பிதாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள்🛐

கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளே கடந்த நாட்களாக ஆவியானவரின் நடத்துதல் படி சில காரியங்களை தியானித்து அதை சுருக்கமாக இந்த பதிவுகள் வாயிலாக உங்களிடம் கொண்டு சேர்க்க கர்த்தர் கிருபை பாராட்டினார்,வசனங்களின் ஆழத்தை இந்த ஏழை அறிந்து கொள்ளும்படி இரக்கம் பாராட்டின தேவனுக்கு ஸ்தோத்திரங்கள். என்னை உங்கள் சொந்த சகோதரனாக,மகனாக பாவித்து உங்கள் ஜெபவேளைகளில் என்னையும் நினைதருளியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்! 
இயேசுவானவரின் பெரும்பாலான உபதேசம் பிதாவிடம் கேளுங்கள்,அவர் அதை உங்களுக்கு அருளிச்செய்வார் என்றவாறு அமைந்திருப்பதை பரிசுத்த வேதாகமத்தில் காணமுடியும்,அவ்வாறு கடைசி காலத்தில் இருக்கும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய வேண்டுதல்களாக இயேசப்பா கற்றுகொடுத்ததை இந்த பதிவில் காணலாம்,தொடர்ந்து படியுங்கள்....

" தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்; 
ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். "

மத்தேயு 9:37,38

[]முதலாவதாக நாம் பார்கபோகும் காரியம் 'அறுப்புக்கு வேலையாட்கள் வேண்டி விண்ணப்பம்' அதென்ன அறுப்பு காலம் என்று நாம் வேதத்தை தியனிப்போமானால் இயேசப்பா தமது சீஷர்களை வசனம்(சுவிசேஷம்) என்னும் விதையை உலகமெங்கும் சென்று அறிவிக்கும் படி அதாவது விதைக்கும் படி அனுப்பினார்,அந்த விதையானது பலரது கண்ணீரின் மத்தியிலும்,உபத்திரவத்தின் மத்தியிலும் விதைக்கப்பட்டு,ஆவியின் பின்மாரி அபிஷேகத்தால் நீர்பாய்ச்சி,உரம்போடப் பட்டு இன்று அறுவடைக்கென்று பயிராக்கப்பட்டுள்ளதை காணலாம்,அநேகரின் உள்ளம் அறுவடைகென்றும் கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் ஆயத்தமாக உள்ளது, அதாவது அறுப்பு மிகுதியாக காணப்படுகிறது ஆனால் அதை கெம்பிரத்தோடே அறுப்பதற்கோ ஆட்கள் குறைவு,எனவேதான் "பிதாவிடம் அதிக உத்தமமும்,உண்மையும் நிறைந்த ஊழியக்காரர்களை,தானியேல்,யோசேப்பு போன்று தேசத்திற்காய் திறப்பின் வாசலில் நிற்கும் வலிபமகன்களை,எஸ்தர் போன்ற இராஜ குமாரத்திகளை" தேவன் எழுப்ப வேண்டுமாய் விண்ணப்பம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

" பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். "

லூக்கா 11:13

[]இரண்டவதாக நாம் பார்க்க போகும் காரியம் 'பிதாவிடம் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ள வேண்டுங்கள்'
 கடைசி காலமானது மோசம் போக்கும் ஓநாய்கூட்டமும்,அந்நிகிறிஸ்துவின் ஆவிகளும் எழும்பி மக்களை இன்னும் ஒரு படி மேலாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் காலம்,சத்தியத்தை புரட்டுகிற காலம்,தேவனின் கோபாக்கினை வெளிப்படும் காலம்,விசுவாச துரோகங்கள் நேரிடும் கொடிய காலம்....இந்த நாட்களில் தேவனை உறுதியாய் பற்றி கொள்ள பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும்,அவரது உடன் இருப்பும் அவசியம்,ஏனெனில் அவரே சத்திய ஆவியானவர்,பெலப்படுத்தும் தேற்றரவாளன்,நம்மை குறித்து தேவன் முன்பாகவும்,இயேசப்பா முன்பாகவும் சாட்சி கொடுப்பவர்,விசுவாசத்தில் வேருன்ற செய்பவர் ஆகவேதான் "கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" 
என்று தேவன் வாக்களித்தார் அந்த வாக்குறுதிக்காக ஸ்தோத்திர பலிகளோடு இறைவேண்டல் செய்ய அழைக்கப்பட்டு உள்ளோம்,ஆவியானவரின் கண்டிப்பு நம்மோடு இருக்கும் வரை பாவம் நம்மை மேற்கொள்ளாது எனவே இந்த பிரதான காரியங்களை நினைவில் கொண்டவர்களாய்  ஜெபம் செய்வதில் ஜாக்கிரதை உள்ளவர்களாக செயல்பட முனைவோம்.

ஆமென்!  அல்லேலூயா!😇🤗

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺