புளித்த மாவு 🙄

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,நான் எழுதிய இக்கட்டுரைகள் உங்க கிறிஸ்தவ வாழ்விற்கு பயனுள்ளதாக இருக்கும் என கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன் .
இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு 'புளித்த மாவு' இதை குறித்த அனேக சத்தியங்களை ஆவியானவர் எனக்கு கற்றுதந்தார் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனதாய் இருக்கிறேன்,ஜெபத்தோடும் கவனத்தோடும் வாசியுங்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள்,சரி வாங்க தலைப்புகுள்ள போகலாம்
புளித்த மாவு என்னும் பதத்தை வேதாகமத்தில் இரண்டு விதமாய் கையால பட்டிருப்பதை காணலாம்
முதலாவது:

" நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே". 

1 கொரிந்தியர் 5:7

இங்கு புளித்த மாவு என்பது நமது பாவத்தை குறிப்பதாய் இருக்கும்

"ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." 
 
1 கொரிந்தியர் 5:8
 
நம் உள்ளே இரட்ச்சிப்பிற்கு தடையாய் இருந்த பாவ சுபாவத்தை இயேசு தம் மரணத்தாலும்,பரிசுத்த இரத்ததாலும் புதிய மாவாக பிசைந்துள்ளார்,எனவே அதை காத்து கொள்வது நம் கடமை,பரிசுத்தத்தை கத்துக்கொள்வது குறித்த சத்தியத்தை கர்த்தர் சித்தத்தில் விரைவில் பகிர்கிறேன். 

"இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்."

மத்தேயு 16:6

'அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச்சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.'

மத்தேயு 16:12

அதுபோல விக்கிரக ஆராதனை செய்பவர்களின் உபதேசம்,ஆவியானவர் நடத்துதல் இல்லாத உபதேசத்தை குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அந்த புளித்த மாவு,புது மாவாகிய நம்மை புளிப்புள்ளவர்கள் ஆக்காதபடிக்கு கவனமாக இருப்போம்.

இரண்டாவது:

'பரலோகராஜ்யம், புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.'

லூக்கா 13:21

அதேப்படி என்றால் நம்மில் இருக்கும் விசுவாசம்,ஆவிக்குரிய கனிகளும்,வரங்களும் நம்மை கொண்டு மற்ற அனைவருக்கும் பரவவேண்டும்,இதுவே மெய்யான எழுப்புதல் கிறிஸ்துவின் ஆவி உடையா நாமும் அவரை போல நடப்போம்.
ஆமென்! அல்லேலூய!



Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺