மெய்யாக இரட்சிக்கபட்டிற்களா?🤔
கிறிஸ்துவும் உலகின் இரட்சகருமான இயேசுவின் நாமத்தில் உங்களை இவ்வேத தியனத்திற்கு வரவேர்க்கிறேன்,கிறிஸ்துவின் சமாதானம் உங்களோடும் உங்கள் வீட்டாருடனும் இருப்பதாக.
இரட்சிப்பு-இந்த வார்த்தைக்கு மீட்டல்,திருப்புதல் என்ற அர்த்தங்களும் உண்டு,இது நாம் பாவத்திலிருந்து மீட்கபட்டதை,ஒரு மனமாறுதலைக் குறிக்கிறது,கிறிஸ்துவை ஏற்று கொண்ட அனைவரும் இரட்சிக்கபட்டார்கள என்றால்,என் பதில் இல்லை!.....
" அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்."
மத்தேயு 22:14
நாம் எல்லாரும் இயேசப்பாவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டபோது அழைக்கப்பட்டிர்கள்
அதற்கு அடையாலமாய் பரிசுத்த ஆவி என்னும் அச்சார முத்திரை கொடையாய் நமக்கு அருளப்பட்டார்.
"அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."
எபேசியர் 4:30
எனவே மீட்பு கடந்து வந்தது நமக்குள்,ஆனால் ஆவிக்குரிய கிரியை செய்ய அவருக்கு இடம் தருகிறோம,சற்று சிந்திப்போம்....ஆம் என்றால் நம்மை கொண்டு எழுப்புதல் வந்திருக்கனுமே ...ஆதி திருச்சபை அடையாளம் நிகழுதா? இல்லை!
பின் என்ன குறை,நாம் வரங்களையும்,ஆசீர்வாதங்களை தேடும் அற்பர்களாய் இருக்கிறோம
,அழைக்கபட்டும்,தெரிந்துக்கொள்ளபடவில்லை,காரணம் அற்பணிப்பு இல்லை,
'நாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் '
அவ்வாறு நாம் இலவசமாக பெற்ற இந்த மீட்பின் சந்தோசத்தை பகிர முன்வருவோம்,ஆவியனவர் நம்மை நடத்துவாராக.
ஆமென்! அல்லேலுயா!😇🤗
Comments
Post a Comment