நிலைவரமான ஆவி🕊🕊

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,இயேசு அப்பாவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்துகிறேன்.
நாம் வாழும் இந்த நாட்கள் கடைசி நாட்கள்,தீர்கதரிசனங்கள் நிறைவேறும் நாட்கள்,ஆண்டவரகிய இயேசுவின் வருகை சமிபமாய் உள்ள நாட்கள்...இதை நீங்கள் வசிக்கும் வேலையில் கூட அது அரங்கேரக்கூடும் ......ஆயத்தமாவோம்.
கடைசி நாட்களின் மிக முக்கிய அடையாலமாய் மாம்சமான யாவர்மேலும் ஆவியானவர் ஊற்றப்பட்டு நம்மை அவர் வாசம் செய்யும் ஆலயம் ஆக்கியுள்ளார் கர்த்தருக்கு நன்றி! அவ்வாறு ஆவியானவர் நம்மில் வாசம் செய்யும்போது பல வரங்களை சூழ்நிலைக்கேற்ப பகிர்ந்தளிக்கிறார்

"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்."

ஏசாயா 44:3

இவ்வாறு நாம் பெற்றுகொண்ட வரங்களில் நாம் நிறைவுள்ள பாத்திரமாய் அனைவருக்கும் பயனபடவேண்டும் என்பதே கர்த்தர் சித்தம் 

' தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல'.

ரோமர் 8:9

ஆகவே நாம் கிறிஸ்துவுக்குரியவராக ஆவியின் அபிசேகமும்,வரங்களும்
அவசியம்,சரி அது பிறருக்கு அதாவது கிறிஸ்துவை அறியாத சகோதர,சகோதரிகளுக்கு எவ்வாறு பயனுள்ளதாக அமையும்,வசனம் இவ்வாறு சொல்கிறது,

' நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; '

1 கொரிந்தியர் 14:12

இதில் தேறுதல் என்று எதை குறிப்பிடுகின்றார், 'செய்வன திருத்த செய்' என்ற வழக்கு மொழி உண்டு அதுபோல தான் இந்த தேறுதல் 
அந்நியபாஷையில் பேச நாம் அனைவரும் விரும்புவோம் அதனால் கிறிஸ்துவை அறியாதவன் இரட்சிக்கபட கூடுமோ,இல்லை நம் உள்ளார்ந்த மனிதன் பெலனடைவான்,ஆவியோடும்,கருத்தோடும் ஜெபம் செய்வதில் கவனமாய் இருக்கவேண்டும்.

"அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். "

1 கொரிந்தியர் 14:13

ஏனென்றால் நாம் அவ்விசுவாசிகளுக்கு பைத்தியமாக தோன்றி விசுவாசம் அவமாகும் படி நடக்க கூடாதே,தீர்கதரிசனம் சொல்லும் வரத்துகாக ஆசை வேண்டும்,அது அனேகரை விசுவாசத்தில் பெலபட செய்யும்,நாம் பெற்ற வரம் விசுவாச விருத்திக்கு அல்லாமல் விருதாவாய் போக காரணமாக கூடாது.
ஆமென்! அல்லேலுயா!😊
 





Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺