மரித்தவர்களே!!🙄

கிறிஸ்து இயேசுவில் பிரியமான அருமை சகோதர,சகோதரிகளே...கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக,இன்றைய தினத்திலும் ஒரு அருமையான சத்திய வசனத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் அநுரகம் செய்துள்ளார்.
பொதுவாக மரணத்தை குறித்த பயம் நாம் அனைவருக்கும் உண்டுதானே,ஆனால் இன்று நாம் மாரித்தும் பிழைத்தவர்களாய் இருக்கிறோம்,என்ன குழப்பமாக இருக்கிறதா...கவலையோ,குழப்பமோ வேண்டாம் அதை விளக்கும்படியே தேவன் எனக்கு வெளிச்சம் அருளியுள்ளார் அதற்காக தேவனை ஸ்தோதரிக்கிறேன்.சரி,வாருங்கள் தலைபிற்குள் போகலாம்;நாம் எவ்வகையான மரண அனுபவத்தை கடந்து வந்துள்ளோம் என்று பரிசுத்த வேதாகம் கூறுகிறது என்று பார்ப்போமா!...பரிசுத்த பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் இவ்வாறாக எழுதியுள்ளார்;

"என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்". 

ரோமர் 7:4

இந்த மரண அனுபவம் கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அனுபவம்,அனைவரும் கட்டாயம் கடந்து வரவேண்டிய அனுபவம்,பரலோக பயணத்திற்கு அடிப்படையில் ஆயத்தமாக்கும் மரணம்;இரண்டாம் மரணத்தில் நம் ஆத்துமா சிக்குண்டு அழியாமல் நம்மை காக்க பரலோக தேவன் உண்டு பன்னின மரணம் தான் இந்த மரணம்,மேலும் தொடந்து இந்த அதிகாரத்தை தியானித்தோம் என்றால்  இச்சையால் கர்ப்பந்தரிக்கபட்ட பாவம் என்னும் கனி; கிறிஸ்துவுக்குள் நாம் பலன் கொடாதபடிக்கு நமது அவயங்களில் எவ்வாறு கிரியை செய்கிறது என்பதையும் அதன் பலத்த கிரியையின் விளைவாக நாம் எவ்வாறு நிர்பந்தமான மனிதர்கள் ஆனோம் என்பதையும் மிக தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

இரண்டு எஜமான்கள்:

" நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்". 

ரோமர் 7:25

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யலாகாது என்று கற்று கொடுத்துள்ளார்,இருந்தும் நம்மிள் பலர் நிர்பந்தமாக பாவத்திற்குள்ளாக மாம்சத்திற்கு விற்கபட்டு,உலக இச்சைக்கு இடங்கொடுத்து பாவத்திற்கு ஊழியம் செய்கிறோம்,இதனால் பாவம் நம்மை ஆண்டு கொள்கிறது,இந்த அடிமைதன வாழ்விலிருந்து விடுதலை ஆக விரும்புகிறார்களா?  அப்போது கிறிஸ்துவின் மரணத்திலும்,உயிர்த்தெழுதலிலும் ஒப்புகொடுங்கள்,ஆம் பாவத்திற்கு சாக ஆயத்தமாகுங்கள்,விடுதலையாய் தேவனை ஆராதனை செய்யுங்கள்.

ஆமென்!      அல்லேலூயா!❤😇



Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺