சோதனையின் பரிமாணங்கள்🙂

கிறிஸ்துவும் இரட்சகருமான இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட என் அருமை தேவ பிள்ளைகளே,உங்கள் அனைவரையும் இன்றைய பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்,பொதுவாக கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பமே சோதனையில் தொடங்கி ஜெயத்தில் முடியும் ஒரு பரிசுத்த பந்தயம் போன்ற வாழ்வு தான்,இதில் கவனத்துடன் ஓடவே அழைக்கப்பட்ட உள்ளோம் என்ற போதிலும் தடையாய் வரும் சோதனையில் ஜெயிக்க முதலில் அதன் பரிமாணங்களை அறிந்திருப்பது அவசியம் அல்லவா,அதை தான் இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவியானவர் திருவுளம் பற்றினார்,சோதனையை மூன்றாக நான் பகுத்துள்ளேன் 
1.அடிப்படை 2.இடைநிலை 3.உச்சக்கட்டம். இதில்,
இன்று நாம் அடிப்படை சோதனைகளின் தன்மையும்,அதை மேற்கொள்ளும் வழிகளையும் வேத வசனங்களில் இருந்து பார்க்கலாம்,யார் ஒருவர் என் கிறிஸ்தவ வாழ்வில் சோதனையில்லை என்பாரோ அவர் கிறிஸ்தவ வாழ்விற்குள் இன்னும் கடந்து வராத பெயர் கிறிஸ்தவர் எனலாம்,அடிப்படை சோதனையை இயேசப்பா சோதிக்கப்பட்ட அந்த நிகழ்வில் இருந்து உங்களுக்கு எடுத்துகாட்ட உள்ளேன்,தொடர்ந்து படியுங்கள்...

1.இயலாமையில் சோதிக்கப்படுதல்:

' சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். '

மத்தேயு 4:3

இந்த வாசனத்தை நன்கு தியனித்தோமேயானால், இயேசப்பா உபாவாசம் இருந்த காரணத்தால் பசியுற்றார்,அவர் இருந்த இடமோ உண்பதற்கு ஒன்றும் கிடைக்காத வனந்தரம்,இப்படி பட்ட வரட்சியான சூழ்நிலைக்குள் நாம் கடந்து வரும் போதுதான் சோதனைக்காரன் தன் சோதனையை ஆரம்பிப்பான் ,இது ஒரு கிறிஸ்தவன் சந்திக்க கூடிய அடிப்படை சோதனை 'இயலாமையில் சோதனை',நம்மிடம் இல்லை என்ற சூழ்நிலை வரும்போது பாவத்துக்கு நேராக நம்மை வழிநடத்தி செல்லும் படி பிசாசு விரிக்கும் முதல் வலை,ஜாக்கிரதையாக இயேசப்பா எப்படி அதை மேற்கொண்டாரோ அதுபோல 'தேவனின் ஒவ்வொரு வார்த்தைகளால் பிழைக்கும் படி' அதற்க்காக ஆவலுடன் காத்திருக்கவேண்டும்.

2.கர்த்தரைபோலவே பேசி வஞ்சிப்பான்:

"நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். "

மத்தேயு 4:6

இங்கோ தேவ வசனத்தை மேற்கோள் காட்டி வஞ்சனையாக தன்னை பணிந்துகொள்ள பிசாசு முயற்சி செய்வதை பார்கலாம் ,பல சமயங்களில் தவறான முறையில் தேவ வார்த்தைகளை புரட்டி நம்மை பிசாசு வஞ்சிப்பான்,தேவ அனுமதிக்காக நாம் காத்திருக்கும் போது இந்த சோதனை நமக்கு வரும்,அதை வேறுபிரித்தறியும் தெளிந்த ஞானமும்,ஆவியானவரின் உணர்த்துதலும் நமக்கு இருத்தல் அவசியம் அப்போது அவனை வெட்க்கப்படுத்த நம்மால் முடியும்.

3.ஆசையால் வசப்படுத்துவான்:

" நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். "

மத்தேயு 4:9

இது அடிப்படையில் உச்ச கட்ட சோதனை,ஆம் அன்பிற்குரிய சகோதர,சகோதரிகளே பரிசுத்த ஜிவியத்தில் பிசாசை எளிதில் மேற்கொண்ட பலர் விழுந்து போனது உலக செல்வங்களின்மேல் நாட்டம் கொண்டதே,அந்த ஆசையை பேராசையாக மாற்றுவான் பின்பு தன்னை சேவிக்கும் படி நம்மை இயலாமைக்குள் தள்ளி பாவத்தில் விழச்செய்து,நம் ஆத்துமாவை நஷ்டப்படுத்துவான்,உலகம் மாயை,நிலையற்றது,நமக்கு போதுமானதும்,வேண்டியதையும் தேவன் தருவார் போன்ற விசுவாசத்தில் பெலப்பட்டாலொழிய இந்த சோதனையில் ஜெயிக்க முடியாது.
இந்த மூன்றும் அடிப்படையாக கிறிஸ்தவ வாழ்வில் அடியெடுத்து வைத்த அனைவருக்கும் பொதுவாக வருவதான சோதனைகள்,அவற்றில் வெற்றி பெற தேவனின் கிருபையை வேண்டுவோம்.
ஆமென்!   அல்லேலூயா!😊




Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺