மோசம் போக்கும் ஓநாய்கள்🦊

கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,அவ்வப்போது இந்த பதிவின் வாயிலாக கர்த்தரின் சத்தியத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி,இன்றைய தினத்திலும் ஒரு எச்சரிக்கையின் செய்தியை குறித்து உங்களுடன் பேசும்படி ஆவியானவர் ஏவினபடியால் இந்த பதிவை எழுதியுள்ளேன்,ஆண்டவரின் வருகை சமிபமாக உள்ளது அதற்கான தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும்;ஆமென் என்றும் நிறைவேறிக்கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.இந்த நாட்களில் அதை குறித்து அநேகர் பேசுவதையும் காணலாம்,அதற்காக கர்த்தரை ஸ்தோத்திக்கிறேன் என்ற போதிலும் அதில் எவையெல்லாம் வேதத்தின்படி சத்தியம்,எவையெல்லாம் வேத புரட்டு என்பதை பகுத்தறிவதில் யார் ஜாக்கிரதையாய் இருக்கிறார்களோ இல்லையோ,கிறிஸ்தவர்களாகிய நாம் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம், அத்தகைய காரியத்தை குறித்துதான் உங்களோடு பேசும்படி ஆவியானவர் தூண்டினார். அந்த கருத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்து "மோசம் போக்கும் ஓநாய்கள்" என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன் தொடந்து படியுங்கள் பிரயோஜனமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன்.

' நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.'

அப்போஸ்தலர் 20:29

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களை சுவிசேஷம் சொல்ல அனுப்புகையில் ஓநாய் கூட்டத்திற்குள் ஆடுகளை அனுப்புவது போல அனுப்புகிறேன் என்று மிகுந்த கலக்கத்துடன் ஆனால் உலகத்தை சுதந்தரிப்பார்கள் என்ற விசுவாசத்தில் அனுப்பினார்.
ஆனால் இங்கு பவுல் கூறுகையில் 'நான் போனபின்பு,ஓநாய்கள் வரும் ' இதற்கு அர்த்தம் என்ன,உங்களுடன் நான் இருக்கும் வரை ஓநாய்களின் வஞ்சகத்தற்கு உங்களை தப்புவிப்பேன்,நான் போனப்பின்பு அந்த ஓநாய்கள் உங்களை மோசம் போக்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்கிறார்.இதையே தான் இயேசப்பாவும் நம்மிடம் சொல்லியுள்ளார் .

' கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.'

மத்தேயு 7:15

ஆட்டுதோல் என்பது ஒளியின் தூதரின் வேசத்திற்கு ஒப்பாக என்னலாம்,இவர்கள் கள்ள போதனைகளாலும்,தீர்க்க தரிசனங்களாலும் நம்மை(தெரிந்துகொள்ளபட்டவர்களையும் கூட) வஞ்சிப்பார்கள் அந்த வஞ்சனையை சோதித்தறியும் ஞானத்தை தேவ பிள்ளைகள் இந்த கடைசி காலத்தில் நாட வேண்டும்,இதன் இரண்டாவது பகுதியை விரைவில் பதிவிடுகிறேன்.

ஆமென்!   அல்லேலூயா!🤗😇

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺