Posts

Showing posts from March, 2022

யுத்தநாள்-2 சர்வாயுதவர்க்கம் 🛡🗡

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர,சகோதரிகளே..பிதாவின் அன்பும்,நம் இரட்சகரான இயேசு கிறிஸ்து தரும் சமாதானமும்,பரிசுத்த ஆவியானவர் தரும் ஐக்கியமும்,விசுவாசமும் சதாகாலங்களும் உங்களனைவரோடும் இருப்பதாக-ஆமென்। என்னுடைய கடந்த பதிவினை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்,அதன் தொடர்சியை எனது அடுத்த பதிவில் பதிவிடுவேன் என்று சொன்னேன் அல்லவா! சரி,வாருங்கள் இன்று கிறிஸ்துவின் ஆவியானவர் நமக்கு அளிக்கும் போராயுதங்களை குறித்த காண்போம்,முதலாவது நீங்கள் அனைவரும் பிசாசுடனான நமது ஆவிக்குரிய யுத்தத்திற்கு தயாரா என்று சுயசோதனை செய்துபாருங்கள்,தயாராக உள்ள அனைவரும்,சர்வாயுதவர்க்கங்களை தரித்துகொள்ளுங்கள்,தகுதிபடாதவர்களோ உங்களை தேவனுக்கென்று ஒப்புகொடுத்து தகுதி படுத்திக்கொள்ளுங்கள் இதை தான் பரிசுத்த பவுல் பின்வருமாறு எபேசு பட்டணத்தாருக்கு  எழுதியுள்ளார் "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்".  எபேசியர் 6:11 'போர்' அல்லது 'யுத்தத்தில்' எதிரியை நாம் மேற்கொள்ள தரமான ஆயுதங்கள் அவசியம் அல்லவா? இன்...

யுத்த நாள்🛡🏹

Image
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே, இரட்சகரும் மீட்பருமான இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக-ஆமென் தேவனின் கிருபையால் மீண்டும் இந்த செய்தி பதிவின் வழியாக உங்களோடு உரையாடுவதில் மற்றற்ற மகிழ்ச்சி! இன்றைய தினத்தில் 'யுத்த நாள்' என்ற தலைப்பில் சில சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவியானவர் உதவி செய்துள்ளார்।ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி என் பதிவை தொடங்குகிறேன் "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்."  நீதிமொழிகள் 21:31 அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே இன்று நாம் பார்க்க போகும் யுத்தம் சற்று வித்தியாசமானது,அப்படி என்ன யுத்தம் என்ற சிந்தனையும் கேள்வியும் மனதில் எழுகிறதா? "மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு".  எபேசியர் 6:12 ஆம்,இதுதான் நான் உங்களோடு பகிர வந்த யுத்தம்,பிசாசின் அந்தகார வல்லமைக்கு எதிரான யுத்தம்,அவனுடைய தந்திரங்களுக்கெதிரான யுத்த...