மன அழுத்தத்துடன் போராட்டமா?
மாகா அன்பும்,கிருபையும் நிறைந்த இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு சமாதனம் உண்டாவதாக,கிறிஸ்துவின் அன்பு தேவ பிள்ளைகளே,இன்றைய தலைப்பானது உங்களுக்கும் சரி எனக்கும் சரி,வயது வரம்பு இன்றி யாவராலும் சந்திக்கப்படும் ஒரு பிரச்னைதான்,'மன அழுத்தம்' இது பலத்தரப்பட்ட காரணங்களால் வரலாம் சிலருக்கு எதிர்காலம் குறித்தான கவலை,சிலருக்கு வேலையின்மை என சொல்லிக்கொண்டே போகலாம்,பல நாட்களாக ஒரு கவலை நம்மை வாட்டுமானால் நாம் நாளடைவில் மன நோயலிகள் ,இதிலிருந்து விடுபட வேதம் சில வழிகளை காட்டுகிறது அதை ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் கண்டடைவோம்.
முதலில் இயேசுக்கும் இந்த மன அழுத்தம் இருந்தது ,எத்தனை பேர் ஆமோதிப்பிர்கள்...ஆம் தன் மேல் விழுந்த மீட்பின் பணி குறித்த மிகவும் மன கலக்கம் உற்றார் பின் ஏன் அவை அவரை மேற்கொள்ளவில்லை,காரணம் தேவனோடு உண்டான உறவு,நம்மில் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாக காரணம் நம்மை தனிமை படுத்திக்கொள்ளுதல்
'பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல '
ஆதியாகமம் 2:18
நாம் ஒருவகை சமூக விலங்கு,தனிமை நம் சுபாவம் அல்ல ஆகவே முதல் வழி தனிமையை தவிர்க்கவும்,தேவனோடு தனித்திருப்பது வேறு மற்றப்படி முடிந்தவரை கூடி இருங்கள்.
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
லூக்கா 22:44
இதில் இயேசுவின் மனநிலை தெரியும்,அவர் ஆவியில் கலக்கமுற்றார் ஆனால் தேவனோடு கொண்ட உறவு அவரை பலப்படுத்தியது,ஆகவே அந்த உறவில் நிலைத்திருங்கள்.
' உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.'
நீதிமொழிகள் 16:3
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
நீதிமொழிகள் 19:21
ஆகவே நம் யோசனையை கொஞ்சம் குறைப்போம் ,அவர் யோசனையில் பெரியவர்,நமது தேவையற்ற ஆழ்ந்த சிந்தனை நாம் மன அழுத்தம் அடைய வித்திடுகிறது,எனவே கர்த்தரிடம் ஒப்புகொடுக்க பலகுவோம்,மன அழுத்தம் நம்மை மேற்கொள்ளாமல் காப்போம்,தேவ ஆசீர்வாதமும் சமாதானமும் உங்களோடும் உங்கள் சுற்றதாரோடும் என்றும் இருப்பதாக.
ஆமென்! அல்லேலூயா!
Comments
Post a Comment