விடுதலையின் தேவன்

கிறிஸ்துவுகுள் என் இனிய சகோதர,சகோதிரிகளே உங்களுக்கு உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சமாதானம் உண்டாவதாக,
 என் இன்றைய தலைப்பில் தேவன் தருவதான நித்திய விடுதலை குறித்த சில தகவல்களை பகிரவிருக்கிரறேன்,பொதுவாக யாருக்கு விடுதலை தேவை; இந்தியாவிற்கு வெள்ளையனிடம் இருந்து விடுதலை கிடைத்தது,அவ்வாறு ஒரு அடிமை தனத்தில் இருந்து பின் திரும்புவதே விடுதலையாம், இந்த வரிசையில் நம் ஆண்டவர் நமக்கு எதிலிருந்து விடுதலை கொடுத்தார் நாம்தான் இப்போது சுதந்திரவாளிகளே என்று தோன்றலாம்
 "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

யோவான் 8:34
ஆம் இப்போது புரிந்திருக்கும் என்று என்னுகிறேன் ,நாம் சுதந்திரவாளிகளாய் இருந்தும் அவனவன் உடன்பட்டு செய்கின்றதான பாவமே நம்மை ஆளுகின்றது,நம்மில் ஒருவனும் நம்மிடம் பாவம் இல்லை என்று கூற இயலாது,இந்த அடிமை தனமே நம்மை பிணியாலர்கள் ஆக்கி,நம்மை நித்தியஜிவன் அடைய தடை செய்கிறது
'பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.'

ரோமர் 6:23
இந்த நித்திய ஜிவனை நாம் அடையும் பொருட்டே இயேசு மனுவாய் அவதரித்தார்,நம் பாவம் போக்க தம் இன்னுயிர் தந்தார்,அவர் தழும்புகளாளே சுகமானோம்.அவர் சிந்திய இரத்தம் பாவமன்னிப்புக்கென்று பூமியிலே சிந்தப்பட்டது.
  அவர்மேல் விசுவாசம் கொண்டு பாவ அறிக்கை செய்து,அதற்கு மனம் வருந்தும் யாவருக்கும் பரிசுத்த ஆவி என்னும் தேற்றவாலனை வாக்களித்துள்ளார்,எனவே 

 'சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.'

யோவான் 8:32

'ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,'

யோவான் 8:36
பாவத்திற்கு மரித்தவர்களாய்,கிறிஸ்துவோடு நித்திய வாழ்வில் உயிர்ப்படைவோம்,பரிசுத்த ஜிவியத்தை காத்து கொள்வோம்,
நாள்தோறும் வேதத்தை தியானித்து,ஆவியானவர் அருளும் சத்தியத்தை அறிந்து கொண்டு நித்திய வாழ்வை சுதந்திரிப்போம்.சத்தியம் நம்மை சகல பாவம்,பலவீனம்,நோய்களிலிருந்து விடுதலை ஆக்கட்டும்
ஆமென்! அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺