கண்டித்து உணர்த்துவார்🤓
கிறிஸ்து இயேசுவின் அன்பின் மழையில் அன்றாடம் நனைந்து,அவரது அரவணைப்பில் மகிழும் அன்பு சகோதரனே,சகோதரியே....உலக இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் சமாதானமும்,சந்தோசமும் உண்டாவதாக- ஆமென்
என் பதிவுகளை அன்றாடம் வாசித்து எனக்கு பெரிதும் பக்க பலமாக இருக்கும் எனதருமை நண்பர்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,தேவன் உங்கள் காரியங்களை வாய்கப்பன்னுவாராக,எனது ஜெபம் என்றும் உங்களுக்காக இருக்கும்.
இன்றைய தலைப்புடன் இந்த தொடர் நிறைவடைகிறது,வேறொரு தலைப்புடன் நாளை தியனிப்போம்,சரி வாருங்கள் தலைப்புக்குள் செல்வோம்.
கண்டிப்பார்;உணர்த்துவார்:
ஆவியானவர் நமக்கு ஒரு நல்ல தோழன்,நாம் தவறு செய்கையில் நம்மை தட்டிக்கொடுப்பவன்,நமக்கு நண்பன் போன்று தோன்றினாலும் அவன்தான் நமக்கு மிக பெரிய சத்ரு,நாம் தேவ சித்தத்திலிருந்து விலகி கேட்டுக்கு நேரான வழியில் பாதாளம் செல்ல சாத்தான் வைத்த கண்ணிதான் அத்தகைய ஆலோசனை,இவ்வாறு நாம் பலமுறை தவறும்போது நம்மை நேர்வழி படுத்துவதே ஆவியானவர் நமக்குள் இருப்பதின் தலையாய நோக்கம்.
"அவர் (ஆவியானவர்)வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். "
யோவான் 16:8
1.அவர் கண்டிக்கும் முறையை மேலே உள்ள தேவ வார்த்தைகள் காண்பிக்கின்றன,முதலாவது பாவம் என்றால் என்ன? என்னும் தெளிவை தருவார்,மன சாட்சியை உயிர்பிப்பார்,பல சமயம் இதெல்லாம் பாவமே இல்லை என்று பிசாசால் நாம் வஞ்சிக்கப்பட்ட பாவத்திற்கு நம்மை விலகும்படி கண்டிப்பார்.
2.நாம் செய்யும் காரியங்களில் உள்ள நீதி,அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்,நம் நிலையை நமக்கு விளங்கப் பன்னுவார்,நீதியின் பாதையை பற்றிக் கொள்ள உறுதுணையாக இருப்பார்
3.இறுதியாக நியாயத்தீர்ப்பு குறித்த தெளிவை தருவார்,நித்திய ஜீவனுக்காக நம்மை ஆயத்தமாக்குவார்,
இவ்வாறு நம்மை பலப்படுத்தி,சீர்படுத்தி,கண்டித்துரைத்து,பாவத்திலிருந்து விடுவித்து,அதற்கு மீண்டும் திரும்பாமல் நம்மை பாதுகாப்பார்,அவரது ஆலோசனை பொன்னிலும் மேலானவைகள் அவற்றை பின்பற்ற ஒப்புக்கொடுப்போம்.
ஆமென்! அல்லேலூயா!🤗😇
Comments
Post a Comment