புது வாழ்வு தந்துவிட்டார்😊
கிறிஸ்து இயேசுவின் பிரியமான தேவ பிள்ளைகளே,உங்களை இந்த கட்டுரைக்குள் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி,புது வாழ்வு என்ற இந்த தலைப்பு ஆழமான அர்த்தம் உடையது.
பாவம் செய்த அல்லது செய்யும் யாவரும் பிசாசானவனால் உண்டானவன் என்கிறது வேதம்,அந்த பாவ வாழ்விற்கு சிலுவையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது,இதை முழு மனதோடு விசுவாசித்து ஏற்றுகொண்ட ஒருவனும் கெட்டுபோகாமல் இரட்சிப்பை பெற்று கொள்வோம்,உங்களுக்குள் சந்தேகம் எழும்பலாம் அதெப்படி என் பாவம் மன்னிக்கபட்டது என்று அறிவது என்று,அது ஒரு அனுபவம் அந்த இரட்சிபின் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தை இல்லை.....நம்ம இயேசப்ப நம்ம பாவத்த கிழக்கிற்கும்,மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் மன்னிப்பாங்களாம் உங்களால் கூற முடியுமா கிழக்கிலிருந்து மேற்கு எவ்வளவு தூரம் என்று,முடியாதல்லவா நம் பாவத்தின் வேர் சிலுவையில் முறிக்கப்பட்டது,அவர் சிந்திய பரிசுத்த இரத்தம் பாவமற நம்மை கழுவியது,அவரது ஆணி பாய்ந்த கரம் நம்மை தழுவா காத்திருகிறது,நம்மில் எத்தனை பேர் ஆயத்தமாக இருக்கிங்க அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டு ஒப்புரவாக....மீண்டும் பாவத்தில் விழுந்துவிடுவோம் என்ற பயம் வேண்டாம் அதற்குதான் நமக்கு ஆவியானவர் அருளப்பட்டு உள்ளார் அவர் செல்லமாக கண்டிக்கும்போது கேட்டு நடந்து கொள்வோம் என்றால் பாவம் நம் வாசல் படியை கூட நெருக்காதாம்,புதியது எப்பொழுதும் பழையதைவிட சிறந்ததாகவே இருக்கும்,ஒப்புக்கொடுப்போம் ஒப்பரவு ஆவோம்.
ஆமென்! அல்லேலூயா!🤗😇
Comments
Post a Comment