மோசம் போக்கும் ஓநாய்கள்-2

கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அருமை சகோதர,சகோதரிகளே கர்த்தருக்கென்று அனுசரிக்கப்படும் ஓய்வு நாளாகிய இன்று உங்கள் அனைவருடனும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்து பகிர்ந்து கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைகிறேன்,கடந்த பதிவில் ஆட்டுதோள் அணிந்து வரும் ஓநாய்கள் குறித்த சில காரியங்களை எச்சரிப்பின் செய்தியாக ஆவியானவர் உங்களுடனே என்னை பகிர செய்தார்,அதன் தொடர்ச்சியாக இந்த பதிவிலும் அந்த ஓநாய்களின் குணாதிசயங்கள் குறித்த சில பயனுல்ல தகவல்களை கர்த்தரின் வார்த்தையோடு பகிர்ந்துகொள்ள ஆவியானவர் என்னை தூண்டுகிறார்.

" உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். "

2 பேதுரு 2:1

1.கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளை நுழைப்பார்கள்:

முதலாவதாக,கள்ளபோதகர்களை கண்டறியும் முறையாக தலைமை அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு வழியாக தேவன் நமக்கு கற்றுதருவது,அவர்கள் வேதப்புரட்டுகளை நுழைப்பார்கள்,இங்கு வேதப்புரட்டு என்பது  வேதத்தில் உள்ள தேவனின் வார்த்தைகளையே அவமாக புரட்டி நம்மை மோசம் போக்குவதைக்  குறிக்கும்,அத்தகை உபதேசம் கேட்டுக்கேதுவாக இருக்கும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது,அவர்கள் அதை எளிதாக அல்ல தந்திரமாய் எவ்வாறு சர்ப்பம் ஏவளை மோசம் போக்கியதோ அவ்வாறே நுழைப்பார்கள் என்று வசனம் நம்மை எச்சரிக்கை செய்கிறது,அடுத்ததாக நம்மை விலை(தன் பரிசுத்த இரத்தத்தை) கொடுத்து மீட்ட இயேசுவை மறுதலித்து தங்களுக்கும்,தங்களை பின் பற்றுவோர்க்கும் அழிவை வர வைக்கிறார்கள்,குருடனுக்கு குருடன் வழி காட்டுவது போல இவர்கள் உபதேசம் இருப்பதாக வேதத்தில் நாம் வாசிக்கலாம்.

" பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; "

2 பேதுரு 2:3

2.பொருளாசையுடையவர்கள்:

இரண்டவதாக,கள்ள போதகம் அல்லது தீர்க்க தரிசனங்கள் சொல்லும் ஓநாய்களை கண்டறியும் முறையாக தேவன் நமக்கு கற்றுகொடுத்த காரியம்,அவர்களது குணாதிசயமான பொருளாசை;அவர்களுக்குள் அநேக கேட்டுக்குரிய சிந்தனைகள் காணப்பட்டாலும் தலையாய சிந்தையாக பொருளாசைக் காணப்படுமாம்,அவர்களது உபதேசமும் அதை சார்ந்தே இருக்குமாம் அதாவது புது,புது காணிக்கை திட்டம்,நன்கொடை,இன்னும் ஒரு படி மேலாக விசுவாசிகளை காணிக்கையின் அடிப்படையில் நடத்துவது இத்தகைய காரியங்களை உங்கள் சபையில் காண்பிர்களேயானால் இன்றே வெளியேறி விடுங்கள்,அதற்காக காணிக்கை கேட்பது தவறு என்று நான் கூறவில்லை,எவ்வாறு சபைகளில் காணிக்கை முறை இருத்தல் வேண்டும் என்றும் வசனம் உள்ளது.

'அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.'

2 கொரிந்தியர் 9:7

அதாவது காணிக்கை கட்டாயமாக்கப்பட கூடாது,தேவன் ஒருவனை உற்சாகமாக கொடுக்கும் படி ஏவுவாரானால் அவன் கொடுக்கட்டும்,அதிலும் அவன் தன் மனதில் நியமித்தபடி கொடுக்கவேண்டுமாம்,அதை போதகர் நியமித்தல் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியமாம், இப்படியிருக்க காணிக்கை திட்டத்தை எவ்வாறு தேவன் ஏற்படுத்திருக்க முடியும் சற்று ஞானமாய் சிந்திப்போம்.

"வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. "

2 பேதுரு 1:20

3.சுயதோற்றமான காரியங்களை பேசுவார்கள்:

இறுதியாக,கள்ளபோதகத்தையோ அல்லது தீர்க்கதரிசனத்தையோ உடையவர்கள் தேவன் ஒருகாலும் அருளாத,வேத சத்தியத்திற்கு உட்படாத காரியங்களை,தகாத முறையில் தங்கள் சுயசிந்தையில் இருந்து எடுத்து,தங்கள் அனுபவத்தின் மிகுதியால் ஞானமாய் நமக்கு போதிப்பார்களாம்,இந்த காரியங்கள் பார்பதற்கும்,கேட்பதற்கும் தேவன் அருளியது போல காணப்பட்டாலும் ஆவியில் அது சரியா என்று அறிவது தேவ பிள்ளைகளாகிய நமது கடமை,எனவே ஆவியானவர் கற்றுகொடுத்த இந்த காரியங்களை ஒரு நன்மைக்கேதுவான எச்சரியாக எடுத்துக்கொண்டு,ஜாக்கிரதையாக பரலோக ஓட்டத்தை ஓடும்படி இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆமென்!    அல்லேலூயா!😇🤗




Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺