பழைய மற்றும் புதிய துருத்தி🛢
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே,உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துகளும்,சமாதானமும்.இந்த 2022 ஆம் ஆண்டில் எனது முதல் பதிவை,பதிவிட செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள். ஒரு சில காரியங்களை நான் தியானிக்கும் போதும்,தேவ மனுஷர்களின் செய்திகள் மூலமாகவும் ஆவியானவர் எனக்கு உணர்த்தினார்,அதை உங்களுடன் இந்த பதிவின் வாயிலாக பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்,சற்று இந்த தேவ வார்த்தைகளை கவனியுங்கள்
"ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்: வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்".
லூக்கா 5:37
இந்த உவமையை இயேசப்பா கூறும் இடத்தை சற்று கவனித்தும்,ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் தியனித்தும் பார்த்தோம் என்றால்,அங்கு இயேசப்பாவின் சீஷர்களை சிலர் அதாவது அக்காலத்து வேதபாரகர்களும்,பரிசேயரும் குற்றபடுத்துவதை காணலாம்,எதை குறித்த குற்றசாட்டு என்று உற்று நோக்கினால் பழைய நியாயபிரமான முறைமைகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை என்ற குற்றசாட்டே,அதற்குதான் இயேசப்பா புதிய நியம்மங்கள் தன் வழியாய் வெளிப்பட்டு விட்டது அதனை பழையதோடு இணைக்க வேண்டாம் என்று பதில் கூறுவதை காணலாம்,அன்புக்குரியவர்களே நியாயப்பிரமாணத்தின் ஒரு எழுத்தும்,எழுத்தின் ஒரு உருப்பும் மாறாமல் பரலோக தகப்பனின் ஏக சுதனாகிய இயேசு கிறிஸ்து வழியாக ஆம் என்றும்,ஆமென் என்றும் நிறைவேறிவிட்டது,கிறித்துவை சொந்த இரட்சகராக கொண்ட நாமும் புதிய துருத்தியான கிறிஸ்துவின் விருந்தில்,புதிய திரட்ச்சை இரசத்தை பருக முற்படுவோம்,அப்போஸ்தல போதனையையும்,கிறிஸ்துவின் பிரமாணத்தையும் வாழ்வாக்குவோம்,பழையவைகளில் பரிசுத்த ஜிவியத்தை தேடாமல்,கிறிஸ்தவின் பணியை தொடர்ந்து பூமியில் அவர் வரும் காலம் வரை நிறைவேற்றுவோம். 'எல்லாம் புதிதானது' ஆமென்! இந்த பதிவை சில ஜெப குறிப்புகளோடு நிறைவு செய்கிறேன்
1.தேசத்தில் சமாதானம் நிலவவும்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவும்,திறப்பின் வாசலில் நிற்க வாலிப பிள்ளைகள் எழும்பவும் தேவனை நோக்கி மன்றாடுவோம்
2.துதிகளில் வாசம் செய்யும் தேவனை துதி பலிகள்,நன்றி பலிகளால் பிரியபடுத்துவோம்,தேசத்தில் கொரோனா திவிர அலை குறைய,உயர்சேதம் நடக்காமலும்,பொருளாதாரம் முடங்கமலும் இருக்கவும்,சபைகள் சரிவர செயல்படவும் பிராத்திப்போம்
3.பள்ளி,கல்லூரி மாணவர்களின் உடல் மற்றும் மன நலனுக்காகவும்,செல்போன் ,இணையதளம் ஆகியவற்றை ஞானமாய் பயன்படுத்தவும்,உலக மாயையான மதுபான,போதை வஸ்துகள்,ஆபாசம் முதலான காரியத்தில் வாலிப பெண் மற்றும் ஆண்பிள்ளைகள் சிக்காமல்,வாலிபத்தில் சிருஷ்டிகரை அறிய ஜெபிப்போம்
ஆமென்! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment