மனமாற்றமே பிரதானம்☺
கிறிஸ்து இயேசுவின் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,விசுவாசமுள்ள தேவப்பிள்ளைகளே,கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்,எனக்காக நீங்கள் செய்கின்ற ஜெபம் கிறிஸ்துவுக்குள் என்னை இன்னும் ஆழமாய் வேரூன்ற செய்கிறது,அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.....என் நண்பர் ஒருவர்,அவர் கிறிஸ்துவை அறியாத சகோதரர் அவர் இவ்வாறக கிறிஸ்தவத்தை விமர்சித்தார், "நீங்கள் அனைவரும் மதவாதிகள் தானே! இந்தியா பாரம்பரியத்தை மாற்றும் வகையில் ' மதம்' மாற்றும் கூட்டம் தானே" என்று,இது நான் அவரோடு கிறிஸ்துவை பற்றி அறிவிக்கையில் கூறியது,நம்மில் பலரும் இதுபோன்ற விமர்சனங்களை கேட்டிருப்போம்,இவ்வாறு இவர்களை சிந்திக்க வைத்தது யார்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது,அதின் விளைவே இந்த பதிவு.....நிஜத்தில் இயேசு மத மாற்றத்தை விரும்பும் தேவனா? இந்த சிந்தனைகள் எதனால் உண்டானவை,சிலர் செய்த தவறால்,ஆசீர்வாதம் பேர கிறிஸ்தவன் ஆகவேண்டும் என்ற வேதத்திற்கு மாறுபாடான போதனை இதன் விளைவே இந்த அவல நிலை,இயேசப்பா ஒருபோதும் அவ்வாறு கூறவில்லையே,என் ஆசீர்வாதம் கிறிஸ்தவனுக்கே என்ற அவர் கூறவும் மாட்டார்.இதற்கு முதலில் யார் கிறிஸ்தவன் ? என்ற தெளிவு வேண்டும்,எனது அடுத்த பதிவில் அதை விளக்குகிறேன்.
முதலாவது கிறிஸ்தவம் மதம் அன்று,அது வாழ்க்கைகான நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு ஜிவனுக்கான வழி,மெய்யான தேவனை அடையாளம் காட்டும் கருவி,சில வீணர்களின் மதியீனத்தால் மதமாக்கப்பட்டது,வேதம் தரும் தெளிவை சற்று கவணியுங்கள்
"எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்."
எரேமியா 4:14
இதில் எங்கே மதமாற்றம் வந்தது,இரட்சிக்கபட இருதயத்தை சுத்தபடுத்து என்கிறது சத்தியம்,புறம்பான இந்த இரத்தமும்,சதையும் மறுவதை இயேசப்பா விரும்பவில்லை மாறாக இருதயம் சுத்தமாகனும்,சிந்தனைகள் பரிசுத்தபடனும்,பாவத்திற்கேதுவன சூழ்நிலையில் மன மாற்றம் அடையனும் இதை தான் விரும்புகிறார்.....நொருங்குண்ட இதயத்தோடு கூப்பிட்டால் காப்பாற்ற உடனே வருவார்.
நண்பர்களே மதம் என்ற சொல்லில் அடங்குவது கிறிஸ்தவம் அல்ல,வாழ்க்கை முறையில் வெளிபடுவதே மெய்யான மனமாற்றம் அதுவே கிறிஸ்தவம்.
ஆமென்! அல்லேலூயா!😊
Comments
Post a Comment