அதிகாரம் பெற்றவர்கள்😏

கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே,நாள்தோறும் நம்மை திருப்தியாக குறைவின்றி வழிநடத்திச் வருகின்ற இயேசப்பாக்கு நன்றி செலுத்துவோம்,ஆப்கானிஸ்தான் தேசத்தில் நிகழும் கசப்பான மற்றும் கடுமையான சூழல்காக பாரத்தோடு ஜெபிபபோம் என்ற அன்பான வேண்டுகோளுடன் தலைப்புக்குள் செல்லலாம். 
அதிகாரம் என்பது என்ன? எளிமையான விளக்கம் என்று பார்த்தால் நம் அதிகாரத்திற்கு உட்பட்ட யாவும் நமக்கு கீழ்வுள்ளவை என்று அர்த்தம் கொள்ளலாம் சரியா
நமக்கு இயேசப்பா சில அதிகாரங்களை கொடுத்துருகாங்க அது என்னனு பாக்கலாமா,

 ' அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்'.

மத்தேயு 10:1
கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டவர்களா நீங்கள்,உங்களுக்கும் எனக்கும் தான் இந்த அதிகாரம்....இயேசப்பா நாமத்திலே இவற்றை நாம் செய்யலாம்,இதிலிருந்து ஒரு விசயம் புலப்படுகிறது,அசுத்த ஆவிகளுக்கும்,சாத்தானுக்கும் நம்மேல் அதிகாரம் இல்லை,எனவே தேவ வசனம் என்னும் பட்டயத்துடன் அவனை எதிர்த்து நில்லுங்கள் நிச்சயம் சாத்தான் நடுநடுங்கி போவான்,நமக்கு இயேசப்பா இன்னும் ஒரு மேலான வாக்கும் தந்துள்ளார்,அவ்வளவு அன்பும் பாசமும் அவருக்கு நம்மேல் 

'நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'

யோவான் 15:7

எனவே அவருடன் அவரில் நிலைத்திருக்க முயல்வோம்,நாமே அதிகாரம் பெற்ற தேவ சந்ததி
ஆமென்! அல்லேலூயா!🤗




Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺