பாவமும்,அடிமைத்தனமும்☠

கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளே...கிறிஸ்துவே தேவன் என்றுணர்ந்த தேவபிள்ளைகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
கிறிஸ்தவன் மட்டும் அல்ல,உலகில் மனிதனாய் பிறந்து,தான் மனிதன் தான் என்ற உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டிய தலைப்பைதான் உங்களிடம் எடுத்து வந்துள்ளேன்,தலைப்பை படித்த பின்புதான் கடந்து வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்,சரி 'பாவம்' என்றால் என்ன? கவலைபடாதீர்கள் கண்டிப்பாக நாம் அதைத்தான் சுருக்கமாக பார்க்கபோகிறோம்,இதை தொடர்ந்து படிக்கும் முன்னால் பாவத்தை பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்,செய்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.
பாவம்-ஆண்டவரோடு நாம் கொண்டுள்ள உறவில் விரிசல் உண்டாக்கும் காரியம்,அது சிறியதோ,பெரியதோ  தேவன் மனதை துக்கப்படுத்துமேயானால் அது 'பாவம்'.
சுருக்கமாக சொன்னால் "தேவ சித்தத்திற்கு புறம்பாக நாம் செய்யும் எந்த காரியமும் பாவமே!"
சரி பாவம் செய்த,அல்லது செய்யும் நாம் நாமாக இவைகளை செய்வதில்லை என்கிறது வேதாகமம்,

"எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 

ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. "

ரோமர் 7:15,17
சரி பாவம் நம்மை எப்போது ஆட்கொள்கிறது,எப்போது நம்மை மேற்கொள்ளகிறது,நாம் எப்போது அதற்கு அடிமை ஆகிறோம் என்ற கேள்வி நமக்குள் இருக்கிறதல்லவா

'பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.'

யாக்கோபு 1:15
பாவம் தோன்றும் இடம் இச்சை,அது பெலனடைந்து பாவமாக மாறும்,இது நம்மையும் நம் அவயங்களையும் மேற்கொள்ளுகையில் நாம் அதற்கு அடிமையாவோம்,இதிலிருந்து நாம் விடுபடவே பரலோக மகிமையை விட்டு சர்வவல்லமையுடைய தேவன் மனிதனாய் பூமிக்கு வந்தார்,அவர் சிந்திய இரத்தம் நம்மை சகல பாவத்திலிருந்தும் மீட்டு தேவனோடு நம்மை ஒப்புறவாக்கும்,

' ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள், '

யோவான் 8:36
உலக பிரகாரமாக தற்காலிக விடுதலை பெறலாம் ஆனால் மெய்யான விடுதலை இயேசப்பா தவிர யாராலும் தர இயலாது,அவர் எதிர்பார்ப்பது நாம் அவரின் உதவிக்கு ஏங்குகிறோமா,அவரை தேடுகிறோம,பாலத்தின் அடிமைபாட்டில் விடுபட நினைகிறோம என்பவைகளையே,வசனம் இவ்வாறாக கூறுகிறது: அவரை நோக்கி உண்மையாய் கூப்பிட்டால் அவர் சமிபமாக இருப்பாராம்,விடுதலை தருவாராம்.
இன்று இதை வாசிக்கும் நீங்களும் சரி இதை எழுதும் நானும் சரி இதை எழுத தூண்டிய ஆவியானவரிடம் நம்மை ஒப்புகொடுப்போம?
சங்கீதகாரனை போல குற்றம் நீங்க என்னை கழுவும் ஆண்ஞவரே என்று அர்பணிப்போமா? 
குமாரன் நம்மை விடுதலை ஆக்குவார்-விசுவாசத்துடன் ஒப்புக் கொடுங்கள்,ஒப்புறவாகுங்கள்.
ஆமென்! அல்லேலூயா!😇🤗





Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺