கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள்😊
ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்,அனைவரும் உங்கள் விசுவாச சுகவாழ்வில் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நம் அனைவருக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு சஞ்சலத்தில் தேவனை துதிப்பதை பார்க்கிலும் ஆசீர்வாதத்தில் அதிகமாய் துதிப்போம்,இது மனித இயல்பே,மாறக துக்கத்தில் தேவனிடம் அதிகமாக புலம்பத்தான் செய்வோம் அப்படிதான,ஆனால் பரிசுத்த வேதாகமம் இடுக்கனிலும்,இன்னலிலும் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சியுடன துதிக்க நம்மை தூண்டுகிறது,அதெப்படி துன்பவேலையில் துதிக்க முடியும் அதுவும் மகிழ்ச்சியுடன்,சுத்த பைத்தியகாரதனமா தோன்றலாம் . பக்தன் ஒருவன் இவ்வாறு கூறுகிறான்
'அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.'
ஆபகூக் 3:17,18
இந்த மகிழ்ச்சி எவ்வாறு உண்டாயிருக்கும்? அதிகம் யேசிக்க வேண்டாம்,எல்லாம் விசுவாசமே! அந்த விசுவாசம் நம்மில் ஏன் இல்லை ? சற்று சிந்திப்போம் நமக்கு வாக்குதத்தம் செய்தவர் உண்மை உள்ளவர் அல்லவா,அதை அவர் நிறைவேற்றும் அளவும் நம்மை கைவிட மட்டார் இதை முதலில் மனதில் நிறுத்திக் கொள்வோம் ,
தேவன் நம்மிடம் கூறுவதாவது,
' நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.'
ஆதியாகமம் 28:15
வாக்குமாறதவர் ஏற்ற நேரத்தில் காரியத்தை வாய்க செய்வார் ஆகவே இறைவேண்டலில் இனி 'கர்த்தருக்குள் மகிழ்ந்து இருப்போம்'
அவரே நம்மை பொறுப்பேற்று நடத்தட்டும்.
ஆமென்! அல்லேலுயா!
Comments
Post a Comment