பரலோக ராஜ்யம் சமிபமாயிற்று🤗
கிறிஸ்து இயேசுவில் எனகன்பான சகோதர,சகோதரிகளே,அனைவரும் மகிழ்ச்சியுடனும் ,உடல் நலத்துடனும் இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.இன்றைய இரவு மகிழ்ச்சியின் இரவு,கிறிஸ்துமஸ் இரவு,புத்தாடைகளும் இனிப்புக்களும் நிறைந்த இரவு,பகிர்தலின் இரவு....உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,கடந்து வருடம் முழுவதும் நம்மை கண்ணின் மணிபோல காத்துள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்! கடந்த நாட்களில் நம்மோடு இருந்தவர்கள் இப்போது இல்லை என்பது வருத்தம் அளித்தாலும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்துள்ளதை எண்ணி மகிழ்ந்து களிகூறுங்கள். 'பரலோக ராஜ்யம் சமிபமாயிருக்கிறது' இந்த சொற்களை எங்கு வாசித்து அல்லது கேட்டு உள்ளோம் என்று நியாபகம் வருகிறதா? இந்த வேத வசனத்தை கவனியுங்கள் "அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்." மத்தேயு 3:1-2 உலக இரட்சகராம் இயேசு இப்பூமியில் மனு உருவில் அவதரிக்கும் முன் யோவான்ஸ்நானன் இந்த வார்த்தைகளை சுவிசேசமாக அறிவித்தான்,பலரை மனமாற்...