வாலிபனே...விழித்திரு☺

அருமை இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்
   இன்றைய தினத்தில் ஆவியானவரின் நடத்துதலில் ஒரு தலைப்பை தியனிக்க இருக்கிறோம்....
வாலிப நாட்கள் என்பது மனித வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி,நாம் சிறார்களாய் இருக்கும் வரை நன்மை,தீமை பகுத்தறியும் ஞானம் நம்மிடம் இருப்பதில்லை...பெற்றோரை சார்ந்தே முடிவுகள் எடுத்தோம்,ஆனால் இந்த வாலிப பருவம்தான் நம்மை சுயமாய் முடிவெடுக்கும் தகுதியை அளிக்கும் பருவம்,உடல்-உள்ளம் பக்குவமடையும் அதாவது உயிரியல் ரீதியான மாற்றங்கள் வரும் காலம்,கூடவே சாத்தான் நம்மை வஞ்சிக்கும் காலம்....இதை மனதில் நிறுத்திக்கொள்வோம்!
இயேசுவானவர் இந்த நாட்களில் தான் பிசாசால் சோதிக்கப்பட்டார் என்று வேதம் சொல்கிறது.அனேகர் வேதத்திலும் சரி,வாழ்கையிலும் சரி வீழ்ந்தது இந்த வலிபத்தில்தான்,சிம்சோன் வீழ்ந்தது வாலிப மயக்கதாலே.....தற்போது உள்ள சூழலில் நாம் உலகத்தோடு வாழுகையில் பரிசுத்தத்தை காத்துக்கொள்ள தயங்குகிறோம் அல்லது மறந்து விடுகின்றோம் .
குறிப்பாக இந்த வாலிப நாட்களில் உலக இச்சை,காமவிகாரம்,மாம்ச இச்சை,பொருளாசை முதலான பாவம் நம்மை எளிதில் மேற்கொள்கிறது,இதிலிருந்து விடுபட நம்மால் மட்டும் கூடாது,சரி....தப்பிக்கொள்ளும் வழிகள் என ஆவியானவர் சொல்வதை சற்று கவணிப்போம..

'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே'. 

சங்கீதம் 119:9

ஆம்,நாள்தோறும் தேவ வசனத்தில் தியனமாய் இருந்து,ஆவியானவர் நடத்துதலில் நிலைத்திருக்கும்போது பாவம் நம்மை மேற்கொள்ளாது,மாறக ஜெபத்தால் அது மேற்கொள்ளப்படும்.
 ஆண்டவர் கூறுகிறார்: தீங்கு நேரிடாது;வாதை உன் கூடரத்தை அணுகாது,எப்பொழுது நாம் அவரோடு இசை பத்திரிககையில்
,நாம் கிறிஸ்துவின் அவையங்கள்,உங்கள் அவையங்கள் உங்களுக்கு எதிராக நடக்காதே.....

"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை"

பிரசங்கி 12:1
ஆனால் நாம் நினைப்பது யாரை,படைத்தவரை அல்ல காதல் என்ற பெயரில் சக பாலினத்தாரை....காதல் தவறல்ல அது இந்த பருவத்தில் நமக்கு வேண்டுவதில்லை.எதற்கும் அடிமையாகமல் காத்துக்கொள்ளவேண்டும் செல்பேசியிலும்,கணினி விளையாட்டுக்களிலும் செலுத்தும் விரையமான மதிப்பில்லா நேரத்தை ஆண்டவருக்கு ஒப்புகொடுக்க முன் வருவோம்,யோசேப்பு போல பாவம் நம்மிடம் வருகையில் விலகி ஓடுவோம்,அந்த ஓட்டத்தில் பலவீன படும்போது இயேசப்ப என்னையும் உங்களையும் பார்த்து சொல்கிறார்

"அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்" 

2 கொரிந்தியர் 12:9
எனவே இந்த பலவீனம்,நம்மை மேன்மை அடைய செய்யும்,இதை வெற்றியாய் நாம் கடந்துவிட்டால் பாவம் நமக்கு பயந்து ஓடும்,பரிசுத்தம் நிலைத்திருக்கும்.

ஆமென்! அல்லேலுயா!🤗

Comments

Post a Comment

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺