விழித்திருங்கள்👀
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே; இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை இனிதே வாழ்த்தி இந்த பதிவிற்குள் வரவேற்கிறேன்.இன்றைய பதிவில் "விழித்திருக்கும் படி " இயேசப்பா நமக்கு கற்றுகொடுத்த இரண்டு காரியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்,இந்த பதிவு உங்கள் ஜெப வாழ்விற்கும்,பரலோகத்தை நோக்கிய பயணத்திற்கும் உங்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்.
1.சோதனையை ஜெயிக்க விழித்திருங்கள்:
" நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்".
மத்தேயு 26:41
முதலாவதாக, நாம் விழித்திருக்கும் படி இயேசப்பா நமக்கு கற்றுகொடுத்த காரியம், 'சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருங்கள்',பிசாசானவனுக்கு பல பெயர்கள் வேதத்தில் காணப்பட்டாலும் 'சோதனைக்காரன்' என்றொரு பெயர் உண்டு,அவனை தேவன் இந்நாள்மட்டும் விட்டுவைத்ததின் அவசியமே நம் விசுவாசத்தை சோதித்து நம்மை பொன்னாக விளங்க செய்யதான் அந்த சோதனையில் நாம் அகப்பட்டு பின் மாற்றம் அடைந்து செல்லாமல் இருக்க நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்,அத்துடன் ஜெபம் செய்வதிலும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்,அப்போது சோதனைகாரன் நம்மிடம் தோற்று வெட்கமடைந்து ஓடிவிடுவான்,அவனது வித்தான பாவம் நம்மில் கர்ப்பம் தரிக்காமலும் தடுக்கலாம்.
மாம்ச பலவீனத்தை மேற்கொள்ளவும் தேவ சமூகத்தில் நாம் விழித்திருந்து ஜெபம் செய்வது அவசியம் என இயேசப்பா கற்று கொடுத்துள்ளார்.
2.மனுஷக்குமாரன் வருகைக்காக விழித்திருங்கள்:
" மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்."
மத்தேயு 25:13
இயேசப்பா மீண்டும் வருவார் என்பது இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு,பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும்,பரிசுத்த ஆவியையும் பெற்று கொண்ட அனைவரும் அறிந்ததே,விசுவாசத்துடன் காத்திருப்பதும் அந்த நாளுக்காகதான்.ஆனால் காத்திருந்த,காத்திருக்கும் யாருக்கும் அந்த நாளோ;நாழிகையோ தெரியாது,ஆகவே அந்த நாள் வரும்போது உணர்வில்லாமல் இருக்க கூடாது என்பதற்காக விழித்திருக்கும் படி இயேசப்பா கற்று கொடுத்துள்ளார்,வேதப்படி பார்போமேயானால் அந்த நாள் திருடனை போல் வரும் என்று வாசிக்கலாம்,எனவே அந்த நாள் வருமட்டும் விழிப்புடன் காத்திருந்து ஜெபிப்பது மிகவும் அவசியம்.
இந்த இரண்டு காரியங்களை மனதில் நிறுத்தி கொண்டு இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்,எந்த ஒரு காரியத்தை புதிதாக செய்தாலும் அதை ஸ்தோத்திரத்தோடே ஆரம்பிங்கள் கர்த்தர் சதாகாலங்களிலும் உங்களோடு இருப்பாராக.
ஆமென்! அல்லேலூயா! 😇🤗
Comments
Post a Comment