யார் கிறிஸ்தவன்,எது மெய்யான கிறிஸ்தவம்?🙂
கிறிஸ்து இயேசுவின் பிரியமான அன்பு சகோதர,சகோதரிகளே...உங்கள் ஜெப வாழ்வும்,விசுவாச வாழ்வும் கர்த்தருக்குள் இன்னும் அதிகமாய் வளர்ச்சியடைய தேவனை பிரத்திக்கின்றேன்.
கிறிஸ்தவம் மத மாற்றத்தை பற்றிய போதனை இல்லை என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்,உங்களுக்கு அது பயனுள்ளதாகவும் புரிந்துகொள்ள எளிமையாகவும் இருந்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன்,சரி இன்றைய தினத்தில் கிறிஸ்தவ வாழ்வு எப்படிப்பட்டது,யார் கிறிஸ்தவன் என்ற சில கேள்விக்கு,வேத சத்தியத்துடன் விளக்கங்களை பார்ப்போம்.
கிறிஸ்தவன்- அதாவது கிறிஸ்துவாகிய இயேசுவை அறிந்தவன்,அவரை உடையவன்,அவரை எடுத்துரைப்பவன் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்,இதையே வேதமும் உறுதிப்படுத்துகிறது.
' தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.'
ரோமர் 8:9
முதலாவது,கிறிஸ்தவன் என்று தன்னை சொல்பவனிடம் தேவனின் பரிசுத்த ஆவி வாசமாயிருத்தல் அவசியம்;இரண்டாவது அவன் செய்கைகள் மாம்சத்துக்கு ஏதுவாக இல்லாமல்...ஆவிக்குரிய கனிகளுடன் வெளிப்படல் வேண்டும்,இவ்வாறான காரியங்களோ...பரிசுத்த ஆவியோ அவனிடம் இல்லை என்றால் அவன் வெறும் பெயர் கிறிஸ்தவனேயன்றி கிறிஸ்துவுக்குரியவன் இல்லை!
"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,"
கலாத்தியர் 5:22
கிறிஸ்தவனிடத்தில் இத்தகைய கனிகளை காணாதிருப்போமே ஆனால் அவனை விட்டு விளகுவது நலம்,அப்படிபட்ட பெயர் கிறிஸ்தவனை தேவன் விரும்பவில்லை,அவர்களின் மனமாற்றத்திற்காக ஜெபிக்கவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அடுத்ததாக கிறிஸ்தவ வாழ்வு எத்தகையது என்று பாக்கலாம் ;
"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்."
யோவான் 16:33
கிறிஸ்தவ வாழ்வு என்பது ஏதோ சுகபோகமாய் வாழ்வது அல்ல,அது உபத்திரவத்தின் மத்தியில் கட்டப்பட்ட வாழ்வு;இயேசுவினிடத்தில் உலகம் தராத சமாதானம் உண்டு,ஆனால் உலகத்திலோ நமக்கு உபத்திரவம் உண்டு,ஏன் இந்த உபத்திரவம் என்று எண்ணம் தோன்றுகிறதா? சொல்கிறேன் ,அதற்கும் வேதத்தில் அருமையான பதிலுண்டு;
"உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று"
ரோமர் 5:3
நமக்கு பொறுமை உண்டாக,நம் விசுவாசம் புடமிடப்பட இந்த இலேசான உபத்திரவங்கள் தோன்றும்,இது நாம் வேண்டிக்கொள்ளும் காரியத்தை பொறுத்தும்,அதற்கு தேவன் எதிர்பார்க்கும் விசுவாசத்தை பொறுத்தும் வேறுபடும்.
இறுதியாக ஒரு காரியம்,
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. "
மத்தேயு 7:21
இவைகளை கூறியவர் இயேசப்பா,கிறிஸ்தவன் என்பவன் தேவ சித்தத்தை அறிந்துகொள்ள முயல்வான்,அதன்படி நடக்க ஒப்புக்கொடுப்பான்,அதில் இறுதிவரை உறுதியுடன் நடப்பான்....இவற்றுக்கு மாறாக நான் வரந்தோறும்,பண்டிகைதோறும் ஆலயம் செல்வேன்,காணிக்கை செலுத்துவேன்,நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்பவன் தன்னைத்தானே ஏமாற்றி கொண்டு பிறறையும் தடுமாற பன்னுகிறான்.
சிந்திப்போம்...செயல்படுவோம்!
ஆமென்! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment