மேலானவைகளை நாடுங்கள்😎
கிறிஸ்து இயேசுவில் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே,அருமை இரட்சகராம் இயேசு நாமத்தில் உங்களுக்கு சமாதானமும்,மன மகிழ்ச்சியும் உண்டாவதாக- ஆமென்
இன்றைய தினம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்,குடிமகள்க்கும் மிகவும் சிறப்புவாய்ந்த நாள்,இனிய 75 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்,நண்பர்களே....நம் நாடு பேரளவில் சுதந்திரம் பெற்றிக்கிறதே அன்றி இன்றும் பல அடிமைதனம் இன்றும் நம்மை வதைக்கிறது,செல் போன் மோகம்,ஏழை பணக்காரன் வேற்றுமை,சாதி மத கொடுமை என சொல்லிக்கொண்டே போகலாம் இதற்காக ஜெபிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை,அதைத்தான் ஆண்டவரும் விரும்புகிறார்.
இரட்சிப்பின் அனுபவம் பெற்று பரிசுத்த இரத்தத்தால் பாவம் நீங்க கழுவப்பட்ட நாம் அனைவருமே இயேசப்பாவோட செல்ல பிள்ளைகள் அப்படி இருக்க,இந்த உலகில் இருக்கும் அழிந்துபோகும் அற்ப பொருட்களின் பின் நாம் செல்லலாம,சற்று யோசிப்போம்...வேதம் இவ்வாறு கூறும்:
'பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.'
கொலோசெயர் 3:2
பூமியில் நிலையானதொன்றும் இல்லை,ஆனால் நமக்கென்று நித்தியமான பொக்கிஷம் பரத்தில் உண்டு,அது என்றும் நிலைத்திருக்கும்,எனவே தேவைக்கு மிஞ்சிய பொருளாசை வேண்டாம்.
நாம் ஏன் இவ்வாறு பொருள்மீதோ பணத்தின்மீதோ ஆசை கொள்ளக்கூடாது ஏனெனில்,
'தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. '
கொலோசெயர் 3:10
நாம் எல்லாம் பாவத்திற்கு மரித்தவர்கள்,புதிய சாயல் அதுவும் நம்மை படைத்தவர்க்கு ஒப்பான சாயலை பெற்ற நாம் கீழானவைகளுக்கு ஏங்க தேவையில்லை,நம் தேவையை சந்திக்க தேவன் வல்லவர்- ஆமென்
" அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."
யோவான் 6:27
அழிவில்லாமைமான நிலையான பொக்கிஷம் உண்டு அதற்கு பிராயாசபடுவோம்,இறைவேண்டலில் தரித்திருப்போம்,இயேசப்பா நம்மை தாங்குவார்.
ஆமென்! அல்லேலூயா!😊
Comments
Post a Comment