இயேசுவே முன்மாதிரி👍

இயேசு கிறிஸ்துவின் பிரியமான சகோதர,சகோதரிகளே...இயேசுவின் மேலான நாமத்தில் உங்களை வாழ்த்தி தலைப்புக்குள் கடந்து செல்கிறேன் .
இயேசு ஏன் மனுவாக இம்மண்ணில் தோன்ற வேண்டும்,வாக்குதத்தங்களை நிறைவேற்ற மட்டுமா என்று பார்த்தால் இல்லை,அதற்கு மட்டுமே என்றால் தேவ மகிமையிலிருந்து இரங்கி,பாவத்திற்குரிய இந்த சரிரத்தை சுமக்கவேண்டி இல்லை,மனிதன் பொதுவாக அனைத்து தவறுக்கும் காரணம் சொல்லி பழக்கப்பட்டவன்....இது இன்று நேற்று அல்ல ஆதி பெற்றேர் தொடங்கி வழிவழியாய் வந்த மரபு,இதை மாற்றவே பாவம் அறியாத அவர்,பாவமாக்கப்பட்டார்....
ஆம்,பிரியமானவர்களே நம் ஆண்டவர் நமக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார்,இவ்வுலகம் நெருக்குகையில் என்ன செய்யவேண்டும்,பாவத்தையும்..பிசாசின் தந்தரத்தை எவ்வாறு நிர்மூலமாக்க வேண்டும் என்பனவற்றை செய்துகாட்டிவிட்டு சென்றுள்ளார்,அவர் மீண்டும் வருகையில் இச்செய்கையில் நாம் வேருண்டவே திருச்சபையையும்,போதகர்களையும் ஏற்படுத்தினார்,எனவே நாம் காரணம் சொல்ல இடமில்லை...

1.பிசாசை மேற்கொண்டார்:

"அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். "

மத்தேயு 4:3,4.

இதில் பிசாசு ஆண்டவரை சோதிக்கமுற்படுகிறன்,அவனுக்கு தக்க பதிலடியை அவர் தேவ வார்த்தைகள் வாயிலாக கொடுப்பதை காணலாம்,அவ்வாறு ஏற்ற வார்த்தையை நாமும் பேச முதலில் அது நமக்கு தெரிந்திருக்கவேண்டும்,அவ்வாறு தெரியவேண்டும் என்றால் வேத வாசிப்பில் கவனத்தோடு இருத்தல் அவசியம்,எனவே முதலாவது நம் ஆண்டவர் கற்றுதருவது  வேத வாசிப்பு.

2.ஜெபம்:

'அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். '

மாற்கு 1:35
சர்வ வல்ல தேவன் இங்கு ஜெபம் செய்தார்,இந்த ஜெபத்தின் தனி சிறப்பு என்னவேன்றல் நாம் தேவனோடு ஐக்கியபட இது ஒரு மிக முக்கிய கருவி,எல்லா கரியங்களுக்கும் இயேசு ஜெபித்தார் என்று வேதத்தில் அனேக இடத்தில் பார்க்கலாம்,எனவே விசுவாச வாழ்வில் ஜெபம் அவசியம்

3.தேவசித்தம் அறிந்து நடத்தல்:

"அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்."

மத்தேயு 16:23

ஆம் இயேசு பூமிக்கு வந்த நாள் முதல் அவர் வாழ்ந்த நாள்வரை தேவ சித்தம் அறிந்து நடந்தார்,அதற்கு இடறாலாய் இருப்பவன் தன்னுடையவனே ஆகிலும் ஆண்டவர் கூறும் மறுமொழி பின்னாக போ,இதுவே நம் பதிலாகவும் அமையவேண்டும்.
இவ்வாறு சிலுவை மரணம் வரையிலும் நமக்கு முன் மாதிரியாக நடந்தது,நாமும் நடக்க தூண்டி,அதற்கு ஒரு துணையாலரையும் அருளியுள்ளார் அவரே சத்திய ஆவியானவர்.....அவர் ஆலோசனையில் நடப்போம்,நன்மை உண்டாகட்டும் .
ஆமென்! அல்லேலூயா!


 

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺