்நிலை சாதகமாக மாறும்,அந்த பலம் உலகபலம் அல்ல,தெய்வீக பலம்,அந்த பலம் நம்மில் குடிக்கொண்டால் நம...

சீர்படுத்துவார்😊

Image
கிறிஸ்து இயேசுவின் அன்பான தேவ பிள்ளைகளே,அருமை இரட்சகராம் இயேசு நாமத்தில் உங்களை உற்சாகத்துடன் வரவேற்கிறேன்,இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட ஒரு தலைப்பை பொதுவாக வைத்து அதின் சில பரிமாணங்களை தியானிப்போம் 'பரிசுத்த ஆவியானவர் யார் என்பது உங்களுக்கு தெரியும் என்று விசுவாசிக்கிறேன்,அவர் நம்மில் பல கிரியைகளை ஆற்றுகிறார் என்பதும் தெரிந்த ஒரு வேதாகம சத்தியம்,அந்த கிரியைகளை ஒவ்வொன்றாய் பின்வரும் நாட்களில் தியனிப்போம்,ஆவியானவர் யார் என்ற விளக்கம் தேவைப்பட்டால் உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்,அதற்கான பதிவை நான் தயார் செய்து வேத சத்தியத்துடன் வெளியிடுகிறேன்,சரி இன்று நாம் ஒரு கிரியை பற்றி பார்க்கலாம், சீர்படுத்துதல்: 'பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். ' ஆதியாகமம் 1:2 ஆம்,எனதருமை சகோதர சகோதரிகளே...ஒழுங்கின்மை ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் ஆவியானவர் அசைவு இருக்குமேயானால் அது ஒழுங்கு பெறும், வெறுமை நம்மை ஆட்கொண்டு நம்மை பிறர் பயனற்ற பாத்திரம் என்று தூற்றும் வேலையில் ஆவியானவர் அசைவா...

அதிகாரம் பெற்றவர்கள்😏

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,நாள்தோறும் நம்மை திருப்தியாக குறைவின்றி வழிநடத்திச் வருகின்ற இயேசப்பாக்கு நன்றி செலுத்துவோம்,ஆப்கானிஸ்தான் தேசத்தில் நிகழும் கசப்பான மற்றும் கடுமையான சூழல்காக பாரத்தோடு ஜெபிபபோம் என்ற அன்பான வேண்டுகோளுடன் தலைப்புக்குள் செல்லலாம்.  அதிகாரம் என்பது என்ன? எளிமையான விளக்கம் என்று பார்த்தால் நம் அதிகாரத்திற்கு உட்பட்ட யாவும் நமக்கு கீழ்வுள்ளவை என்று அர்த்தம் கொள்ளலாம் சரியா நமக்கு இயேசப்பா சில அதிகாரங்களை கொடுத்துருகாங்க அது என்னனு பாக்கலாமா,  ' அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்'. மத்தேயு 10:1 கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டவர்களா நீங்கள்,உங்களுக்கும் எனக்கும் தான் இந்த அதிகாரம்....இயேசப்பா நாமத்திலே இவற்றை நாம் செய்யலாம்,இதிலிருந்து ஒரு விசயம் புலப்படுகிறது,அசுத்த ஆவிகளுக்கும்,சாத்தானுக்கும் நம்மேல் அதிகாரம் இல்லை,எனவே தேவ வசனம் என்னும் பட்டயத்துடன் அவனை எதிர்த்து நில்லுங்கள் நிச்சயம் சாத்தான் நடுநடுங்கி போவான்,நமக்கு இயேசப்பா இன்னும் ஒர...

வாழும் சாட்சிகள்🙄

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே எனது பதிவுகளை அன்றாடம் வாசிக்கும் அனபிற்குரிய வாசகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,இன்றைய பதிவில் கிறிஸ்தவ வாழ்க்கை எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற சில காரியங்களை வேதத்தின் உதவியுடன் சுருக்கமாக தியனிப்போம். முதலாவது:உடை மற்றும் ஒப்பனை  " எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்." 1 கொரிந்தியர் 6:12 பவுல் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்று சிந்திப்போமானால் நாம் உலகிற்கு உரியவர்கள் அல்ல என்பதே காரணம்,நாம் கிறிஸ்துவின் சாயிலை தரித்தவர்கள்,'உலகிற்கு ஒத்த வேஷம் தரிகாதே' என்று வேதாகமம் நம்மை கண்டிக்கிறது ,நாம் அணியும் ஆடையோ,ஆபரணமோ கிறிஸ்தவன் அல்லாத ஒருவரை இடறலடைய செய்யும் என்றால் அது நமக்கு தகுதியற்றதே! இரண்டாவது:செய்கைகள் "அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள...

மேலானவைகளை நாடுங்கள்😎

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,அருமை இரட்சகராம் இயேசு நாமத்தில் உங்களுக்கு சமாதானமும்,மன மகிழ்ச்சியும் உண்டாவதாக- ஆமென் இன்றைய தினம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்,குடிமகள்க்கும் மிகவும் சிறப்புவாய்ந்த நாள்,இனிய 75 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்,நண்பர்களே....நம் நாடு பேரளவில் சுதந்திரம் பெற்றிக்கிறதே அன்றி இன்றும் பல அடிமைதனம் இன்றும் நம்மை வதைக்கிறது,செல் போன் மோகம்,ஏழை பணக்காரன் வேற்றுமை,சாதி மத கொடுமை என சொல்லிக்கொண்டே போகலாம் இதற்காக ஜெபிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை,அதைத்தான் ஆண்டவரும் விரும்புகிறார். இரட்சிப்பின் அனுபவம் பெற்று பரிசுத்த இரத்தத்தால் பாவம் நீங்க கழுவப்பட்ட நாம் அனைவருமே இயேசப்பாவோட செல்ல பிள்ளைகள் அப்படி இருக்க,இந்த உலகில் இருக்கும் அழிந்துபோகும் அற்ப பொருட்களின் பின் நாம் செல்லலாம,சற்று யோசிப்போம்...வேதம் இவ்வாறு கூறும்: 'பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.'  கொலோசெயர் 3:2 பூமியில் நிலையானதொன்றும் இல்லை,ஆனால் நமக்கென்று நித்தியமான பொக்கிஷம் பரத்தில் உண்டு,அது என்றும் நிலைத்திருக்கும்,எனவே தேவைக்கு மிஞ்சிய பொருளாசை ...

குணமாக்கும் தழும்புகள்🤗

Image
கிறிஸ்து இயேசுவின் எனதருமை சகோதர சகோதரிகளே,நாள்தோறும் ஒரு தலைப்பின் மூலமாக இயேசுவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமை படுவதாக. இன்றைய தலைப்பு நமக்காக இயேசுவானவர் செய்த தியாகத்தை பற்றியது,அவர் நமக்காய் அடிக்கப்பட்டதும் கைகளிலும்,கால்களிலும் ஆணியை ஏற்றுக்கொண்டதும் நமக்கு தெரிந்தவையே,காயம் ஆரியப்பின்தான் தழும்பு ஏற்படும்,வேதம் இவ்வாறாக கூறுகிறது: " நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்." 1 பேதுரு 2:24 அவர் மரணத்தை ஏற்றுகொள்ளவும்,பரலோக மகிமை துறந்து தரித்திராய் இந்த பாவ பூமிக்கு வந்ததின் நோக்கம் இதுதான் நாம் பாவமற்றவர்கள் ஆக அவர் தன் மீது அதை சுமந்து பாவமாக என்னப்பட்டு கோரமாய் அவமான சின்னமான சிலுவையில் உடைத்து தொங்கவிடப்பட்டார்,அவரது தழும்புகளால் இன்றும் நம் பாவம் நீங்கி சுகமானோம் ,இதை எத்தனை பேர் விசுவாசிக்க ஆயத்தமாக உள்ளீர்கள் ,நீங்கள் அப்படிப்பட்ட விசுவாசத்துடன் இன்று ஜெபம் செய்பவரா அவர்...

மரணம் மரித்தது🤔

Image
கிறிஸ்து இயேசுவின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனதருமை தேவப் பிள்ளைகளே,உலக இரட்சகராம் இயேசு நாமத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக. வேதம் இவ்வாறாக கூறுகிறது:    'மரணமே உன் கூர் எங்கே,பாதாளமே உன் ஜெயம் எங்கே' ஆதியிலே தேவன் உலகை படைத்தபோது மனிதனை சிரஞ்ஜிவியாகதான் படைத்தார் அதாவது மரணத்தின் கூர் அப்போது இல்லை,பின் ஆதி பெற்றோரின் கீழ்படியாமையின் விளைவாக,மரணம் நம்மை ஆட்கொண்டது,அதைதான் ரோமர்க்கு எழுதிய நிருபத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,'பாலத்தின் சம்பளம் மரணம்' ஆனால் இவ்வுலகில் தேவன் கொண்ட கிருபையால் நமக்கு இரண்டாம் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இது அனைவருக்கும் பொதுவாக கிடைக்காமல் விசுவாசம் உள்ளோர்கே கிடைத்தது,..புரியவில்லையா?.. நம் ஆண்டவர் ஒருவரின் கீழஜபடிதலால்,கீழ்படியாதலில் தலை தூக்கிய பாலத்தின் கூர் ஜெயமாக விழுங்கப்பட்டது,பாதாளத்தின் வாசல் என்றும் மேற்கொள்ளாதவாறு அந்த கிருபை நம்மை இரட்சித்தது அதுதான் கல்வாரி தியாகம்,சகல பாவமும் அந்த பார சிலுவையில் இயேசுவின் இரத்தத்தால் நீக்கப்பட்டது,முலு மனதோடு இதை ஏற்றுகொள்வோர்க்கு மரணம் தங்கள் வாழ்க்கையின் பரிசுத்...

புது வாழ்வு தந்துவிட்டார்😊

Image
கிறிஸ்து இயேசுவின் பிரியமான தேவ பிள்ளைகளே,உங்களை இந்த கட்டுரைக்குள் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி,புது வாழ்வு என்ற இந்த தலைப்பு ஆழமான அர்த்தம் உடையது. பாவம் செய்த அல்லது செய்யும் யாவரும் பிசாசானவனால் உண்டானவன் என்கிறது வேதம்,அந்த பாவ வாழ்விற்கு சிலுவையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது,இதை முழு மனதோடு விசுவாசித்து ஏற்றுகொண்ட ஒருவனும் கெட்டுபோகாமல் இரட்சிப்பை பெற்று கொள்வோம்,உங்களுக்குள் சந்தேகம் எழும்பலாம் அதெப்படி என் பாவம் மன்னிக்கபட்டது என்று அறிவது என்று,அது ஒரு அனுபவம் அந்த இரட்சிபின் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை.....நம்ம இயேசப்ப நம்ம பாவத்த கிழக்கிற்கும்,மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் மன்னிப்பாங்களாம் உங்களால் கூற முடியுமா கிழக்கிலிருந்து மேற்கு எவ்வளவு தூரம் என்று,முடியாதல்லவா நம் பாவத்தின் வேர் சிலுவையில் முறிக்கப்பட்டது,அவர் சிந்திய பரிசுத்த இரத்தம் பாவமற நம்மை கழுவியது,அவரது ஆணி பாய்ந்த கரம் நம்மை தழுவா காத்திருகிறது,நம்மில் எத்தனை பேர் ஆயத்தமாக இருக்கிங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டு ஒப்புரவாக....மீண்டும் பாவத்தில் விழுந்துவிடுவோம் என்ற பயம் வேண...

பந்தயப் பொருள்🏃🏃

Image
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான எனதருமை சகோதர,சகோதரிகளே..உலக இரட்சகராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். இன்றைய தியானத்தில் நாம் பார்கவிருக்கும் தலைப்பு 'பந்தயப் பொருள்' பொதுவாக நாம் யாவருக்கும் ஏதாவது ஒரு பந்தயத்தில் பங்குபெற்று வெற்றியின் கனியை சுவைக்கும் ஆசை இருக்கும்,சிலர் சுவைத்தும் இருப்பீர்கள்,மிக்க மகிழ்ச்சி! இங்கு வேதத்திலும் ஒரு பந்தயம் குறிப்பிடப்பட்டுள்ளது,ஆனால் இங்கு பரிசு பொருள் தங்கமோ,வெள்ளியோ,வைரமோ அல்ல;அதற்கும் மேலான ஒன்று,அப்படி என்ன அது என்று கேட்கிறிர்களா சரி தொடர்ந்து படியுங்கள் சொல்கிறேன். 'கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ' பிலிப்பியர் 3:14 இதுவே அந்த பந்தயம்,பரம அழைப்பு பெற்ற நாம் அனைவருமே இதில் ஓடுகிறோம்,பொதுவாக பந்தயம் எளிதில் இருக்காது இங்கு நாம் ஓடுவது நித்திய ஜிவனை சுதந்தரித்து கொள்ள எனவே தடைகள் பல உண்டு,  'என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ' மாற்கு 13:1...

ஆவியின் வரங்கள்😇

Image
கிறிஸ்துவில் பியமான அன்பு சகோதர  சகோதரிகளே,இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்,ஆவியின் வரங்கள் ஆயிரம் ஆயிரம்,அவை கணக்கில் அடங்காதவை ஆனால் குறிப்பிட்ட சில முக்கிய வரங்களை வேதம் நமக்கு காண்பிக்கிறது,அவைகளின் தனித்தன்மைகளை சற்று சுருக்கமாக இன்று தியானிக்கலாம்,ஆவியானவர் நம்மை வழிநடத்துவாராக. 1.நவமான மொழிகள்(அந்நிய பாஷை ): '  நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; ' மாற்கு 16:17  'அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். ' அப்போஸ்தலர் 2:4 நாம் அடிப்படை விசுவாசிகளாய் ஆவியானவரால் கிறிஸ்துவுக்குள் முத்திரை போடப்படுகையில் நமக்கு கிடைக்கும் வரமே அந்நிய பாஷையில் தேவனை ஆராதிக்கும் வரம்,இது கிறிஸ்தவர்  என்பதற்கான வரமல்ல விசுவாசிகள் என்பதை காட்டும் ஒரு அடிப்படை வரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2.விவரிக்கும் வரம்: "நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;  அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுக...

மன அழுத்தத்துடன் போராட்டமா?

Image
மாகா அன்பும்,கிருபையும் நிறைந்த இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு சமாதனம் உண்டாவதாக,கிறிஸ்துவின் அன்பு தேவ பிள்ளைகளே,இன்றைய தலைப்பானது உங்களுக்கும் சரி எனக்கும் சரி,வயது வரம்பு இன்றி யாவராலும் சந்திக்கப்படும் ஒரு பிரச்னைதான்,'மன அழுத்தம்' இது பலத்தரப்பட்ட காரணங்களால் வரலாம் சிலருக்கு எதிர்காலம் குறித்தான கவலை,சிலருக்கு வேலையின்மை என சொல்லிக்கொண்டே போகலாம்,பல நாட்களாக ஒரு கவலை நம்மை வாட்டுமானால் நாம் நாளடைவில் மன நோயலிகள் ,இதிலிருந்து விடுபட வேதம் சில வழிகளை காட்டுகிறது அதை ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் கண்டடைவோம். முதலில் இயேசுக்கும் இந்த மன அழுத்தம் இருந்தது ,எத்தனை பேர் ஆமோதிப்பிர்கள்...ஆம் தன் மேல் விழுந்த மீட்பின் பணி குறித்த மிகவும் மன கலக்கம் உற்றார் பின் ஏன் அவை அவரை மேற்கொள்ளவில்லை,காரணம் தேவனோடு உண்டான உறவு,நம்மில் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாக காரணம் நம்மை தனிமை படுத்திக்கொள்ளுதல்  'பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல ' ஆதியாகமம் 2:18 நாம் ஒருவகை சமூக விலங்கு,தனிமை நம் சுபாவம் அல்ல ஆகவே முதல் வழி தனிமையை தவிர்க்கவும்,தேவனோடு தனித்...

இயேசுவே முன்மாதிரி👍

Image
இயேசு கிறிஸ்துவின் பிரியமான சகோதர,சகோதரிகளே...இயேசுவின் மேலான நாமத்தில் உங்களை வாழ்த்தி தலைப்புக்குள் கடந்து செல்கிறேன் . இயேசு ஏன் மனுவாக இம்மண்ணில் தோன்ற வேண்டும்,வாக்குதத்தங்களை நிறைவேற்ற மட்டுமா என்று பார்த்தால் இல்லை,அதற்கு மட்டுமே என்றால் தேவ மகிமையிலிருந்து இரங்கி,பாவத்திற்குரிய இந்த சரிரத்தை சுமக்கவேண்டி இல்லை,மனிதன் பொதுவாக அனைத்து தவறுக்கும் காரணம் சொல்லி பழக்கப்பட்டவன்....இது இன்று நேற்று அல்ல ஆதி பெற்றேர் தொடங்கி வழிவழியாய் வந்த மரபு,இதை மாற்றவே பாவம் அறியாத அவர்,பாவமாக்கப்பட்டார்.... ஆம்,பிரியமானவர்களே நம் ஆண்டவர் நமக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார்,இவ்வுலகம் நெருக்குகையில் என்ன செய்யவேண்டும்,பாவத்தையும்..பிசாசின் தந்தரத்தை எவ்வாறு நிர்மூலமாக்க வேண்டும் என்பனவற்றை செய்துகாட்டிவிட்டு சென்றுள்ளார்,அவர் மீண்டும் வருகையில் இச்செய்கையில் நாம் வேருண்டவே திருச்சபையையும்,போதகர்களையும் ஏற்படுத்தினார்,எனவே நாம் காரணம் சொல்ல இடமில்லை... 1.பிசாசை மேற்கொண்டார்: "அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்பட...

வாலிபனே...விழித்திரு☺

Image
அருமை இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்    இன்றைய தினத்தில் ஆவியானவரின் நடத்துதலில் ஒரு தலைப்பை தியனிக்க இருக்கிறோம்.... வாலிப நாட்கள் என்பது மனித வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி,நாம் சிறார்களாய் இருக்கும் வரை நன்மை,தீமை பகுத்தறியும் ஞானம் நம்மிடம் இருப்பதில்லை...பெற்றோரை சார்ந்தே முடிவுகள் எடுத்தோம்,ஆனால் இந்த வாலிப பருவம்தான் நம்மை சுயமாய் முடிவெடுக்கும் தகுதியை அளிக்கும் பருவம்,உடல்-உள்ளம் பக்குவமடையும் அதாவது உயிரியல் ரீதியான மாற்றங்கள் வரும் காலம்,கூடவே சாத்தான் நம்மை வஞ்சிக்கும் காலம்....இதை மனதில் நிறுத்திக்கொள்வோம்! இயேசுவானவர் இந்த நாட்களில் தான் பிசாசால் சோதிக்கப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.அனேகர் வேதத்திலும் சரி,வாழ்கையிலும் சரி வீழ்ந்தது இந்த வலிபத்தில்தான்,சிம்சோன் வீழ்ந்தது வாலிப மயக்கதாலே.....தற்போது உள்ள சூழலில் நாம் உலகத்தோடு வாழுகையில் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள தயங்குகிறோம் அல்லது மறந்து விடுகின்றோம் . குறிப்பாக இந்த வாலிப நாட்களில் உலக இச்சை,காமவிகாரம்,மாம்ச இச்சை,பொருளாசை முதலான பாவம் நம்மை எளிதில் மேற்கொள்கிறது,இதிலிருந...

மெய்யாக இரட்சிக்கபட்டிற்களா?🤔

Image
கிறிஸ்துவும் உலகின் இரட்சகருமான இயேசுவின் நாமத்தில் உங்களை இவ்வேத தியனத்திற்கு வரவேர்க்கிறேன்,கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடும் உங்கள் வீட்டாருடனும் இருப்பதாக.          இரட்சிப்பு-இந்த வார்த்தைக்கு மீட்டல்,திருப்புதல் என்ற அர்த்தங்களும் உண்டு,இது நாம் பாவத்திலிருந்து மீட்கபட்டதை,ஒரு மனமாறுதலைக் குறிக்கிறது,கிறிஸ்துவை ஏற்று கொண்ட அனைவரும் இரட்சிக்கபட்டார்கள என்றால்,என் பதில் இல்லை!..... " அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்." மத்தேயு 22:14 நாம் எல்லாரும் இயேசப்பாவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டபோது அழைக்கப்பட்டிர்கள்  அதற்கு அடையாலமாய் பரிசுத்த ஆவி என்னும் அச்சார முத்திரை கொடையாய் நமக்கு அருளப்பட்டார். "அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." எபேசியர் 4:30 எனவே மீட்பு கடந்து வந்தது நமக்குள்,ஆனால் ஆவிக்குரிய கிரியை செய்ய அவருக்கு இடம் தருகிறோம,சற்று சிந்திப்போம்....ஆம் என்றால் நம்மை கொண்டு எழுப்புதல் வந்திருக்கனுமே ...ஆதி திருச்சபை அடையாளம் நிக...

நிலைவரமான ஆவி🕊🕊

Image
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,இயேசு அப்பாவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்துகிறேன். நாம் வாழும் இந்த நாட்கள் கடைசி நாட்கள்,தீர்கதரிசனங்கள் நிறைவேறும் நாட்கள்,ஆண்டவரகிய இயேசுவின் வருகை சமிபமாய் உள்ள நாட்கள்...இதை நீங்கள் வசிக்கும் வேலையில் கூட அது அரங்கேரக்கூடும் ......ஆயத்தமாவோம். கடைசி நாட்களின் மிக முக்கிய அடையாலமாய் மாம்சமான யாவர்மேலும் ஆவியானவர் ஊற்றப்பட்டு நம்மை அவர் வாசம் செய்யும் ஆலயம் ஆக்கியுள்ளார் கர்த்தருக்கு நன்றி! அவ்வாறு ஆவியானவர் நம்மில் வாசம் செய்யும்போது பல வரங்களை சூழ்நிலைக்கேற்ப பகிர்ந்தளிக்கிறார் "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ஏசாயா 44:3 இவ்வாறு நாம் பெற்றுகொண்ட வரங்களில் நாம் நிறைவுள்ள பாத்திரமாய் அனைவருக்கும் பயனபடவேண்டும் என்பதே கர்த்தர் சித்தம்  ' தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல'...

புளித்த மாவு 🙄

Image
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,நான் எழுதிய இக்கட்டுரைகள் உங்க கிறிஸ்தவ வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும் என கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன் . இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு 'புளித்த மாவு' இதை குறித்த அனேக சத்தியங்களை ஆவியானவர் எனக்கு கற்றுதந்தார் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனதாய் இருக்கிறேன்,ஜெபத்தோடும் கவனத்தோடும் வாசியுங்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள்,சரி வாங்க தலைப்புகுள்ள போகலாம் புளித்த மாவு என்னும் பதத்தை வேதாகமத்தில் இரண்டு விதமாய் கையால பட்டிருப்பதை காணலாம் முதலாவது: " நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே".  1 கொரிந்தியர் 5:7 இங்கு புளித்த மாவு என்பது நமது பாவத்தை குறிப்பதாய் இருக்கும் "ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்....

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள்😊

Image
ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்,அனைவரும் உங்கள் விசுவாச சுகவாழ்வில் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  நம் அனைவருக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு சஞ்சலத்தில் தேவனை துதிப்பதை பார்க்கிலும் ஆசீர்வாதத்தில் அதிகமாய் துதிப்போம்,இது மனித இயல்பே,மாறக துக்கத்தில் தேவனிடம் அதிகமாக புலம்பத்தான் செய்வோம் அப்படிதான,ஆனால் பரிசுத்த வேதாகமம் இடுக்கனிலும்,இன்னலிலும் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சியுடன துதிக்க நம்மை தூண்டுகிறது,அதெப்படி துன்பவேலையில் துதிக்க முடியும் அதுவும் மகிழ்ச்சியுடன்,சுத்த பைத்தியகாரதனமா தோன்றலாம் . பக்தன் ஒருவன் இவ்வாறு கூறுகிறான் 'அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,     நான் கர்த்தருக்குள்   மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள்   களிகூருவேன்.'  ஆபகூக் 3:17,18 இந்த மகிழ்ச்சி எவ்வாறு உண்டாயிருக்க...

ஆசீர்வாதத்தின் தேவன்😇

Image
இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சமிப நாட்களில் கிறிஸ்தவ சத்தியம் குறித்தான குறுஞ்செய்திகளை வேதபூர்வமான ஆதாரங்களுடன் சுருக்கமான,மற்றும் எளிய புரிதலுடன் தியனித்தோம்,தேவனுடைய வார்த்தை வாசித்த உங்களில் இருந்து செயல் ஆற்றிர்க்கும் என்று அருமை நாதர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உறுதியுடன் விசுவாசிக்கிறேன். " நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ஆதியாகமம் 12:2 ஆம் நண்பர்களே அவர் ஆசீர்வாதத்தின் தேவன்,அவர் நம்மை ஆசீர்வதித்தால் சகாக்காலமும் ஆசீர்வாதமாய் இருப்போம்,அதை உலக மனிதர்கள் நம்மிடம் இருந்து தட்டி பறிக்க முடியாது,ஏனெனில் அது தேவனால் உண்டானது. ' வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.' சங்கீதம் 115:15 ஆம்,நீங்கள் பரலோகத்திற்கு உரிய செல்வத்தை நாடி தேடியபடியால் உங்களுக்கு கிடைத்த தேவ கிருபை என்ற ஆசீர்வாதம் நம்மை நரக ஆக்கினைக்கு நீங்களாக்கும் ஆசீர்வாதமாம்,இது நீங்கள் இயேசு நாதர் மேல் கொண்ட விசுவாசத்தால் இலவசமாக கிடைத்த ஆசீர்வாதம். ...

மெய்யான தேற்றரவாளன்🕊🕊

Image
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகள்,உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துகளை மனமாற தெரிவித்துக்கொள்கிறேன்       இந்த அன்பின் நாளில் நம்மோடு சகாக்காலமும் இருந்து வழி நடத்தும் ஒரு உன்னதமான தேற்றவாளனை குறித்தும், அவர் நம்மில் ஆற்றும் செயல்களையும், அவர்  இல்லாதபோது நாம் சந்திக்கும் இன்னல்களையும் சுருக்கமாய் காணலாம்,கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக.   கிறிஸ்துவை பின்பற்றும் நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்பது எவ்வளவு நிதர்சனமோ அவ்வாறே இவ்வுலக வாழ்வில் பலவித போராட்டங்களையும்,சிலுவைகளையும் மம்சிகமாகவோ,ஆவிக்குரிய வழியிலோ சந்திக்க வேண்டும் என்பதும் நிச்சயமே. பல சூழ்நிலையில் இவ்வகை போராட்டத்தை எதிர்கொள்ளுகையில் தொய்வுண்டு,மனசோர்வடைகிறோம் நம்மில் பலரும் கடன் பிரச்னைகள்,எதிர்காலம் குறித்த கவலைகளால் நம்மை இறைவன் கைவிட்டாரோ என்றெல்லாம் கலக்கமடைவதுண்டு,இந்த போராட்டங்கள் இந்த உலகின் அதிபதி ஆன பிசாசானவனால் நம் விசுவாசம் அற்றுபோகும்படி பல சூழ்நிலையில் ஏவப்படும் அம்புகளே,இருப்பினும் அவனிலும் நம்மில் வாசம் செய்பவர் பெரியவர் என்பதை நினைவில் கொள்ளு...