Posts

Showing posts from November, 2021

விதை🌱

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலும்,அவரது மாபெரும் இரக்கத்தினாலும் இந்த கடின காலத்திலும் இன்னாள் மட்டும் கடந்து வந்துள்ளோம்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்றைய தினத்தில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான காரியத்தை குறித்து தியனிக்கலாம்,தியனத்திற்கென்ற இன்றைய தலைப்பு 'விதை',இந்த வேத வாக்கியங்களை கவனியுங்கள்  "விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்".  மாற்கு 4:14 இந்த வசனத்தை கண்டவுடனே என்ன காரியத்தை குறித்து தியானிக்க  போகிறோம் என்று கண்டுபிடித்திருப்பீர்கள்,வாழ்த்துக்கள்! ஆம்,விதைப்பவன் உவமையே.விவசாயம் பற்றி நமக்கு நன்றாக தெரியும்,வேதம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்திருக்கிறது,எனவேதான் உவமைகளும் அதை சார்ந்து இருந்தன,விதைப்பவன் எதை விதைகிறானாம்? விதையாகிய தேவ வசனத்தை. ஏன் வசனத்தை விதைக்கவேண்டும்? : சுவிசேஷம் அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை,அந்த கடமையை முழுமனதோடு ஆற்ற வேண்டும்,நாம் சொல்லும் சுவிசேஷம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,எனவேதான் வசனத்தை விதைக்கும் படி இயேசப்பா கற்றுகொடுத்தார்,வ...

ஆசிர்வாதங்களும்🙇 சாபங்களும்👈

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனது அன்பு சகோதர,சகோதரிகளே அருமை இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி,இன்றைய தியனத்திற்கு என்று நான் எடுத்த தலைப்பு சற்று ஆராய்ந்து உணரவேண்டிய தலைப்பு,ஆராய்ச்சி என்ற உடன் நீங்கள் ஏதோ அறிவியல் ஆராய்ச்சி என்று எண்ண வேண்டாம், ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் பரிசுத்த வேதத்தில் உள்ளதான மகத்தான மறைபொருளை அறிந்து கொள்ளும் முறையையே ஆராய்ச்சி என்றேன்.சரி,தலைப்பிற்குள் கடந்து செல்வோம்;  'ஆசிர்வாதங்களும், சாபங்களும்'  வேதத்தில் குறிப்பாக பழைய ஏற்பாட்டு காலக்கட்டத்தில் இஸ்ரவேலரை பல வகையில் தேவன் ஆசிர்வதித்ததையும்,பலத்த கரத்தால் எகிப்தியரின் அடிமைப்பிடியிலிருந்து மீட்டு கொண்டு வந்ததையும் காணலாம்,பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டின் நிழலாட்டம் என்று சொல்ல கேள்விபட்டிருகிறோம் அல்லவா,அது நிதர்சணமே! இன்றும் நம்மை தேவன் ஆசிர்வதிக்க விரும்புகிறார்,ஆனால் அதற்கு முன் அந்த ஆசிர்வாதங்களுக்கு நாம் தகுதி பெறும்படி நம்மை புடமிட்டு பார்கிறார்,நாம் சுத்தமான வெள்ளி என்று விளங்கிய பின் ஆசிர்வதிக்கவே ஆசிர்வ...