இரட்சிக்கும் விசுவாசம்👦

கிறிஸ்து இயேசுவின் பிரியமான எனதருமை சகோதர,சகோதரிகளே...இயேசப்பாவின் இனிமையான நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்களும்,சமாதானமும்!
நீங்கள் எனக்காக ஏறெடுக்கும் ஜெபம்,ஆவியானவரோடு என்னை அதிகமாய் உறவாட செய்கிறது,வாசகர்களாக இதை தொடர்ந்து வாசித்து எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.
ஜெபத்தில் விசுவாசம் எவ்வளவு முக்கியம் என்பதை நேற்றைய தலைப்பில் தியனித்தோம் அல்லவா,அதின் தொடர்ச்சியாக 'இரட்சிக்கும் விசுவாசம்'என்னும் தலைப்பில் இன்று தியனிப்போம்,
     விசுவாசம் இரட்சிக்குமா?நீங்கள்
என்ன நினைக்கிறிர்கள் ,நாம் நினைப்பது ஒரு புறம் இருக்கட்டும்,வேதம் என்ன சொல்கிறது என்றால் விசுவாசம்-இரட்சிக்கும்,விசுவாசம்-விடுதலையாக்கும்,விசுவாசம்-தேவனோடு நம்மை ஒப்பரவாக்கும்,அவருடைய பிள்ளைகள் ஆகும் சிலாக்கியத்தை நமக்கு அளிக்கும்,விசுவாசம்-கிறிஸ்துவை பின்பற்றும் பாதையில்..சாத்தானை எதிர்த்து நிற்க உதவும் ஒரு கேடகம்,வியப்பாக இருக்குதா....இருக்கதான் செய்யும்,ஏன் தெரியுமா?

"அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,"

1 பேதுரு 1:8

இந்த விசுவாசம்தான் நம்மை தேவ மகிமையைக் காணப்பன்னும் வல்லமை உடையது,ஆகவேதான் இந்ந விசுவாசம் வியக்கதக்க ஒன்றாக கிறிஸ்தவ வாழ்க்கையில் இருக்கிறது, விசுவாசம் கேள்வியினால் உண்டாகும் என்கிறது பரிசுத்த வேதாகமம்,நாம் கண்பவைகளில் அல்ல அதிலும் மேலான வாக்குதத்தம் பன்னப்பட்ட பரலோகத்தையும் அதின் சொந்தகாரரையும் விசுவாசிப்பதால் நாம் மேலானவர்கள்,அதாவது இயேசப்பாவின் பிள்ளைகள்,பரலோகத்துக்குரியவர்கள் என்கிறது வசனம்,அநேகநரம் இயேசப்பா சுகம் தரும் பொழுது "விசுவாசம் உன்னை இரட்சித்தது,விசுவாசம்-உன் பாவத்தை மன்னித்தது" என்று சொல்ல வாசிக்க காணலாம்....இந்த விசுவாசம் பொன்,பொருளிலும் மேலான செல்வமாம்,அது புடமிடப்படுகைமில்,சோர்ந்து விடாமல் ஜெபித்தால் வாழ்க்கை என்றும் வெற்றியே!
ஆமென்! அல்லேலூயா!😊

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺