புதிய உடன்படிக்கையின் பலி
சர்வாங்க தகனபலியும்,நம் பரிகாரியும்
நம் ஆண்டவர் இயேசுவுக்குள் பிரியமான அன்பு உள்ளங்களே கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துவதில் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ,நம் தாய்நாடகிய இந்தியா இந்து சமயம் தழுவிய நாடு என்பது நாம் அறிந்தது, இங்கு ஆயிரம்,ஆயிரம் கோடி தேவர்கள் உண்டு என்பதும் நிதர்சனமே
பலி செலுத்தும் மரபு ஆதி முதல் உள்ள மரபே,அது அனைத்து சமயத்திலும் பின் பற்றுவார்கள் ஆதியிலே பழைய ஏற்பாட்டிலும் பலவித பலிகள் செலுத்த பட்டன தகனபலி,பாவ நிவர்த்தி பலி என பல உண்டு,இவைகளை ஒரு பரிகாரமாக செலுத்தினார்கள்,இன்றும் நம் வழக்கத்தில் இவை உண்டு
ஆம்,நண்பர்களே பாவம் செய்தவர்கள் பலி செலுத்துவது முறையே சரி, புதிய ஏற்பாட்டிலும் ஒரு பலியுண்டு யாருக்கெல்லாம் அது தெரியும்? ஆனால் இந்த பலி சற்று வித்யாசமாய் பாவிகளால் செலுத்த படாமல் யாதொரு குற்றமும் அறியாத ஆட்டுகுட்டியால் நிறைவேற்றப்பட்டது ஆம்,நீங்கள் நினைப்பது சரி தான், நம் ஆண்டவர் இயேசு செலுத்திய கல்வாரி பலி தான் அந்த பலி,இது ஒரு தனிமனித பாவநிவர்தி அல்ல இந்த ஒட்டுமொத்த உலக மீட்புகாக நம் மீட்பர் தம்மையே கொடுத்து இரட்சித்த மீட்பின் சர்வாங்க பலி,
" ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
யோவான் 15". இது நம் ஆண்டவர் சொன்ன பொன்மொழிகள்,இவ்வளவாய் நம்மை நேசிக்கும் தெய்வம் இந்த முப்பத்திமுக்கோடி தேவர்களில் உண்டோ? சிந்திப்போம் ஒருவிசை
நாம் நீதிமான் ஆகும்படிக்கு பாவம் அறியாத நம் ஆண்டவர் பாவமாக்கபட்டார் அவரது பரிசுத்த இரத்ததால் பரிசுத்தமாக்கபட்ட நம் நிலை என்ன? சிந்திப்போம் நமது ஜிவியத்தில் பரிசுத்தம் வெளிபடுதா?,அவர் இந்த நொடி வருவார் என்றால் ஆயத்தமா?
நம்மை அவர் கேட்பது ஒன்றுதான் "என்னை நேசிக்கின்றாயா?" நம் பதில் என்ன?
' சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.
1 கொரிந்தியர் 9:16'
இதுபோல நம்மில் எத்தனை பேர் கூற முடியும் எழுப்புதலில் நம் பங்கென்ன?
கடைசிகாலத்தில் இருக்கும் நாம் ஆயத்தபடவும்,படுத்தவும் ஜெபத்தில் பாரபடுவோம் எழும்பி பாராகசித்து உலகை கலக்குவோம்
ஆமேன்! அல்லேலூயா!😍
Comments
Post a Comment