பட்சிக்கும் அக்கினி🔥
கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள அன்பு தேவ பிள்ளைகளே,ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் வருகை மிகவும் சமிபமாக இருக்கிறது எனவே ஆயத்தபடுவோம்;கர்த்தருக்கென்று ஒரு கூட்ட ஜனத்தை ஆயத்த படுத்துவோம் ! உலகமும் அதின் மேன்மையும் மாயை என்பதை உணர்ந்து பயணிப்போம்,ஆம் அன்பிற்குரியவர்களே எல்லாம் மாயையே,தேவ பிள்ளைகளாகிய உங்கள் தேவைகளை பரம தகப்பன் அறிந்துள்ளார்,உங்களுக்கென்று முன் குறித்த ஒன்றையும் எவராலும் தடை செய்ய இயலாது - ஆமென்
சரி ,இன்றைய தினத்தில் கிறிஸ்தவ பிள்ளைகளாகிய நமது வாழ்க்கையில் தேவன் எவ்வாறு அக்கினியாகவும்,அரணாகவும் இருக்கிறார் என்பதை குறித்து ஒருசில நிமிடங்கள் தியனிப்போம்,தேவ வெளிச்சத்தை சுதந்தரித்து கொள்வோம்.சரி வேத புத்தகத்தை திருப்பி இந்த வசனத்தை என்னோடு எடுத்துக்கொள்ளுங்கள்,
" நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே".
எபிரேயர் 12:29
ஏன் தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார் என்று என்றாவது சிந்தித்திருகிறிர்களா? இந்த சிந்தனை என் உள்ளத்தில் எழுந்த போது இந்த காரியங்களை ஆவியான தேவன் வெளிப்படுத்தினார். யாத்திராகம புத்தகத்தை நாம் அனைவரும் வாசித்திருப்போம் அதில் தேவன் வனந்திரத்தில் இஸ்ரவேலரை எவ்வாறு நடத்தி வந்தார் என்று காணலாம்,ஆம் எனதருமை சகோதர சகோதரிகளே உங்கள் வாழ்க்கையும் வனந்திரமாய் தோன்றுகிறதா?,சோதனை எகிப்தியரை போல பின் தொடருகிறாதா? கவலை வேண்டாம் 'இன்று காணும் எகிப்தியரை இனி காணமாட்டிர்கள்'என்று கர்த்தர் வாக்குதத்தம் பன்னுகிறார்,நம்முடைய தேவன் நீடிய சாந்தமுள்ளவர்,இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்தவர், அவர் சடுதியில் யார் மேலும் கோபம் கொள்பவர் அல்ல! இது அவரது ஒரு பரிமாணம் என்றால்,அவரது இன்னொரு முகமோ பாவத்தை கண்டு எரிச்சல் அடைகிற தேவன்,பரிசுத்த அக்கினிமயமானவர், அந்தகாரம் நம்மை சூழ்ந்து,திகில் நெருக்கும் தருணங்களில் அவர் அக்கினி ஸ்தம்பமாக நமக்கு முன்பாக செல்கிறார் என்பதை மறவாதிர்கள்,உங்கள் இருள் வெளிச்சமாக மாறும்,நீங்கள் கர்த்தருக்கென்று செய்யும் ஒவ்வொரு நீதியான காரியங்களும் பட்ட பகலைபோல விளங்கப்பன்னுவார்; கலங்கவேண்டாம்!
"பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? "
எபிரேயர் 12:25
எனவே அவரது சத்தத்துக்கு எப்போதும் செவிகளை திறந்து வையுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள்,ஆவியானவரின் அக்கினி உங்களுக்குள் அச்சாரமாய் இருப்பதாக,அவ்வாறு இருந்தால் மட்டுமே பாவம் உங்களை மேற்கொள்ளாமல் அந்த அக்கினி பட்சிக்கும்,நாள்தோரும் ஆவியில் நிறம்பும் அனுபவம் இருக்கவேண்டும். அவரது அக்கினிதான் தேசத்தில் எழுப்புதலை கட்டளையிடும்,பாபிலோனில் எழுப்புதல் அக்கினி சூழையில் இருந்து வந்தது;புதிய ஏற்பாட்டின் எழுப்புதல் மேல்வீட்டு அறையில் இறங்கி வந்த அக்கினி அபிசேகத்தில் ஆரம்பமானது;நமது இந்திய தேசத்துக்கும் அதை அக்கினிதான் எழுப்புதல் கொண்டுவர ஆயத்தமாக உள்ளது,அதை உணர்ந்து செயல்படுவோம் ஆண்டவராகிய இயேசப்பாவின் வருகையில் அவரை எதிர்கொண்டு போக தகுதிபடுவோம்.
ஆமென் ! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment