Posts

Showing posts from September, 2021

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அன்பு சகோதர, சகோதரிகளே. ஆண்டவர் படைத்ததொரு வெற்றியின் நாளில் இந்த பதிவின் வாயிலாக உங்கள் அனைவரோடும் இடை படுவதில் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து களிகூறுகிறேன்,இன்றைய தினத்தில் உலகிற்கு வெளிச்சமாக அருளப்பட்ட தேவனின் வார்த்தைகளை உள்ளடக்கிய வேதாகமம் கிறிஸ்தவ வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களோடு பேசும்படி ஆவியானவர் என்னை ஏவினார்,சென்ற பதிவுகளில் 'மோசம் போக்கும் ஓநாய்கள்' என்ற தலைப்பில் சில காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார்,அதை படித்து இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்,அந்த ஓநாய்களின் பட்சிக்கும் தன்மையையும்,மோசம் போக்கும் விதத்தையும் நாம் அறிந்துகொள்ள பரிசுத்த வேதாகமத்தை தவிர வேறு வேத புத்தகம் உலகில் இதுவரை அருளப்படவில்லை,எத்தனையோ மனிதர்கள் வேதாகமத்திற்கு ஒப்பாய் ஞானமான பல புத்தகங்கள் எழுதி இருக்கலாம் ,மனிதன் தவறுவான் தேவன் என்றென்றும் வாக்கு மாறாதவர்,உண்மையுள்ளவர் எனவேதான் பரிசுத்த வேதாகமத்திற்கு ஒப்பான புத்தகம் இல்லை என்றேன்-ஆமென் 1.வேதம் ஏன் வாசிக்கவேண்டும் : இந்த நவினகாலத்தில் நாம் ஓடி ,ஓடி ஓய்வின்றி உழைக்கிறோம்,காலம் ப...

சோதனையின் பரிமாணங்கள்🙂

Image
கிறிஸ்துவும் இரட்சகருமான இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட என் அருமை தேவ பிள்ளைகளே,உங்கள் அனைவரையும் இன்றைய பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்,பொதுவாக கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பமே சோதனையில் தொடங்கி ஜெயத்தில் முடியும் ஒரு பரிசுத்த பந்தயம் போன்ற வாழ்வு தான்,இதில் கவனத்துடன் ஓடவே அழைக்கப்பட்ட உள்ளோம் என்ற போதிலும் தடையாய் வரும் சோதனையில் ஜெயிக்க முதலில் அதன் பரிமாணங்களை அறிந்திருப்பது அவசியம் அல்லவா,அதை தான் இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவியானவர் திருவுளம் பற்றினார்,சோதனையை மூன்றாக நான் பகுத்துள்ளேன்  1.அடிப்படை 2.இடைநிலை 3.உச்சக்கட்டம். இதில், இன்று நாம் அடிப்படை சோதனைகளின் தன்மையும்,அதை மேற்கொள்ளும் வழிகளையும் வேத வசனங்களில் இருந்து பார்க்கலாம்,யார் ஒருவர் என் கிறிஸ்தவ வாழ்வில் சோதனையில்லை என்பாரோ அவர் கிறிஸ்தவ வாழ்விற்குள் இன்னும் கடந்து வராத பெயர் கிறிஸ்தவர் எனலாம்,அடிப்படை சோதனையை இயேசப்பா சோதிக்கப்பட்ட அந்த நிகழ்வில் இருந்து உங்களுக்கு எடுத்துகாட்ட உள்ளேன்,தொடர்ந்து படியுங்கள்... 1.இயலாமையில் சோதிக்கப்படுதல்: ' சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய கு...

மோசம் போக்கும் ஓநாய்கள்-2

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அருமை சகோதர,சகோதரிகளே கர்த்தருக்கென்று அனுசரிக்கப்படும் ஓய்வு நாளாகிய இன்று உங்கள் அனைவருடனும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்து பகிர்ந்து கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன்,கடந்த பதிவில் ஆட்டுதோள் அணிந்து வரும் ஓநாய்கள் குறித்த சில காரியங்களை எச்சரிப்பின் செய்தியாக ஆவியானவர் உங்களுடனே என்னை பகிர செய்தார்,அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் அந்த ஓநாய்களின் குணாதிசயங்கள் குறித்த சில பயனுல்ல தகவல்களை கர்த்தரின் வார்த்தையோடு பகிர்ந்துகொள்ள ஆவியானவர் என்னை தூண்டுகிறார். " உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். " 2 பேதுரு 2:1 1.கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளை நுழைப்பார்கள்: முதலாவதாக,கள்ளபோதகர்களை கண்டறியும் முறையாக தலைமை அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு வழியாக தேவன் நமக்கு கற்றுதருவது,அவர்கள் வேதப்புரட்டுகளை நுழைப்பார்கள்,இங்கு வேதப்புரட்டு என்பது  வேதத்தில் உள்ள த...

மோசம் போக்கும் ஓநாய்கள்🦊

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,அவ்வப்போது இந்த பதிவின் வாயிலாக கர்த்தரின் சத்தியத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி,இன்றைய தினத்திலும் ஒரு எச்சரிக்கையின் செய்தியை குறித்து உங்களுடன் பேசும்படி ஆவியானவர் ஏவினபடியால் இந்த பதிவை எழுதியுள்ளேன்,ஆண்டவரின் வருகை சமிபமாக உள்ளது அதற்கான தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும்;ஆமென் என்றும் நிறைவேறிக்கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.இந்த நாட்களில் அதை குறித்து அநேகர் பேசுவதையும் காணலாம்,அதற்காக கர்த்தரை ஸ்தோத்திக்கிறேன் என்ற போதிலும் அதில் எவையெல்லாம் வேதத்தின்படி சத்தியம்,எவையெல்லாம் வேத புரட்டு என்பதை பகுத்தறிவதில் யார் ஜாக்கிரதையாய் இருக்கிறார்களோ இல்லையோ,கிறிஸ்தவர்களாகிய நாம் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம், அத்தகைய காரியத்தை குறித்துதான் உங்களோடு பேசும்படி ஆவியானவர் தூண்டினார். அந்த கருத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்து "மோசம் போக்கும் ஓநாய்கள்" என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன் தொடந்து படியுங்கள் பிரயோஜனமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். ' நான் போனபின்பு மந்தையைத் தப்பவிட...

விழித்திருங்கள்👀

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே; இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை இனிதே வாழ்த்தி இந்த பதிவிற்குள் வரவேற்கிறேன்.இன்றைய பதிவில் "விழித்திருக்கும் படி " இயேசப்பா நமக்கு கற்றுகொடுத்த இரண்டு காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்,இந்த பதிவு உங்கள் ஜெப வாழ்விற்கும்,பரலோகத்தை நோக்கிய பயணத்திற்கும் உங்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன். 1.சோதனையை ஜெயிக்க விழித்திருங்கள்: " நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்". மத்தேயு 26:41 முதலாவதாக, நாம் விழித்திருக்கும் படி இயேசப்பா நமக்கு கற்றுகொடுத்த காரியம், 'சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருங்கள்',பிசாசானவனுக்கு பல பெயர்கள் வேதத்தில் காணப்பட்டாலும் 'சோதனைக்காரன்' என்றொரு பெயர் உண்டு,அவனை தேவன் இந்நாள்மட்டும் விட்டுவைத்ததின் அவசியமே நம் விசுவாசத்தை சோதித்து நம்மை பொன்னாக விளங்க செய்யதான் அந்த சோதனையில் நாம் அகப்பட்டு பின் மாற்றம் அடைந்து செல்லாமல் இருக்க நாம் விழிப்புட...

பிதாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள்🛐

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளே கடந்த நாட்களாக ஆவியானவரின் நடத்துதல் படி சில காரியங்களை தியானித்து அதை சுருக்கமாக இந்த பதிவுகள் வாயிலாக உங்களிடம் கொண்டு சேர்க்க கர்த்தர் கிருபை பாராட்டினார்,வசனங்களின் ஆழத்தை இந்த ஏழை அறிந்து கொள்ளும்படி இரக்கம் பாராட்டின தேவனுக்கு ஸ்தோத்திரங்கள். என்னை உங்கள் சொந்த சகோதரனாக,மகனாக பாவித்து உங்கள் ஜெபவேளைகளில் என்னையும் நினைதருளியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்!  இயேசுவானவரின் பெரும்பாலான உபதேசம் பிதாவிடம் கேளுங்கள்,அவர் அதை உங்களுக்கு அருளிச்செய்வார் என்றவாறு அமைந்திருப்பதை பரிசுத்த வேதாகமத்தில் காணமுடியும்,அவ்வாறு கடைசி காலத்தில் இருக்கும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய வேண்டுதல்களாக இயேசப்பா கற்றுகொடுத்ததை இந்த பதிவில் காணலாம்,தொடர்ந்து படியுங்கள்.... " தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்;  ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். " மத்தேயு 9:37,38 []முதலாவதாக நாம் பார்கபோகும் காரியம் 'அறுப்புக்கு வேலையாட்கள் வேண்டி விண்ணப்பம்...

பவுலை போல ஊழியம் நிறைவேற்றுங்கள்👍

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே,இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய தினத்தில் இந்த பதிவில்  பரமபிதா நம்மை அழைத்த விதத்தையும், அந்த அழைப்பின் மேன்மையும் குறித்தான சில காரியங்களை உங்களுடன் பகிர ஆசைபடுகிறேன்,அதற்கு உதாரணமாக ஒரு தேவ மனிதனின் ஊழிய பாதையை உங்கள் முன் எடுத்துகாட்ட விரும்புகிறேன்,தலைப்பில் நீங்கள் பார்ததுபோல அந்த மனிதன் அப்போஸ்தலனாகிய பவுல் தான். பவுலை பற்றி பல காரியங்கள் நமக்கு தெரியும் உதாரணமாக புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான நிருபங்களை எழுதியவர்,வல்லமையான ஊழியக்காரன்,வைராக்கியம் நிறைந்தவர் என்று என்னை காட்டிலும் உங்களுக்கு இன்னும் அதிகமாகவே தெரிந்திருக்க கூடும் என்று கர்த்தருக்குள் விசுவாசித்த இந்த பதிவை தொடருகிறேன்.பவுலின் இந்த வார்த்தைகளை கவனித்து பாருங்கள்: ' நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்'.  2 தீமோத்தேயு 4:6 கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கை என்பதற்கும்,அந்த வாழ்க்கையை கிறிஸ்து கற்பித்த படி வாழ்பவனுக்கு உலகத...

பலவானை கட்டுங்கள்✊🏻

Image
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உண்டாகும் கிருபையும் சமாதானமும் உங்கள் அனைவரோடும் என்றும் இருபாதாக,பிரியமான சகோதர சகோதரிகளே இந்த அருமையான நாளில் இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திக்க செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இன்றைய தினத்தில் ஒரு காரியத்தை குறித்து உங்களுடன் பேசும் படி ஆவியானவர் என்னை ஏவினார்,எனக்கு அவர் அருளின படி அவற்றை உங்களிடம் அளிக்குறேன்,இனிவரும் ஒவ்வொரு நாட்களுக்காகவும், ஆண்டவர் என்னை அதிகம் எடுத்து பயன்படுத்தும் படியாகவும் எனக்காக ஜெபித்துகொள்ள உங்களை வேண்டுகிறேன்.இந்த வேத வசனத்தை சற்று கவனியுங்கள்  ' பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.' மாற்கு 3:27 "பலவானை கட்டுங்கள்" என்று சர்வ வல்லவர் உங்களிடம் கூறுகிறார்,யார் இந்த பலவான்,ஏன் இவனை நாம் கட்ட வேண்டும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பனவற்றை இந்த பதிவில் சுருக்கமாக எழுதியுள்ளேன், பலவான் என்பவன் இந்த உலகை தன் ஆளுகைக்கு கீழ்படுத்தி வைத்துள்ள சாத்தானை குறிக்கிறது,ஆதாமிடன் அளிக்கப்பட்ட ...

நீங்கள் தேவனுடைய புத்திரர்கள்🤗

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே நீண்ட இடைவெளிக்கு பின் இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பேச கிருபை செய்த சர்வ வல்லவராம் நம் பரலோக தகப்பன் இயேசு கிறிஸ்துவுக்கு என் எண்ணிலடங்கா ஸ்தோத்திரங்கள். இன்று உங்களுடன் உரையாடுவதுகென்று ஆவியானவர் என்னை ஒரு அருமையான வேத பகுதியை தியனிக்க வைத்து,சில காரியங்களை உங்களுடன் பகிரும்படி கற்று கொடுத்தார்,வழக்கமாக ஒருசில வசனங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை தூண்டும் ஆவியானவர்,ஏன் இந்த வேத பகுதியை கொடுத்தார் என்று எண்ணியபடி தியனித்தேன் அப்போது சில காரியங்களை கற்றுக்கொண்டேன் அவற்றை இந்த பதிவின் வாயிலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன்,சரி வாருங்கள் பதிவிற்குள் கடந்து செல்வோம்; 1.நீங்கள் தேவனின் புத்திரர்கள்: ' எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ' ரோமர் 8:14 நீங்களும்,நானும் யாரால் நடத்தப்படுகிறோம் என்று சிந்திப்போமா ? சுய இச்சை,உலகம் தரும் மாயை,முதலிய அழிவுள்ள சிந்தனையால் நடத்தப்படுகிறோமா,அல்லது என்றும் அழிவில்லா நித்தியத்திற்குள் நம்மை நடத்தி செல்லும் பரிசுத்த ஆவியால் நட...

சுவிசேஷம்-நம் கடமை☺

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,தேனிலும் இனிதான இயேசு நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்களும் சமாதானமும்...எனதருமை நண்பர்களே இந்த பதிவுகள் உங்கள் வாழ்வில் ஆண்டவரோடு நெருங்கி வர பயனுள்ளதாக இருக்கிறது என்றும் கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன் ....சரி கிறிஸ்தவனுக்கு மட்டும் அல்ல கிறிஸ்து இயேசுவே உலக பாவங்களை இரட்சிக்க இவ்வுலகில் அவதரித்த மனுசக்குமாரன் என்று விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்ததான தலையாய கடமையை பற்றி இந்த பதிவை அமைத்துள்ளேன்,அப்படி என்ன கடமையை ஆண்டவர் கொடுத்திருப்பார் என்று சிந்தனை எழுகிறதா? பெரிதாக ஒன்றும் இல்லை,அன்பு கட்டளை தான்,ஆனால் நம்மில  பலர் தயங்கும் ஒரு காரியம் தான் அது,இந்த வேத வசனத்தை சற்று வாசியுங்கள் உங்களுக்கே புரியும்... "அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ." 1 கொரிந்தியர் 9:16 நம்மில் எத்தனை பேர் நம் தலைமேல் விழுந்த இந்த கடமையை சரிவர முழு மனதோடு செய்கின்றோம்,சற்று சிந்திப்போம்...பல சமயங்களில் இதை பாரமாக கூட நாம் எண்ணுவதுண்டு இல்லையா! ஏன் இந்த எண்ணம் நமக்குள் த...

நல்ல நண்பன் இயேசு🤗

Image
இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே...நலமாக உள்ளீர்கள் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்,உங்கள் வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறதா?....இந்த உலக அன்பு உங்களை திருப்தி அடைய செய்கிறது? என்ன இவன் அரம்பமே கேள்வியோடு அரம்பிக்கிறானே என்று மனதிற்குள் திட்டுகிறிர்களா! உண்மை என்னவென்றால் இந்த உலகத்தில் எதுவுமே நிலையற்றதே...குறிப்பாக மனிதனிடம் இருக்கும் அன்பு மற்றும் பாசம்-இவை காலநிலை பொறுத்து மாறும்,உங்களில் மாறாத அன்பு உள்ளவர்கள் இருபீர்களேயானால் என்னை மன்னிக்கவும்! ஆனால் பெரும்பான்மை மக்கள் காட்டும் அன்பு மாறாத இருப்பது 'அத்தி பூதார்' போல அரிதான காரியம்,அதிலும் இந்த நவின உலகில் அன்பும் நவினமடைந்து விட்டது என்று சொல்லலாம் தானே....அனைத்து அன்பும் கையடக்கு கைப்பேசிககுள் அடக்கிவிட்டான் நவின கால மனிதன்...நமது உள்ளம் ஒரு கட்டத்தில் அன்பிற்கு ஏங்கும்,எனக்கென்று யாராவது இருக்கமாட்டார்களா...என்னை ஊக்குவிக்க,உற்சாகப்படுத்த ஒருவர் எனக்கு இருக்கமாட்டார்கள என்று நீங்கள் ஏங்கும் ஒருவராக இருந்தால் இந்த பதிவில் என் உயிர் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்....அவர் அந்தஸ்த...