வாழும் சாட்சிகள்🙄

கிறிஸ்துவுக்குள் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே எனது பதிவுகளை அன்றாடம் வாசிக்கும் அனபிற்குரிய வாசகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,இன்றைய பதிவில் கிறிஸ்தவ வாழ்க்கை எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற சில காரியங்களை வேதத்தின் உதவியுடன் சுருக்கமாக தியனிப்போம்.

முதலாவது:உடை மற்றும் ஒப்பனை 

" எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்."

1 கொரிந்தியர் 6:12
பவுல் ஏன் இவ்வாறு கூறுகிறார் என்று சிந்திப்போமானால் நாம் உலகிற்கு உரியவர்கள் அல்ல என்பதே காரணம்,நாம் கிறிஸ்துவின் சாயிலை தரித்தவர்கள்,'உலகிற்கு ஒத்த வேஷம் தரிகாதே' என்று வேதாகமம் நம்மை கண்டிக்கிறது ,நாம் அணியும் ஆடையோ,ஆபரணமோ கிறிஸ்தவன் அல்லாத ஒருவரை இடறலடைய செய்யும் என்றால் அது நமக்கு தகுதியற்றதே!

இரண்டாவது:செய்கைகள்

"அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்."

ரோமர் 6:11
நாம் பாவத்திற்கு மரித்தவர்கள்,அவரின் சாயல்,அவர் நமக்கு முன்மாதிரி,எனவே நம்மிலும் நம் செய்கையிலும்  அவரது சாயல் வெளிப்பட வேண்டும்,அப்படியிருக்கையில் நாம் உலகத்தார் போல கழியாட்டங்களில் ஈடுபடலாகது,அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு நாம் தான் வாழும் சாட்சிகள் என்பதை மனதில் நிறுத்தி வாழ முற்படுவோம்,இயேசப்பா நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்! அல்லேலூயா! 

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺