மார்ஸ் மேடையும்,பவுலும்😎
கிறிஸ்து இயேசுவில் எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே,இந்த பதிவில் உங்களுடன் கலந்துரையாட கிருபை செய்த இயேசுப்பாவுக்கு ஸ்தோத்திரங்கள்,அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும் நண்பர்களே இந்த 'மார்ஸ் மேடை' குறித்து நீங்கள் எங்காவது கேள்வி பட்டதுண்டா? உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்புகள் உண்டு,இந்த மார்ஸ் மேடை அத்தேனே என்னும் பட்டணத்தில் உள்ளது,சரி அதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதானே சிந்திக்கிறிர்கள் அதைதான் இந்த பதிவில் காணப்போகிறோம்,தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள்..நம்மில் பலர் இரட்ச்சிக் பட்டு இருக்கிறோம்-ஆமென்,இரட்ச்சிபின் முதல் நோக்கமே இயேசுவை அறியாத ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது,ஆனால் வேதத்திலுள்ள சத்தியங்களை அறிந்த நமக்கோ யாரிடம்,எப்படி அந்த மீட்பின் செய்தியை அறிவிப்பது என்று தெரிவதில்லை,பல சமயங்களில் வாக்குவாதங்களுக்குள் சிக்குண்டு தவிப்பதுண்டு,இங்கு அத்தேனே பட்டணத்திலும் இதுபோன்ற கருத்து வேறுபாடு எழும்புகிறது ஆனால் அதை கையாழுபவர் நம்மிலும் சற்று தேரினவர் ஆம்,அப்போஸ்தலனாகிய பவுல் தான் அந்த நபர்,அவர் வாக்குவாதம் செய்த இடம் விக்கிரக ஆராதனைகாரர்கள் நிறைந்...