ஆசிர்வாதங்களும்🙇 சாபங்களும்👈

கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனது அன்பு சகோதர,சகோதரிகளே அருமை இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் எனக்கு மற்றற்ற மகிழ்ச்சி,இன்றைய தியனத்திற்கு என்று நான் எடுத்த தலைப்பு சற்று ஆராய்ந்து உணரவேண்டிய தலைப்பு,ஆராய்ச்சி என்ற உடன் நீங்கள் ஏதோ அறிவியல் ஆராய்ச்சி என்று எண்ண வேண்டாம்,
ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் பரிசுத்த வேதத்தில் உள்ளதான மகத்தான மறைபொருளை அறிந்து கொள்ளும் முறையையே ஆராய்ச்சி என்றேன்.சரி,தலைப்பிற்குள் கடந்து செல்வோம்;
 'ஆசிர்வாதங்களும், சாபங்களும்'  வேதத்தில் குறிப்பாக பழைய ஏற்பாட்டு காலக்கட்டத்தில் இஸ்ரவேலரை பல வகையில் தேவன் ஆசிர்வதித்ததையும்,பலத்த கரத்தால் எகிப்தியரின் அடிமைப்பிடியிலிருந்து மீட்டு கொண்டு வந்ததையும் காணலாம்,பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டின் நிழலாட்டம் என்று சொல்ல கேள்விபட்டிருகிறோம் அல்லவா,அது நிதர்சணமே! இன்றும் நம்மை தேவன் ஆசிர்வதிக்க விரும்புகிறார்,ஆனால் அதற்கு முன் அந்த ஆசிர்வாதங்களுக்கு நாம் தகுதி பெறும்படி நம்மை புடமிட்டு பார்கிறார்,நாம் சுத்தமான வெள்ளி என்று விளங்கிய பின் ஆசிர்வதிக்கவே ஆசிர்வதிக்கிறார்! ஆனால் அந்த ஆசிர்வாதத்தை நாம் தவறாக பயன்படுத்தினால் அது சாபமாக மாறும் என்பதும் வேதத்தில் உள்ளது,இதை குறித்தே இந்த பதிவு

"என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்".

யாத்திராகமம் 20:6

என் மீது அன்பு கூர்ந்து கற்பனைகளை கைக்கொள்ளுங்கள் என தேவன் கூறுகிறார்,இந்த கற்பனைகளில் தலையாய கற்பனைகள் நமக்கு உண்டு

"விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது".

ரோமர் 13:9

அன்பாய் இருங்கள் என்பதே அந்த கற்பனை,அன்பு சகல பாவத்தையும் மூடும்,நாம் நிற்பது அவர் கிருபை என்றால் நிலைத்திருப்பது அவர் நம்மேல் கொண்ட அளவற்ற அன்பும்,இரக்கமுமே! தேவனிடத்தில் நாம் அன்பு கூறுவது போல நமக்கு அடுத்திருபவர்களிடமும் அன்பு கூற வேண்டும் என்பதையே தேவன் விரும்புகிறார்,இந்த அன்பை நாம் தவறாக, நமது சுயநலத்திற்கு என்று பயன்படுத்துகையில் அது சாபத்தில் முடியும்,"மகனே! நான் உன்னை நேசித்தேன்,உன்னை மன்னித்தேன்;நீ செய்தாயா?" என்று தேவன் நம்மை கேட்டால் என்ன பதில் கூறுவோம்,எனவே கூடுமட்டும் அன்பாய் இருப்போம்,ஆசிர்வாதங்கள் நம்மை தொடரும்.

ஆமென்! அல்லேலூயா!
 




Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺