நீங்கள் தேவனுடைய புத்திரர்கள்🤗
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே நீண்ட இடைவெளிக்கு பின் இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பேச கிருபை செய்த சர்வ வல்லவராம் நம் பரலோக தகப்பன் இயேசு கிறிஸ்துவுக்கு என் எண்ணிலடங்கா ஸ்தோத்திரங்கள்.
இன்று உங்களுடன் உரையாடுவதுகென்று ஆவியானவர் என்னை ஒரு அருமையான வேத பகுதியை தியனிக்க வைத்து,சில காரியங்களை உங்களுடன் பகிரும்படி கற்று கொடுத்தார்,வழக்கமாக ஒருசில வசனங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை தூண்டும் ஆவியானவர்,ஏன் இந்த வேத பகுதியை கொடுத்தார் என்று எண்ணியபடி தியனித்தேன் அப்போது சில காரியங்களை கற்றுக்கொண்டேன் அவற்றை இந்த பதிவின் வாயிலாக உங்களிடம் பகிர்ந்துள்ளேன்,சரி வாருங்கள் பதிவிற்குள் கடந்து செல்வோம்;
1.நீங்கள் தேவனின் புத்திரர்கள்:
' எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். '
ரோமர் 8:14
நீங்களும்,நானும் யாரால் நடத்தப்படுகிறோம் என்று சிந்திப்போமா ? சுய இச்சை,உலகம் தரும் மாயை,முதலிய அழிவுள்ள சிந்தனையால் நடத்தப்படுகிறோமா,அல்லது என்றும் அழிவில்லா நித்தியத்திற்குள் நம்மை நடத்தி செல்லும் பரிசுத்த ஆவியால் நடத்தப்படுகிறோமா? பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவ சித்தத்தில் நடத்துவார்,எனவே நாம் தேவனின் புத்திரர்களாய் இருப்போம்,அப்படி இருந்தால் பலன் என்ன?
'கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. '
ரோமர் 8:1
ஆம்,பிரியமானவர்களே ஆக்கினை தீர்ப்பு எனப்படும்,ஆத்துமா சந்திக்க இருக்கும் 'இரண்டாம் மரணம்' தேவனின் புத்திரர்கள் அதாவது பரிசுத்த ஆவியால் நடத்தபடும் நமக்கு இல்லை! இதைவிட நன்மை ஒன்று வேண்டுமா என்ன?
'மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்'.
ரோமர் 8:10
அடுத்ததாக சரிரம் பாவத்துக்கு மரித்துவிடும்,இதின் ஆழ்ந்த சத்தியம் நம் சரிரம் பாலத்தின் மரண பிரமாணத்திலிருந்து விடுதலை பெறும்;நம் ஆவியோ நீதியுடையதாய் என்னப்பட்டு நித்திய மகிழ்ச்சிக்குள்ளாக பிரவேசிக்கும்,இது தேவன் நம்மேல் வைத்த அளவுக்கடந்த கிருபையின் வெளிப்பாடு.
இன்னும் அநேக காரியங்கள் இந்த அதிகாரத்துள் புதைந்து கிடக்கிறது தேவனுக்கு சித்தமானால் இதன் தொடர்ச்சியை நாளை பார்கலாம்
ஆமென்! அல்லேலூயா!😇
Alleluyaah❤️😇💫
ReplyDelete