வஸ்திரத்தின் ஓரம்👕
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, மீண்டுமாக இந்த பதிவு வழியாக உங்களோடு வேத தகவல்களை பரிமாறிக்கொள்ளும் படி அநுக்கிரகம் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இன்றைய தியானத்திற்கான தலைப்பு 'வஸ்திரத்தின் ஓரம்' நாம் எல்லாருக்கும் நன்று தெரிந்த சம்பவம், வேதத்தில் நமக்கு நன்கு பரிட்சையமான ஒரு அற்புதந்தான் இருந்தாலும் அறியாதவர்களுக்காக மீண்டும் எடுத்து காட்டுகிறேன், வேதாகமத்தை திறந்து என்னோடு இந்த பகுதிகளை வாசித்து பாருங்கள் மாற்கு எழுதின சுவிசேஷம் 5ஆம் அதிகாரம் அதில் 27-29 வசனங்களை வாசியுங்கள் "ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து,அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்." மாற்கு 5:28 இயேசப்பா இந்த பூமியிலே நன்மை செய்கிறவராக சுற்றி தெரிந்தார் என வேதம் குறிப்பிடுகிறது, செல்லுமிடமெல்லாம் அற்புதங்களையும், அதிசையங்களையும் நடப்பித்தார், இங்கே பெரும்பாடு உள்ள ஸ்திரிக்கு இயேசப்பா செய்த அற்புதம் சற்று மாறுபட்டது இங்கு அந்த ஸ்திரி இயேசப்பாவை சந்திக்கவோ,தன் சுகவீனம் நீங்கும் படி வேண்டவோ இல்லை மாறாக தன் மனதில் விசுவாசம் உடையவளாய் அவரது வஸ்திரத்தை இன்னும் குறிப்பிட்ட சொல்...