சுவிசேஷம்-நம் கடமை☺
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,தேனிலும் இனிதான இயேசு நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்களும் சமாதானமும்...எனதருமை நண்பர்களே இந்த பதிவுகள் உங்கள் வாழ்வில் ஆண்டவரோடு நெருங்கி வர பயனுள்ளதாக இருக்கிறது என்றும் கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன் ....சரி கிறிஸ்தவனுக்கு மட்டும் அல்ல கிறிஸ்து இயேசுவே உலக பாவங்களை இரட்சிக்க இவ்வுலகில் அவதரித்த மனுசக்குமாரன் என்று விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்ததான தலையாய கடமையை பற்றி இந்த பதிவை அமைத்துள்ளேன்,அப்படி என்ன கடமையை ஆண்டவர் கொடுத்திருப்பார் என்று சிந்தனை எழுகிறதா? பெரிதாக ஒன்றும் இல்லை,அன்பு கட்டளை தான்,ஆனால் நம்மில பலர் தயங்கும் ஒரு காரியம் தான் அது,இந்த வேத வசனத்தை சற்று வாசியுங்கள் உங்களுக்கே புரியும்...
"அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ."
1 கொரிந்தியர் 9:16
நம்மில் எத்தனை பேர் நம் தலைமேல் விழுந்த இந்த கடமையை சரிவர முழு மனதோடு செய்கின்றோம்,சற்று சிந்திப்போம்...பல சமயங்களில் இதை பாரமாக கூட நாம் எண்ணுவதுண்டு இல்லையா! ஏன் இந்த எண்ணம் நமக்குள் தோன்றுகிறது என்று என்றாவது நினைத்ததுண்ட?
நமக்காக தன் இன்னுயிர் தந்து,பாவம் நீங்க நம்மை தமது பரிசுத்த இரத்தத்தை கிரயமாக கொடுத்து மீட்டெடுத்த இயேசப்பாக்கு நாம் ஏதாவது செய்ததுண்டா,இல்லை தானே!...அவர் செல்லமாக நம்மிடம் கேட்டது இது மட்டுமே,நீங்களும் நானும் பெற்ற இந்த இரட்சிப்பின் மகத்துவத்தை சொல்ல நாம் தயங்கலாமா?
சுவிசேஷம் என்பதற்கு அர்த்தம் 'நற்செய்தி' என்பதே,ஒரு நல்ல செய்தியை சொல்ல தயக்கம் காட்டலாமா,பெரிதாக ஒன்றும் சொல்ல போவது இல்லை...இயேசப்பாவை அறியாத மக்களுக்கு அவரை அறிமுகப்படுத்தப் போகிறிர்கள் இது கடினமா?
இன்று ஒரு உறுதி ஏற்போம் இந்த கடமையை கடமைக்கு செய்யாமல் முழு மனதோடும் ஈடுபாட்டுடனும் செய்வோம் என்று.
ஆமென்! அல்லேலூயா!😍
Comments
Post a Comment