துதியும்,ஜெபமும்🛐
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான சகோதர,சகோதிரிகளே இந்த நாள் வெற்றியின் நாளாக அமைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துக்கிறேன் . இன்றைய நாளில் ஜெபம் எதற்கு,நம் பரிசுத்த வாழ்வில் ஜெபம் ஆற்றும் பங்கு,நாம் ஏன் ஜெபம் செய்யவேண்டும்,எவ்வாறு அந்த ஜெபம் அமையவேண்டும் என்ற அடிப்படை தகவல்களையும்,அதிலுள்ள சத்தியத்தையும் அறிவோம், 1.யாருக்காக ஜெபிக்கவேண்டும்: " உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்." மத்தேயு 5:44 ஆம்,நம் ஆண்டவரும் அவ்வாறே நமக்கு முன்மாதிரியாக தமக்கு எதிராக கரம் நீட்டி,தம்மை நிந்தித்து,சிலுவை மரணத்திற்கு ஒப்புகொடுத்தவர்களுக்காக,தந்தையிடம்,இவர்கள் அறியாமல் செய்தார்கள் என்று பரிந்து பேசி ஜெபம் செய்தார்,நமக்கு நன்மை செய்வோர்காக மட்டும் நாம் வேண்டுவோம் என்றால் பலன் ஒன்றும் இல்லை,எனவே இவர்களின் மீறுதலுகாய் நாம் ஜெபம் செய்தால் நம் பரமதகப்பன் நம் மீறுதல்களை மன்னிப்பார். 2.எவ்வாறு ஜெபிக்க வேண்டும்: "நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய ...