பரலோக ராஜ்யம் சமிபமாயிற்று🤗

கிறிஸ்து இயேசுவில் எனகன்பான சகோதர,சகோதரிகளே,அனைவரும் மகிழ்ச்சியுடனும் ,உடல் நலத்துடனும் இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.இன்றைய இரவு மகிழ்ச்சியின் இரவு,கிறிஸ்துமஸ் இரவு,புத்தாடைகளும் இனிப்புக்களும் நிறைந்த இரவு,பகிர்தலின் இரவு....உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,கடந்து வருடம் முழுவதும் நம்மை கண்ணின் மணிபோல காத்துள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்! கடந்த நாட்களில் நம்மோடு இருந்தவர்கள் இப்போது இல்லை என்பது வருத்தம் அளித்தாலும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்துள்ளதை எண்ணி மகிழ்ந்து களிகூறுங்கள். 'பரலோக ராஜ்யம் சமிபமாயிருக்கிறது' இந்த சொற்களை எங்கு வாசித்து அல்லது கேட்டு உள்ளோம் என்று நியாபகம் வருகிறதா? இந்த வேத வசனத்தை கவனியுங்கள்

"அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: 
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்." 

மத்தேயு 3:1-2

உலக இரட்சகராம் இயேசு இப்பூமியில் மனு உருவில் அவதரிக்கும் முன் யோவான்ஸ்நானன் இந்த வார்த்தைகளை சுவிசேசமாக அறிவித்தான்,பலரை மனமாற்றி ஞானஸ்நானம் கொடுத்தான் என்பதை வேதத்தில் வாசிக்கலாம்,இன்றோ அந்த பரலோக ராஜ்யம் நம்மிடத்தில் நமக்குள் இருக்கிறது,அன்பே உருவான தேவன்,உருவமற்ற தேவன் நம்மை தம் இருப்பிடமாக,ஆலயமாக தெரிந்துகொண்ட  நல்ல நாள் தான் கிறிஸ்துமஸ்,ஏதோ ஆண்டில் ஒருநாள் புத்தாடை உடுத்தி மகிழ்வது கிறிஸ்துமஸ் அல்ல,பாவத்தை உணர்ந்து,இதயத்தில் குத்துண்டு,கிறிஸ்து இயேசு நமக்காக தன் மகிமையை இழந்து சாபமாக மாறியதை அறிந்து பரிசுத்த ஆவியினால் புதுப்படைப்பாகும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் நாள்தான்,அன்றும் அந்த உள்ளங்களில் இயேசு பிறப்பார்,அவரை கனிவுடன் வரவேற்க தயங்க வேண்டாம்,இன்றைய நாளில் புதுபிறப்பாக ஒப்புகொடுப்போம் கிறிஸ்தவத்தை மதமாகவும்,கிறிஸ்துமஸை மத சடங்காகவும் அனுசரிக்காமல், அதின் உண்மையான மகத்துவத்தை உணர்ந்து செயல்படுவோம்.

ஆமென்! அல்லேலூயா!😊😇

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺