கேட்டதும்,கேளாததும்🤔

கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,இந்த பதிவின் வாயிலாக மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் கர்த்தருக்குள் பெரு மகிழ்ச்சியடைகிறேன்,இன்றைய தியானத்திற்கு ஆவியானவர் அருளின மறைவான மன்னா "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்க படும்" இந்த இறை வர்த்தை அனைவருக்கும் பரிச்சயமான வார்த்தைதான்,அநேகதரம் ஜெபிக்கையில் இந்த வசனத்தை நினைவுபடுத்தி நம்மில் பலரும் ஜெபிப்பதுண்டு,இன்றும் நமக்கு நன்கு தெரிந்த நபர்,வேதாகமத்தில் மட்டுமல்ல இந்த பூமியில் பிறந்த மனிதர்களில் எல்லாம் சிறந்த ஞானம் பெற்றவர்,கர்த்தருக்கென்ற முதல் ஆலயத்தை கட்டியவர் தேவாதி தேவனிடம் என்ன கேட்டார் என்பதை பார்க்கபோகிறோம்,அவர் யாரென்று இந்நேரம் தெரிந்திருக்கும் ஆம்,சாலமோன் ராஜவின் ஜெப விண்ணப்பத்தைதான் இன்று நாம் தியனித்து,சில காரியங்களை ஆவியானவர் உதவியோடு கற்றுகொள்ளபோகிறோம். எடுத்து வாசியுங்கள் 1 இராஜாக்களின் புஸ்த்தகம் 3ஆம் அதிகாரம், வேதாகமம் இல்லாத சகோதர சகோதரிகள் இந்த வசனத்தை கவனியுங்கள்.

"உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்". 

1 இராஜாக்கள் 3:9

இந்த சம்பவம் சாலமோனின் சொப்பனத்தில் தேவன் தரிசனமாகி 'உனக்கு என்ன வேண்டும் கேள்' என்று தேவன் கேட்டபோது சாலமோன் கேட்ட ஜெப விண்ணப்பம்,ஆம் பிரியமானவர்களே சாலமோன் இருந்த இடத்தில் இப்போது நீங்களும்,நானும் இருந்திருந்தால் தேவனிடம் என்ன கேட்டிருபோம்? சற்று சிந்திப்போம்! "கேளுங்கள்" என்று தேவன் கூறி விட்டார் என்பதற்காய் என்ன வேண்டும் என்றாலும்
 கேட்கலாம் என்று அர்த்தமில்லை, நாம் கேட்கும் காரியம் கர்த்தரின் சித்தத்திற்கு உட்பட்டதா என்று ஆராய்ந்து பார்த்து,மிகுந்த கவனத்துடன் கேட்க வேண்டும்,நமது தேவன் எரிச்சல் உள்ள தேவனாயும் இருக்கிறாரே! சரி இந்த வேண்டுதல் தேவ சித்தம் ஆனதா,சாலமோனுக்கு கிடைத்தது என்ன என்று பார்த்து நிறைவு செய்வோம்.

"உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 
இதுவுமன்றி நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை". 

1 இராஜாக்கள் 3:12,13

அன்பான வலிப மகனே,மகளே,சாலமோன் கேட்ட விண்ணப்பம் தேவனின் பார்வைக்கு மகிழ்ச்சி அளித்த காரணத்தால் அவன் கேட்ட ஞானம் மட்டுமன்றி ஐசுவரியத்தையும்,மகிமையும் தேவன் தந்தருளினார்,ஆம்,நம் ஆண்டவர் ஆசிர்வதிப்பதில் பாரபட்சமுள்ளவர் அல்ல,இந்த பதிவை ஜெபத்தோடு வாசியுங்கள்,மனதில் இதை வைத்து கொண்டு இனிமேல் ஜெபிக்கபோகும் காரியம் பரலோக தகப்பனுக்கு சித்தமான காரியமா என்று எண்ணி கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.

ஆமென்!   அல்லேலூயா!! 🤗😇🙂

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺