ஆவியின் வரங்கள்😇

கிறிஸ்துவில் பியமான அன்பு சகோதர  சகோதரிகளே,இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்,ஆவியின் வரங்கள் ஆயிரம் ஆயிரம்,அவை கணக்கில் அடங்காதவை ஆனால் குறிப்பிட்ட சில முக்கிய வரங்களை வேதம் நமக்கு காண்பிக்கிறது,அவைகளின் தனித்தன்மைகளை சற்று சுருக்கமாக இன்று தியானிக்கலாம்,ஆவியானவர் நம்மை வழிநடத்துவாராக.

1.நவமான மொழிகள்(அந்நிய பாஷை ):

'  நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; '

மாற்கு 16:17

 'அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். '

அப்போஸ்தலர் 2:4

நாம் அடிப்படை விசுவாசிகளாய் ஆவியானவரால் கிறிஸ்துவுக்குள் முத்திரை போடப்படுகையில் நமக்கு கிடைக்கும் வரமே அந்நிய பாஷையில் தேவனை ஆராதிக்கும் வரம்,இது கிறிஸ்தவர்  என்பதற்கான வரமல்ல விசுவாசிகள் என்பதை காட்டும் ஒரு அடிப்படை வரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.விவரிக்கும் வரம்:

"நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; 
அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். "

1 கொரிந்தியர் 14:12,13

இது விசுவாசிகளின் அடுத்த நிலை,தாங்கள் மறைமுகமாய் ஆவியிலே செய்த விண்ணப்பத்தை பிறருக்கு விளங்குமாறு விவரித்து சொல்லும் வரம்,இது அவ்விசுவாசியை தேற்றும் வரமாய் தேவ வார்த்தையை கொண்டு சேர்ப்பதால் பக்திவிருத்தியடைய உதவியாக அமையும்.

3.தீர்கதரிசன வரம்:

'சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். '

1 கொரிந்தியர் 14:39

இது ஊழித்திற்கு நேராக நம்மை நடத்த கூடிய வல்லமையான வரமாகும்,அனைவருக்கும் இது அருளப்படுவதில்லை கர்த்தர் சமூகத்தில் நாள்தோறும் நின்று ,அவருக்கு பிரியமாய் நடந்தது கொள்ளும் சிலருக்கே அருளப்படும் வரம்,இது ஆவியில் தேறுதலை காட்டும்,ஆகினும் கள்ள தீர்கதரிசிகள் குறித்த கவனம் அவசியம்

4.நோய்,பேய் நீக்கும் வரம்:

இது ஒரு விசேசித்த வரம்,தனித்துவம் நிறைந்த அருள் அடையாளங்கள் நிறைந்த வரம்....இதற்கென கர்த்தர் சிலரை தேர்ந்துள்ளார் 
பேதுரு நிழழை தொட்டவர்கள் வியாதி நீங்கி சுகம் பெற்றதையும்,இன்னும் பலர் இயேசுவின் நாமத்தில் பல அதிசயங்கள் நடப்பித்ததும் வேதம் பல இடங்களில் காட்டுகின்றது,இந்த வரத்தால் எழுப்புதல் விதைக்கபடும்,முடிவு சம்பூரனம்.
ஆமென்! அல்லேலூயா!🤗 





Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺