துதியும்,ஜெபமும்🛐
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான சகோதர,சகோதிரிகளே இந்த நாள் வெற்றியின் நாளாக அமைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துக்கிறேன் .
இன்றைய நாளில் ஜெபம் எதற்கு,நம் பரிசுத்த வாழ்வில் ஜெபம் ஆற்றும் பங்கு,நாம் ஏன் ஜெபம் செய்யவேண்டும்,எவ்வாறு அந்த ஜெபம் அமையவேண்டும் என்ற அடிப்படை தகவல்களையும்,அதிலுள்ள சத்தியத்தையும் அறிவோம்,
1.யாருக்காக ஜெபிக்கவேண்டும்:
" உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."
மத்தேயு 5:44
ஆம்,நம் ஆண்டவரும் அவ்வாறே நமக்கு முன்மாதிரியாக தமக்கு எதிராக கரம் நீட்டி,தம்மை நிந்தித்து,சிலுவை மரணத்திற்கு ஒப்புகொடுத்தவர்களுக்காக,தந்தையிடம்,இவர்கள் அறியாமல் செய்தார்கள் என்று பரிந்து பேசி ஜெபம் செய்தார்,நமக்கு நன்மை செய்வோர்காக மட்டும் நாம் வேண்டுவோம் என்றால் பலன் ஒன்றும் இல்லை,எனவே இவர்களின் மீறுதலுகாய் நாம் ஜெபம் செய்தால் நம் பரமதகப்பன் நம் மீறுதல்களை மன்னிப்பார்.
2.எவ்வாறு ஜெபிக்க வேண்டும்:
"நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே."
மத்தேயு 6:9,10,11,1213
பரலோகச்சித்தத்திற்கு ஒப்புகொடுத்த இவ்வாறு ஜெபம் செய்யவேண்டும்.
ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
மாற்கு 11:24
நமது ஜெபம் இவ்வாறான விசுவாசத்துடன் அமைதல் அவசியம்.
3.ஜெபம் செய்வதின் பலன்கள்:
நாம் அன்றாட வாழ்வில் ஒருவடோர் ஒருவர் எவ்வாறு பேசி உறவாடுகிறோமோ அதுபோல ஜெபம் தேவனோடு நாம் கொண்டுள்ள உறவில் நிலைக்க செய்கிறது,இந்த உறவில் தவறாமல் இயேசு நிலைத்திருந்தார் எனவேதான் தேவமகிமை அவரால் புரணமாய் விளங்கியது.
'அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.'
மாற்கு 1:35
'அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.'
மாற்கு 6:46
எனவே நாள்தோறும் ஜெபத்தில் விழிப்புணர்வு உள்ளவர்களாக,தேவனோடு உண்டான உறவில் நிலைத்து நித்திய வாழ்வை சுதந்திரரிப்போம்,துதியும்;ஜெபமும் நம்மை சகல இடுக்கண்களுக்கும் நீங்களாக்கி இரட்ச்சிக்கும்
ஆமென்! அல்லேலுயா!🛐
Comments
Post a Comment