விதை🌱
கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலும்,அவரது மாபெரும் இரக்கத்தினாலும் இந்த கடின காலத்திலும் இன்னாள் மட்டும் கடந்து வந்துள்ளோம்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்றைய தினத்தில் உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான காரியத்தை குறித்து தியனிக்கலாம்,தியனத்திற்கென்ற இன்றைய தலைப்பு 'விதை',இந்த வேத வாக்கியங்களை கவனியுங்கள்
"விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்".
மாற்கு 4:14
இந்த வசனத்தை கண்டவுடனே என்ன காரியத்தை குறித்து தியானிக்க போகிறோம் என்று கண்டுபிடித்திருப்பீர்கள்,வாழ்த்துக்கள்! ஆம்,விதைப்பவன் உவமையே.விவசாயம் பற்றி நமக்கு நன்றாக தெரியும்,வேதம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்திருக்கிறது,எனவேதான் உவமைகளும் அதை சார்ந்து இருந்தன,விதைப்பவன் எதை விதைகிறானாம்? விதையாகிய தேவ வசனத்தை.
ஏன் வசனத்தை விதைக்கவேண்டும்? :
சுவிசேஷம் அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை,அந்த கடமையை முழுமனதோடு ஆற்ற வேண்டும்,நாம் சொல்லும் சுவிசேஷம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,எனவேதான் வசனத்தை விதைக்கும் படி இயேசப்பா கற்றுகொடுத்தார்,விதையானது விதைக்கப்பட்ட நாளில் தன் பலனை தராவிட்டாலும்,சில வருடங்களில் கனி தரும் நல்ல விருட்சமாக பரவி பலருக்கும் பலன் தரும்,அப்படியே நாம் விதைக்கும் விதமும் இவ்வாறே அமையவேண்டும்.
எங்கு,எப்படி விதைப்பது? :
"சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது".
மாற்கு 4:8
எல்லா நிலத்திலும் எல்லா பயிர்களும் வளராது,எங்கு எதை விதைத்தால் பயிராகுமோ அங்கு தான் அதை விதைக்கவேண்டும்,உதாரனமாக ஆரஞ்சு மரத்தை அரக்கோணத்தில் வளர்பது கடினம் அல்லவா,அதுபோல நல்ல நிலமாகிய மனதை கண்டுபிடிப்பது அவசியம்,அந்நிலம் பண்படுத்த பட வில்லை என்றால் முதலில் ஆயத்த பணிகளை செய்து பின் விதைத்தல் வேண்டும் அப்போது அது விருதாவாகாமல் பலன் தரும்.
யார் விதைபவன்,அதின் பலன்:
கிறிஸ்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்ட அனைவருமே விதைப்பவர்களே! சுவிசேஷ சேனைகளாகி பூமியெங்கும் பரவி தேவ வசனத்தை விதைப்பது நம் கடமை,அதன் பலன் தேவனுக்கென்று ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படும்,அது பொருட்டு பரலோகத்திரல் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்,விதைத்த நமக்கோ பரலோகத்தில் பொக்கிஷம் ஆயத்தமாய் இருக்கும்,மறுமையில் நம் பலன் மிகுதியாய் இருக்கும்.
இந்த உவமையில் இன்னும் ஆயிரமாயிரம் ஆவிக்குரிய பொக்கிஷங்கள் புதைந்துள்ளது,உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்,பரலோக இரஜ்ஜியத்தை கட்டும் பணியில் பங்குபெறுவோம்.
ஆமென்! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment