மரணம் மரித்தது🤔

கிறிஸ்து இயேசுவின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனதருமை தேவப் பிள்ளைகளே,உலக இரட்சகராம் இயேசு நாமத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக.
வேதம் இவ்வாறாக கூறுகிறது:
   'மரணமே உன் கூர் எங்கே,பாதாளமே உன் ஜெயம் எங்கே'
ஆதியிலே தேவன் உலகை படைத்தபோது மனிதனை சிரஞ்ஜிவியாகதான் படைத்தார் அதாவது மரணத்தின் கூர் அப்போது இல்லை,பின் ஆதி பெற்றோரின் கீழ்படியாமையின் விளைவாக,மரணம் நம்மை ஆட்கொண்டது,அதைதான் ரோமர்க்கு எழுதிய நிருபத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,'பாலத்தின் சம்பளம் மரணம்' ஆனால் இவ்வுலகில் தேவன் கொண்ட கிருபையால் நமக்கு இரண்டாம் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இது அனைவருக்கும் பொதுவாக கிடைக்காமல் விசுவாசம் உள்ளோர்கே கிடைத்தது,..புரியவில்லையா?..
நம் ஆண்டவர் ஒருவரின் கீழஜபடிதலால்,கீழ்படியாதலில் தலை தூக்கிய பாலத்தின் கூர் ஜெயமாக விழுங்கப்பட்டது,பாதாளத்தின் வாசல் என்றும் மேற்கொள்ளாதவாறு அந்த கிருபை நம்மை இரட்சித்தது அதுதான் கல்வாரி தியாகம்,சகல பாவமும் அந்த பார சிலுவையில் இயேசுவின் இரத்தத்தால் நீக்கப்பட்டது,முலு மனதோடு இதை ஏற்றுகொள்வோர்க்கு மரணம் தங்கள் வாழ்க்கையின் பரிசுத்த ஓட்டத்திற்கு கிடைத்த ஓய்வு,அவர்கள் அவரது வருகைக்கு எதிர்கொண்டு வரும் காலமளவும் நித்திரை அடைவார்கள்,சாவுக்குரிய இந்த சரிரம் சாவாமையை தரித்து கொள்ளும்...எனவே மரணம் நம்மை மேற்கொள்ளவில்லை மாறக பரலோகத்திற்கு நாம் சென்று சேர பயண சீட்டு என்பதை மனதில் கொண்டு தேவ சித்தத்தை பூமியில் செய்ய முயல்வோம்.
ஆமென்! அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺