விசுவாசத்தின் மேன்மை😇
கிறிஸ்து இயேசுவின் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே,இம்மட்டும் நம்மை கிருபையாய் நடத்திய இயேசப்பா இனியும் நடத்த வல்லவராய் இருக்கிறார்,அவரே நம் உயர்ந்த அடைக்கலமும்,நம்பத்தக்க பரமதகப்பனும் ஆவார்-ஆமென்
கிறிஸ்தவ வாழ்கை என்பதின் அடிப்படை வேர் 'விசுவாசம்'
இன்றியமையாத இந்த விசுவாச வாழ்கையில் கிறிஸ்துவையும் அவர்மேல் நாம் கொண்ட விசுவாசமும் ஒருபோதும் மறக்கூடாது,இதைத்தான் நம் ஆண்டவர் சிலுவை மரண மட்டும் கற்றுத் தந்தார்,ஆனால் நம் வாழ்வில் தற்போதைய நிலை என்ன?
ஆதி திருச்சபையில் இருந்து,அருளடையாலங்கள் நிகழ செய்த அந்த ஆணித்தரமான அடிப்படை விசுவாசம் எங்கே....நம்மிடம் இயேசு மலைப்போன்ற விசுவாசத்தை எதிர்பார்க்கவில்லையே,துளியும் சந்தேகம் அற்ற கடுகளவு விசுவாசம் தான் எதிர்பார்க்கிறர்,அது நம்மிடம் இருக்கிறதா சற்று நிதானிப்போம்.
'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.'
எபிரேயர் 11:1
இவ்வாறு வேதம் விசுவாசத்தை விவரிக்கிறது, நாம் கிறிஸ்துவை காணவில்லை என்றாலும் ஆவியானவர் தரும் உறுதியினாலும்,வேதவசனத்தின் சாட்சியாலும் நமது விசுவாசம் நிலைத்திருக்கிறது,இதில் நாம் இறுதிவரை நிலைத்திருக்கும் போது நமக்கு ஜிவகிரிடமும்,வாக்கு அளிக்கப்பட்ட நித்திய ஜிவனையும் சுதந்தரித்துக்கொள்வோம்,
"இயேசு: காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். "
யோவான் 20:29
நம் ஆண்டவர் இயேசப்பா நம்மை பாக்கியவான்கள் என்கிறார்,ஆம் இந்த விசுவசத்தில் மாறாமல் இருப்போம்.
ஆமென்! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment