யுத்த நாள்🛡🏹
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே, இரட்சகரும் மீட்பருமான இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக-ஆமென்
தேவனின் கிருபையால் மீண்டும் இந்த செய்தி பதிவின் வழியாக உங்களோடு உரையாடுவதில் மற்றற்ற மகிழ்ச்சி!
இன்றைய தினத்தில் 'யுத்த நாள்' என்ற தலைப்பில் சில சத்தியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவியானவர் உதவி செய்துள்ளார்।ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி என் பதிவை தொடங்குகிறேன்
"குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்."
நீதிமொழிகள் 21:31
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே இன்று நாம் பார்க்க போகும் யுத்தம் சற்று வித்தியாசமானது,அப்படி என்ன யுத்தம் என்ற சிந்தனையும் கேள்வியும் மனதில் எழுகிறதா?
"மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு".
எபேசியர் 6:12
ஆம்,இதுதான் நான் உங்களோடு பகிர வந்த யுத்தம்,பிசாசின் அந்தகார வல்லமைக்கு எதிரான யுத்தம்,அவனுடைய தந்திரங்களுக்கெதிரான யுத்தம்,அவனுடைய பொல்லாத ஆவிகளோடும்,சேனைகளோடும் உண்டான யுத்தம்,சுருக்கமாக சொல்லவேண்டுமானால் 'ஆவிக்குரிய போராட்டம் அல்லது யுத்தம்'.
பொதுவாக யுத்தம் ஒன்று வந்தால்,எதிரியை எதிர்த்து நிற்க ஆயுதங்கள் தேவைப்படும் அல்லவா,இங்கு நாம் செய்யும் யுத்தமோ பிசாசோடு! அவனை எதிர்க்கும் ஆயுதம் தான் என்ன? வாசிக்கும் உங்களில் சிலர் அதை கண்டுபிடித்திருப்பீர்கள்,அவ்வாறு கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்! கண்டுபிடிகாதவர்களுக்காக நானும் சொல்கிறேன்
" எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது".
2 கொரிந்தியர் 10:4
ஆம்,இங்கு நாம் பயன்படுத்த போகும் ஆயுதமும் ஆவிக்குரியவைகளே,அதன் வல்லமையே பிசாசு உண்டுபன்னின எல்லா அரண்களையும் நிர்மூலமாக்கும் என்று பரிசுத்த பவுல் தமது நிருபத்தில் குறிப்பிடுகிறார்,
கிறிஸ்துவால் தெரிந்துகொள்ளப்பட்டு,இரட்சிப்பை பெற்று,பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்ட ஒவ்வொரு தேவ பிள்ளைகளுக்கும் இந்த யுத்தத்தில் பங்குண்டு,இந்த நல்ல போராட்டதை பராகிரமசாலியாகவும்,பரிசுத்தத்தை காத்துகொண்டவர்களாகவும் போராடுவது மிகவும் அவசியம்।இதின் தொடர்சியாக வரும் எனது அடுத்த பதிவில் 'ஆவிக்குரிய போராயுதங்களை'குறித்து விரிவாய் காணலாம்,அதுவரை ஜெபத்திலும்,துதியிலும்,ஸ்தோத்திரத்திலும்,தேவ அன்பிலும் நிலைத்திருங்கள்!
உக்கிரைன்-ரஸ்சிய சமாதானத்திற்காக இறைவேண்டல் செய்ய மறவாதிர்கள்,தேவன் உங்களை யுத்த நாளுக்கென்று ஆயத்தம் செய்து,ஜெயத்தையும் கட்டளையிடுவாராக!
ஆமென்!!! அல்லேலூயா!!!😇🤗
உங்கள் அன்பும்,பாசமும் நிறைந்த சகோதரனும்,இயேசுவால் பிடிக்கப்பட்டவனுமாகிய
அ அஜய்
Comments
Post a Comment