மூன்று புருஷர்கள்☺

கிறிஸ்து இயேசு தரும் சமாதானம் உங்கள் அனைவரோடும் என்றென்றும் தங்கி இருப்பதாக,பிரியமான சகோதர சகோதரிகளே சமிப காலமாக நமது தேசத்திலும் சரி,இந்த உலக தேசங்களிலும் சரி,தேவனின் கோபாக்கினையை தூண்டும் அநேக காரியங்கள் அவ்வப்போது அரங்கேறிகொண்டே இருந்தாலும்...இந்த காரியங்கள் ஒரு சங்கிலி போல தொடருகையில் அவர் கோபம் வெளிப்படும்,பரிசுத்த வேதாகமம் தேவனின் கோபம் நான்கு வகையில் வெளிப்படும் என்று கூறுகிறது:
    1.கொள்ளை நோய்
    2.பட்டயம்
    3.பஞ்சம்
    4.கொடிய மிருகங்கள்     

இத்தகைய காரியங்களுக்கு தேசமானது ஒப்புவிக்கப்படுமானால் அங்கு தேவ கோபம் இருப்பதை அறிந்து கொள்ளலாம் ,தற்போது வந்துள்ள 'கொரோனா'  பெருந்தொற்றையும் அவ்வாறே என்னலாம்,இவ்வாறு தேவ கோபம் எழும்போது தப்பிப்பது எப்படி என்றும் வேதத்தில் தெளிவாக தேவன் எழுதி கொடுத்துள்ளார்,ஆம் பிரியமான சகோதர,சகோதரிகளே இன்று நாம் பார்க்க போகும் பதிவும் அதை குறித்தே! சரி,ஆரம்பிக்கும் முன் சற்று உங்கள்   வேத புத்தகத்தை திறந்து வைத்து கொள்ளுங்கள்,பின் நான் பதிவிட்டுள்ள வசனங்களை என்னுடனே நீங்களும் தியானம் செய்யுங்கள்,உங்களுக்கும் சில வெளிப்பாடுகள் கிட்டும் அவற்றை கீழே கருத்துக்களாக பதிவிடவும்.இன்று தியானத்திற்கு ஆவியானவர் என்னை எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்திலுள்ள சில வசனங்களை கொண்டு பேசினார்,

" அப்பொழுது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்". 

எசேக்கியேல் 14:14

இந்த அப்பொழுதுக்கு முன்னும்,பின்னும் வாசித்தோமானால் தேசம் தேவனின் கோபத்தில் எவ்வாறு பாழாய்போகும் என்பதை அறியலாம்,ஆனால் இங்கு மூன்று புருஷர்களை தேவன் குறிப்பிடுகிறார்;அவர்கள் நோவா,தானியேல்,யோபு என்பவர்களே ஆனால் இங்கு ஒரு விஷயம் கவனிக்க வேண்டும் இந்த தீர்தரிசனம் எசேக்கியேலுக்கு உரைக்கப்பட்ட காலக்கட்டம் இவர்கள் மூவரும் கர்த்தருக்குள் நித்திரையடைந்திருந்த காலக்கட்டம்,பின்பு தேவன் இவர்கள் மூவரையும் ஏன் குறிப்பிட்டுள்ளார் என்று பார்த்தோம் என்றால் முன்று பேரின் பண்பு நலன்களே!
ஆம்,பிரியமானவர்களே இதில் நோவா தேவனோடு சஞ்சரித்த அனுபவம் உள்ளவன்,ஆகையால் தான் உணர்வில்லாத ஜனங்கள் மத்தியில் ஜலபிரலயத்திலிருந்து மீட்கப்பட்டான்.
தானியேல் பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை மூன்று வேலையும் கர்த்தர் சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கும் வாலிபன்,நம்மில் எத்தனை வாலிப மகன்களுக்கும்,பெண் பிள்ளைகளுக்கும் முதலில் ஜெபிக்கும் பழக்கம் இருக்கிறது,கேள்வி குறி தானே!
இறுதியாக யோபு,அவனுக்கிருந்த விசுவாசத்தில் சிறு மணல் அளவு இருந்தால் கூட தேசம் இருளில் இருந்து விடுதலை பெற்றிருக்குமே!
நம்மில் எத்தனை பேர்,"அவர் என்னை கொன்று போட்டாலும், மறுதலிக்க மாட்டேன்" என்று கூற மடியும்,முடியாதல்லவா! 
தேசதின் பாவநிவிர்த்திகாகவும்,விடுதலைக்காகவும் இத்தகைய குணாதிசியங்களை உடையவர்களை தேவன் தேடுகிறார்,ஏன் அது நீங்களும் நானாகவும் இருக்க கூடாது எனவே முலங்கால் படியிட்டு இன்றே அர்பணம் செய்யுங்கள்,தேவன் நிச்சயம் உங்களையும்,என்னையும் எழுப்புதல் வீரர்களாக சத்தானுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்துவார்.

ஆமென்!  அல்லேலூயா!😇🤗

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺