இடுக்கமான வாசல் 😇🤗
கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர,சகோதிரிகளே,இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துவதில் எல்லை இல்லா பேரானந்தம்!
இன்றைய தினத்தில் நாம் பார்க்கபோகும் தலைப்பு பரலோகராஜ்யத்துடன் தொடர்புடையது,இடுக்கமான வாசல்:பொதுவாக நாம் வீடு கட்டும் பொழுது உள்ளே செல்லும் வாசலை விசாலமாக அமைப்பது நம் வழக்கமாய் இருக்கிறது,பின்னர் இந்த இடுகமான வாசல் எங்கே உள்ளது என்ற கேள்வி எழலாம்,பின் வரும் வேதவசனத்தை சற்று கவணிப்போம்
இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
மத்தேயு 7:13
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
மத்தேயு 7:14
நாம் இதில் எந்த வாசலில் பிரவேசிக்கிறோம்? அநேகர் விசாலத்தை நோக்கமாய் கொண்டு கேட்டுக்குள் பிரவேசிப்பவர்களாய் இருக்கிறோம்,இறுதியில் மிஞ்சுவது அழுகையும், புலம்பலுமே .
இந்த உலகத்திற்கு உரியவராய் நாம் வாழும்வரை யாரும் நம்மை பகைபதில்லை,பரலோக ராஜ்யத்தின் சத்தியத்தை அறிந்து அதை வாஞ்சிக்கும்போதே வஞ்சிகவும்,பகைகவும் ஆரம்பிக்கிறது
இது ஒன்றும் புதிதல்லவே நம் ஆண்டவர் இயேசுவும் அவ்வாறே பகைக்கபட்ட்ர்,இறுதியில் அவர் உலகத்தையும்,அதின்
அதிபதியாகிய பிசாசையும் ஜெயமெடுத்தார்,இந்த உலகம் அவனுக்குரியதாய் இருப்பதலே நாம் பகைக்கபடுகிறோம்,பொன்னும்,வெள்ளியும் புடமிட்டபிறகே ஆபரணம் ஆவது போல இந்த கொஞ்சகால பாடுகளும் அவ்வாறே !
இதற்கான பலனாய் நித்திய ஜீவன் என்னும் அழிவில்லா பரிசை நம் பரமதகப்பன் சித்த படுத்தி உள்ளார் என்பதை நினைவில் கொண்டு இடுக்கமான வாசலில் பிரவேசிக்க ஆயத்தபடுவோம்.
Comments
Post a Comment