சீர்படுத்துவார்😊
கிறிஸ்து இயேசுவின் அன்பான தேவ பிள்ளைகளே,அருமை இரட்சகராம் இயேசு நாமத்தில் உங்களை உற்சாகத்துடன் வரவேற்கிறேன்,இனி வரும் நாட்களில் குறிப்பிட்ட ஒரு தலைப்பை பொதுவாக வைத்து அதின் சில பரிமாணங்களை தியானிப்போம் 'பரிசுத்த ஆவியானவர் யார் என்பது உங்களுக்கு தெரியும் என்று விசுவாசிக்கிறேன்,அவர் நம்மில் பல கிரியைகளை ஆற்றுகிறார் என்பதும் தெரிந்த ஒரு வேதாகம சத்தியம்,அந்த கிரியைகளை ஒவ்வொன்றாய் பின்வரும் நாட்களில் தியனிப்போம்,ஆவியானவர் யார் என்ற விளக்கம் தேவைப்பட்டால் உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்,அதற்கான பதிவை நான் தயார் செய்து வேத சத்தியத்துடன் வெளியிடுகிறேன்,சரி இன்று நாம் ஒரு கிரியை பற்றி பார்க்கலாம்,
சீர்படுத்துதல்:
'பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். '
ஆதியாகமம் 1:2
ஆம்,எனதருமை சகோதர சகோதரிகளே...ஒழுங்கின்மை ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் ஆவியானவர் அசைவு இருக்குமேயானால் அது ஒழுங்கு பெறும்,
வெறுமை நம்மை ஆட்கொண்டு நம்மை பிறர் பயனற்ற பாத்திரம் என்று தூற்றும் வேலையில் ஆவியானவர் அசைவாடினால் நிறைவு உண்டாகும்
இறுதியாக இருளும்,அந்தகாரமும் நம்மை நெருக்குகையில் ஆவியானவர் நம்மோடு இருப்பாரானால் நாம் பாதை தவறமாட்டோம்,ஏனெனில் நம் பாதைக்கு ஆவியானவர் நித்திய வெளிச்சமாய் இருப்பார்,அந்த ஒளியை ஒருபோதும் இருள் மேற்கொள்ளாது.
இப்போது வரை நாம் ஒழுங்கற்றவர்களாக,பாவம் என்னும் சாத்தானின் இருளில் சிக்கியவர்களாக,வெறுமையாக இருப்பேமேயானல் ஒப்புகொடுப்பம்,இயேசப்பா நம்மல மன்னிச்சு ஏத்துபாங்க,நம்மை பயனுள்ள பாத்திரமாக செய்வாங்க நம்ம வாழ்க்கை செழிக்கும்.
ஆமென்! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment