பலவானை கட்டுங்கள்✊🏻

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உண்டாகும் கிருபையும் சமாதானமும் உங்கள் அனைவரோடும் என்றும் இருபாதாக,பிரியமான சகோதர சகோதரிகளே இந்த அருமையான நாளில் இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திக்க செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!
இன்றைய தினத்தில் ஒரு காரியத்தை குறித்து உங்களுடன் பேசும் படி ஆவியானவர் என்னை ஏவினார்,எனக்கு அவர் அருளின படி அவற்றை உங்களிடம் அளிக்குறேன்,இனிவரும் ஒவ்வொரு நாட்களுக்காகவும், ஆண்டவர் என்னை அதிகம் எடுத்து பயன்படுத்தும் படியாகவும் எனக்காக ஜெபித்துகொள்ள உங்களை வேண்டுகிறேன்.இந்த வேத வசனத்தை சற்று கவனியுங்கள் 

' பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.'

மாற்கு 3:27

"பலவானை கட்டுங்கள்" என்று சர்வ வல்லவர் உங்களிடம் கூறுகிறார்,யார் இந்த பலவான்,ஏன் இவனை நாம் கட்ட வேண்டும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பனவற்றை இந்த பதிவில் சுருக்கமாக எழுதியுள்ளேன்,
பலவான் என்பவன் இந்த உலகை தன் ஆளுகைக்கு கீழ்படுத்தி வைத்துள்ள சாத்தானை குறிக்கிறது,ஆதாமிடன் அளிக்கப்பட்ட இவ்வுலக ஆளுகை,கீழ்படியாமையின் நிமித்தம் பிசாசானவனின் ஆளுகைக்குட்பட்டது,இதின் மாய மயக்கத்தில் தான் இரட்சிக்க படும் முன் நாம் வீழ்ந்து கிடந்தோம்,அவரது இரக்கத்தால் மீட்கப்பட்ட நாம் அவனது ஆளுகையை அழிக்கவும்,கிறிஸ்துவின் இராஜியத்தை பூமியில் நிலைநிறுத்தவும் அழைப்பை பெற்றுள்ளோம்,
வசனம் அழகாக சொல்கிறது அவனை கட்டினாலொழிய அவன் பொருள்களை கொள்ளையிட முடியாது,அதாவது அவனால் பிடிக்கபட்ட ஆத்துமாக்களை இரட்சிப்பின் பாதையில் நடத்த முடியாது எனவேதான் அவனை கட்டும் படி ஆண்டவர் கூறுகிறார்,அவனை எவ்வாறு கட்டுவது என்று கேட்போமேயானால் அதற்காக தான் நம் நாவின் மேல் ஆண்டவர் அதிகாரம் கொடுத்துள்ளார்,இயேசுவின் நாமம் தான் அந்த அதிகாரம்,அதுவே அவனை கட்டும் கயிறு,அந்த நாமத்திற்கு தான் சாத்தான் நடுநடுங்குவான்,விசுவாசத்தோடு அவனை கட்டிவிட அவன் கொள்ளை பொருளான திரளான ஆத்துமாக்களை தேவனுக்கென்று அருவடை செய்யலாம்
எனவே தெரிந்துகொள்ளபட்ட நாம் அதின் மேன்மையை உணர்ந்து செயல்படுவோம் -ஆமென்! அல்லேலூயா!🤗

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺