யார் நீதிமான்?😊

கிறிஸ்து இயேசுவின் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,இயேசப்பாவின் சமாதானமும் இரக்கமும் உங்கள் அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக-ஆமென்
இன்றைய தலைப்பு சற்று வித்தியாசமானது என்றே சொல்லலாம் காரணம் இவற்றை நடைமுறை படுத்துவது சற்று கடினமான காரியம்,ஆனால் கவலை வேண்டாம் நம்மை நன்மையின் பாதையில் நம் கர்த்தாதி கர்த்தர் நடத்தி செல்வார்,
நீதிமான்-இந்த சொல் யாரை குறிக்கும்,எவன் ஒருவன் நீதியான காரியங்களை செய்கிறானோ  அவனே நீதிமான்,அல்லது நீதியை நிலை பெறசெய்பவன் என்று விளக்கம் தரலாம் அவ்வாறு விளக்குவோமேயானால் எது நீதி என்ற கேள்வியும் எழும்பும் அல்லவா,இந்த இரண்டு காரியங்களையும் ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் இந்த பதிவில் காணலாம்.

எது நீதி?:
பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் நீதியை நிலைநாட்ட மனதிற்குள் எண்ணம் கொள்ளும் ஆனால் அதை நடைமுறைபடுத்த பெரிதும் தயங்கும்,இந்த வகையில் பார்போமேயானால் ' நீதி' என்பது இந்த சூழலில் மாயை,நம் தேவனுக்கு முன் நீதி என்று வேதம் எதை கூறுகிறது என்று பார்கலாமா

' அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.'

ஆதியாகமம் 15:6

இதில் அந்த அவன் என்ற சொல் குறிப்பிடும் மனிதன் 'நோவா' அவனது வரலாறு நமக்கு புதியது இல்லை,ஆனால் தேவன் பார்வையில் அவன் நீதிமான் ஆனதிற்கு காரணம் அவனது நற்கிரியைகள் அல்ல,மக்கள் மத்தியில் அவன் சம்பாதித்த நற்பெயர் என்றும் வேதம் குறிப்பிடவில்லை,மாறாக அவன் தேவன்பால் கொண்ட 'விசுவாமே' அவனை நீதிமானக தேவன் முன் நிற்க செய்தது,அத்தகைய விசுவாசமே நம்மை இரட்சிக்கும்,அதுவே தேவனுக்கு நீதியும் கூட.

' நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.'

யோபு 17:9

நீதிமானின் பண்புகளில் ஒன்றை இந்த தேவ வார்த்தை குறிப்பிடுகிறது,நீதிமான் தான் செய்யும் நீதியையும் அதனால்
 பரலோகத்தில் அவனுக்கு கிடைக்க போகும் பரம பொக்கிஷத்தையும் நன்கு அறிந்தவன்,எனவே அந்த வழிகளை அவன் நன்கு பிடித்துக் கொள்வோம்,அதில் பின் வாங்க மட்டான்.

'கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.'

சங்கீதம் 11:7

நமது கர்த்தர் நீதியுள்ளவர் தமது சாயலாக நம்மை படைக்க விரும்பினார்,ஆனால் நமது செயல்கலால் நாம் அவருக்கு தூரமானோம் ,ஆனால் தேவன் நாடுவது செம்மையான வழிகளையே,

' அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.'

யோவான் 16:8

தேவனுக்கேற்ற நீதியை குறித்த தெளிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இயேசப்பாவின் விருப்பம்,ஆகவேதான் நாம் திக்கற்றவர்களாக இராதபடிக்கு நமக்குள் ஒரு ஆலோசகராக,தேற்றவாளனாக எல்லா மகியைக்கும் சொந்தகாரர் வாசமானார்,அவர் நம்மில் வசிக்கும் உயிருள்ள தேவன்,அவரது கண்டிப்பின் சப்தம் நம்மில் எழும்போது கீழ்படிந்தோம் என்றால் நாமும் நீதிமான்காளாக ஜிவ புத்தகத்தின் பக்கங்களில் இடம்பெறுவோம்.
ஆமென்! அல்லேலூயா!🤗😇


Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺